Published:Updated:

ஜப்பானில் அறிமுகமான டொயோட்டா கரோலா ஸ்போர்ட் ஹேட்ச்பேக்...இந்தியாவுக்கு வருமா?

ரஞ்சித் ரூஸோ
ஜப்பானில் அறிமுகமான டொயோட்டா கரோலா ஸ்போர்ட் ஹேட்ச்பேக்...இந்தியாவுக்கு வருமா?
ஜப்பானில் அறிமுகமான டொயோட்டா கரோலா ஸ்போர்ட் ஹேட்ச்பேக்...இந்தியாவுக்கு வருமா?

டொயோட்டா, தனது புது கரோலா ஸ்போர்ட் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார், நியூயார்க் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட புது எடிஷன் கரோலா ஹேட்ச்பேக்கை அடிப்படையாகவைத்து வரும் ஸ்போர்ட் மாடல். ஜப்பானிய சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த மாடலில், 114 bhp பவர் வெளிப்படுத்தக்கூடிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் உள்ளது. டொயோட்டாவின் ப்ரையஸ் காரில் இருக்கும் 120 bhp பெட்ரோல்-ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷனும் கிடைக்குமாம். கியர் பாக்ஸை பொறுத்தவரை 10 ஸ்பீடு  CVT கியர்பாக்ஸ் மட்டுமே வருகிறது. எதிர்காலத்தில் விலை குறைப்புக்காக மேனுவல் கியர்பாக்ஸ் வரலாம். டொயோட்டா ஸ்போர்ட்டின் டாப் வேரியன்ட்டில் 4 வீல் டிரைவ் வர உள்ளது.

இப்போது, உலகமே டேட்டா மையம் என்பதற்கு ஏற்ப டொயோட்டாவும் 24 x7 டேட்டா மாடியூல் எனும் தொழில்நுட்பம், இந்த காரில் வருகிறது. இதன்மூலம், டொயோட்டா நிறுவனத்தால் டிரைவர்களின் பாதுகாப்பு சௌகரியம் போன்றவற்றை 24 மணிநேரமும் கவனிக்க முடியும். கூடவே, டொயோட்டாவின்  safety sense 2.0 வருகிறது. இதில்,  pedestrian detection, Intelligent cruise control, lane departure warning, lane keep assist மற்றும்  auto high beam போன்ற பாதுகாப்பு வசதிகள் வருகின்றன. 

இந்த ஹேட்ச்பேக் டொயோட்டாவின் புதிய  Modular TNGA பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படுகிறது. இதன்மூலம், முந்தைய கரோலா ஹேட்பேக்கைவிட கட்டுமானத்தில் சிறந்ததாகவும், சென்டர் ஆஃப் கிராவிட்டி குறைவாகவும் இருக்கும். இந்த காரின் டிசைன், புதிய தலைமுறை டொயோட்டா கார்களின் டிசைன்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

டொயோட்டா கரோலா ஹேட்ச்பேக் ஹூண்டாய் ஐ30 மற்றும் ஹோண்டா சிவிக் கார்களுக்கு போட்டியாகக் களமிறங்குகிறது. தற்போது இந்தியாவில் வெளிவரும் வாய்ப்புகள் எதுவும் இல்லையென்றாலும், புதிய  TNGA பிளாட்ஃபார்மை அடிப்படையாகக்கொண்ட கரோலா செடன் காரை இந்நிறுவனம் கொண்டுவரப்போகிறதாம். டொயோட்டா-மாருதி ஒப்பந்தத்தின்படி புதிய கரோலா கார்களை டொயோட்டா நிறுவனம் மாருதிக்காக உருவாக்க உள்ளது. சீக்கிரமே புதிய தலைமுறை கரோலாவை மாருதி நெக்ஸா ஷோரூமில் பார்க்கலாம்.