மொபிலியோ - பெரிய குடும்பங்களுக்கான கார். நீண்ட தூரப் பயணத்தில் மொபிலியோ எப்படி இருக்கிறது? நால்வழிச் சாலைப் பயணங்களில், பெரும்பாலும் காரின் உண்மையான சாதகபாதகங்களைக் கணிக்க முடியாது. எனவே, மலையும் மலையைச் சார்ந்த இடமுமாக இருக்க வேண்டும் என, கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் தலைநகரான கல்பற்றாவைத் தேர்ந்தெடுத்தோம். கல்பற்றா, பெரிய அளவில் சுற்றுலாவுக்குப் பிரபலம் இல்லை என்றாலும், மிக முக்கியமான இயற்கைச் சுற்றுலாத் தலங்கள்கொண்ட மாவட்டம்.

திருப்பூரில் டெக்ஸ்டைல் பிசினஸ் செய்துவரும் பிரபு, ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் பயணத்துக்காக ஆயத்தமாக இருந்தார். கோவையில் காத்திருந்த நம்மை ஏற்றிக்கொண்டு, ‘‘இவரு நம்ம ஃப்ரெண்டு சதாசிவம்’’ என அறிமுகம் செய்துவைத்து காரைக் கிளப்பினார்.

“எப்படி இருக்கிறது மொபிலியோ?” என்றதும், உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார் பிரபு. ‘‘2009-ம் வருஷம் ஃபோர்டு எண்டேவர் வாங்கினோம். இன்னைக்கு வரைக்கும் செமையா உழைக்குது. பிறகு செவர்லே பீட் வெச்சிருந்தோம். அதைக் கொடுத்துட்டுத்தான் ஹோண்டா மொபிலியோ வாங்கினோம். எண்டேவரோட மொபிலியோவை கம்பேர் பண்ண முடியாதுங்க. ஆனா, ஹோண்டா காரின் தரம் இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருக்கலாம். மொபிலியோவுல முக்கியமான பிரச்னை, ‘ஏ’ பில்லர் ரொம்ப அகலமா இருப்பதுதான். நம்ம ஊர் ஹைவேஸுக்கு ஓகே. மைலேஜும் நல்லா கிடைக்குது. ஆனா, கேரளாவில் ரோடுகள் எல்லாமே நொடியாத்தான் இருக்கும். திருப்பும்போது ஏ பில்லர் ரோட்டை முழுசா மறைக்குது. டீசல் இன்ஜின் பிக்-அப் கொஞ்சம் சுமார். கொஞ்சம் கியரை அட்ஜஸ்ட் பண்ணி ஓட்டுனா, அது தெரியாது. ஆனா, மைலேஜ் கொறைஞ்சுடும்!’’ என்றார்.

ஊட்டி வழியாக கல்பற்றா செல்வது சுலபமாக இருந்தாலும், நீலகிரி மலைத் தொடரில் ஏறி இறங்க வேண்டும். கிளம்புவதற்குத் தாமதம் ஆகிவிட்டதால், மாலை நேரத்தில் இந்தச் சாலை வசதியாக இருக்காது என நண்பர்கள் அட்வைஸ் செய்ய, மாற்றுப் பாதையான பாலக்காடு வழியைத் தேர்ந்தெடுத்தோம். ஜிபிஎஸ் ஆன் செய்து கல்பற்றாவுக்குக் குறுக்கு வழி என டைப் செய்ததும், மேப் காட்டிய வழியில் காரைக் கிளப்பினார் சதாசிவம். வாளையாறு செக்போஸ்ட் வரை சாலையில் ஆட்டம் போட்டுக்கொண்டே சென்ற மொபிலியோ, செக்போஸ்ட்டைத் தாண்டியதும் துவங்கிய நால்வழிச் சாலையில் சீறியது.

கேரள மாநிலத்துக்கு, இப்போதுதான் வாளையாறில் இருந்து கொச்சி வரை நால்வழிச் சாலை சாத்தியமாகி இருக்கிறது. பாலக்காடு எட்டியதும் ஜிபிஎஸ் காட்டிய இருவழிச் சாலையில், மார்கழிக் கோலம் போல வளைந்து நெளிந்தபடியே செல்லும் கோழிக்கோடு நெடுஞ்சாலையில் மன்னார்காடு, பெருந்தல்மன்னா, மலப்புரம், மஞ்சேரி, அரிக்கோடு, முக்கம் ஆகிய ஊர்களைக் கடந்ததும் தாமரைச்சேரி என்ற ஊரில் கோழிக்கோடு - மைசூர் நெடுஞ்சாலையில் ஏறினோம். வலது பக்கம் திரும்பி அடிவாரம் என்ற இடத்தை அடைந்ததும், முன்னே வயநாட்டின் மலைத் தொடர் உயர்ந்து நின்றது. மலையேறத் துவங்கினோம். மைத்ரி, சுண்டேல் ஆகிய ஊர்களைக் கடந்ததும் கல்பற்றா நகருக்குள் நுழைந்து, முன்பதிவு செய்த விடுதியைத் தேடினோம். அது மெயின் ரோட்டிலேயே இருக்க... பார்க்கிங்கில் காரை நிறுத்தியபோது, காரின் ட்ரிப் மீட்டர் 229 கி.மீ எனக் காட்டியது. விடுதி அறைக்குள் நுழைந்தபோது, நன்றாக இருட்டிவிட்டது.

மொபிலியோவில் ஏழு பேர் பயணிக்கலாம், என்றாலும் கடைசி வரிசை இருக்கைகளில் குழந்தைகள்தான் உட்கார முடியும். இரண்டாவது வரிசையில் மூவர் அமர்ந்தால், கொஞ்சம் நெருக்கிக் கொண்டுதான் உட்கார வேண்டும். ஆனால், இந்தப் பயணத்தில் நால்வர் மட்டுமே என்பதால், வசதியாகப் பயணித்தோம். பாலக்காடு தாண்டியதும் கல்பற்றா வரை டாப் கியருக்கு வரவே முடியவில்லை. அவ்வளவு வளைவு நெளிவுகள். ஆனால், ஓட்டுவதற்கு மிக வசதியாக இருந்தது மொபிலியோ. அதேபோல், பாடி ரோல் அவ்வளவாக இல்லை. மிதப்பதுபோல இருந்தது ஆச்சரியம்.

கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 2,500 அடி உயரத்தில் அமைந்திருக்கும் வயநாடு மாவட்டத்தில், வெயில் சுடவில்லை. அடுத்த நாள் சுற்றிப் பார்க்க ஆயத்தமானபோது, பார்க்க வேண்டிய இடங்கள் என மொத்தம் 32 இடங்களைச் சொல்கிறது கேரள சுற்றுலாத் துறை. இவற்றில் முக்கியமானவை என்றால், செம்பாறைச் சிகரம், இடைக்கல் குகைகள், குருவதீப்ஸ், திருநெல்லி கோயில், முத்தங்கா விலங்குகள் சரணாலயம், பூக்காடு ஏரி, சங்கிலி மரம், லக்கிடி காட்சி முனை, சமணர் கோயில்கள் எனச் சொல்லிக்கொண்டே போகலாம். லக்கிடி காட்சி முனையில் இருந்து கேரளாவின் பசுமைப் பள்ளத்தாக்கில் இருந்து வரும் ஈரக் காற்றைச் சுவாசிக்கலாம். பூக்காட்டில் இருக்கும் சிறு ஏரியை அவ்வளவு சுத்தமாகப் பராமரிக்கிறார்கள். ஏரியைச் சுற்றி நடைபாதை, பழங்குடியினரின் கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடிகள், படகு சவாரி என ரம்மியமாக இருக்கிறது பூக்காடு ஏரி.

கோழிக்கோடு - மைசூர் நெடுஞ்சாலையில் வைத்ரி அருகே இருக்கும் ‘செயின் ட்ரீ’ கதை படுசுவாரஸ்யமானது. சங்கிலித் தொடர்போல இந்த மரம் இருக்கும்போல என நினைத்துக்கொண்டு, மரத்தைத் தேடி அலைந்தோம். விசாரித்து இடத்தைக் கண்டடைந்ததும் சப்பென்றாகிவிட்டது. காரணம், மரத்தில் ஒரு இரும்புச் சங்கிலி தொங்கிக்கொண்டிருந்தது. அதுதான் செயின் ட்ரீ. மேலும், இரும்பு கேட் அமைத்து கிட்டத்தட்ட ஒரு கோயில் போல காட்சியளித்த அந்த இடத்தைப் பற்றி, அருகே இருந்த கடையில் டீ குடித்துக்கொண்டே விசாரித்தோம். ‘‘ஆங்கிலேயர் காலத்தில் வயநாட்டில் சாலை அமைக்க முயற்சி செய்துகொண்டிருந்தபோது, அடர்ந்த காட்டில் எந்த வழியும் புலப்படாமல் திணறினார்களாம். அப்போது பிரிட்டிஷ் இன்ஜினீயர் ஒருவருக்கு, இங்கு வசித்த ஆதிவாசி இளைஞனான கருந்தண்டன் என்பவர் சாலை அமைக்க வழி காண்பித்தாராம். பிரிட்டிஷ் அரசாங்கமே வழி தெரியாமல் திணறியபோது ஓர் ஆதிவாசி காண்பித்தான் என்றால், அது அவமானம். மேலும், வழியைக் கண்டுபிடித்த பெருமை தனக்கே சேர வேண்டும் என நினைத்து, அந்த ஆதிவாசி இளைஞனைக் கொன்றுவிட்டானாம் அந்த பிரிட்டிஷ் அதிகாரி. அதன் பிறகு ஆவியாக அலைந்த கருந்தண்டன், அந்தப் பாதையில் செல்லும் பயணிகளுக்குத் தொல்லை கொடுக்க ஆரம்பித்தாராம். இதை அறிந்துகொண்ட மந்திரவாதி ஒருவர், மந்திரங்கள் மூலம் சங்கிலியால் இந்த அத்தி மரத்தில் கருந்தண்டனைக் கட்டி வைத்தாராம். மிக உயரமாக வளர வேண்டிய இந்த மரம், அதனால்தான் வளர்ச்சி இல்லாமல் நின்றுவிட்டது’’ என்று இரு நூற்றாண்டுக் கதையை இரண்டு நிமிடங்களில் சொல்லி முடித்தார் டீக்கடை சேச்சி.

கபினி ஆற்றின் கேரளப் பகுதியில் இருக்கும் குருவா தீவுகள் எனப்படும் குருவதீப் மிக அற்புதமான இடம். 950 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள காட்டை, கபினி நீர் தீவுகளாக்கி வைத்திருக்கிறது. அபூர்வப் பறவைகளையும் விலங்குகளையும் இங்கு காணலாம். சாகசப் படகு சவாரி, கயிறு பாலம், மர வீடுகள் என இயற்கையுடன் இணைந்து சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர் சுற்றுலாத் துறையினர்.

வயநாட்டின் உயரமான மலைச் சிகரம், செம்பாறை. இந்த மலையின் உச்சியில்தான் ‘தங்க மீன்கள்’ படத்தில் வரும் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்...’ பாடல் காட்சி படமாக்கப்பட்டது. கல்பற்றா அருகே மேப்பாடி என்ற ஊரில் இருந்து காட்டுப் பாதையில் ஏழு கி.மீ தூரம் பயணிக்க வேண்டும். அதன் பிறகு மலையில் ஏற சாலை கிடையாது; பாதையும் கிடையாது. கிட்டத்தட்ட தவழ்ந்து ஏறிச் செல்ல வேண்டும். உடன் வனத்துறை ஊழியர் ஒருவர் வருவார். அவர் அழைத்துச் சென்று காண்பித்துவிட்டு மீண்டும் அடிவாரத்தில் வந்துவிட்டுவிடுவார். அதற்குக் கட்டணம் 750 ரூபாய். சிகரத்தின் அடிவாரத்தில் இருந்து செங்குத்தாக மலையில் ஏறினால், பாதியளவு மலையில் ஒரு சமவெளி... அங்கே இயற்கையாக இதய வடிவில் உருவான சிறு ஏரி. இவ்வளவு உயரத்தில் மொத்தப் படக் குழுவினரும் ஏறி, பாடல் காட்சியை படமாக்கியது பெரிய சாதனைதான் என்கிறார்கள். மலையேற முடியாமல் செம்பாறைச் சிகரத்தின் அடிவாரத்தில் இருக்கும் காட்சி முனை கோபுரம் வரை சென்று, சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்புவோரும் உண்டு.

மேப்பாடியில் இருந்து கூடலூர் 58 கி.மீ என ஜிபிஎஸ் காட்டியது. சேரம்பாடி, பந்தலூர், நாடுகாணி வழியாக கூடலூர், ஊட்டி தாண்டி கோவையை எட்டியபோது, இரவு ஆகியிருந்தது. அலுக்காத பயண அனுபவத்தைத் தந்தது மொபிலியோ!