வணக்கம். நான் வெங்கடபதி. ஓய்வுபெற்ற கல்லூரி டீன் மற்றும் இயக்குநர். பொதுவாக, எல்லாரும் எங்களை ‘மாருதி குடும்பம்' என்றுதான் அழைப்பார்கள். 2005-ம் ஆண்டு, ஸ்விஃப்ட் வந்த புதிதில் வாங்கினேன். பின்பு, ஸ்விஃப்ட் டிசையரும் வாங்கினேன். இப்போது எனது துணைவன், 2017-ல் அறிமுகமாகி இருக்கும் புதிய ஸ்விஃப்ட் டிசையர்தான்.

ஏன் ஸ்விஃப்ட் டிசையர்?

டிராஃபிக்கில் என்னால் கிளட்ச் மிதித்து, கியர் மாற்றி ஓட்ட முடிவதில்லை. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட ஹூண்டாய் க்ரெட்டா பரிசீலனையில் இருந்தது. இதற்கிடையில் எனது அபிமான ஸ்விஃப்ட் டிசையர், புத்தம் புதிய தோற்றத்தில் AMT வேரியன்ட்டுடன் வெளிவர இருப்பதாகச் சொன்னார்கள். கார் வந்த உடனே புக் செய்து விட்டேன்.

ஷோரூம் அனுபவம்:

எனக்கும், திருச்சி சாலையில் உள்ள அம்பாள் ஆட்டோஸுக்கும் எப்போதும் ஒரு சிறப்பான நல்லுறவு உண்டு. அதற்குக் காரணம், எனது முந்தைய மாருதி கார்களின் சர்வீஸில் அவர்கள் காட்டிய அக்கறை. GST அமலாவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே புக் செய்தேன். புக் செய்த இரண்டே நாட்களில் காரை டெலிவரி கொடுத்தனர்.

ஓட்டுதல் அனுபவம்:

நகரத்தை விட்டு வீடு கொஞ்சம் தள்ளியிருப்பதால், ஷாப்பிங் செய்ய நகருக்குத்தான் செல்ல வேண்டும். முன்பெல்லாம் டாக்ஸிதான் புக் செய்வேன். இப்போதெல்லாம் ஒரு அழுத்து... நானே என் காரில் போய் வந்துவிடுகிறேன். அந்த அளவுக்குச் சுகமான ஓட்டுதல் அனுபவத்தை அளிக்கிறது இந்த கார். மேலும், நெடுஞ்சாலையில் 140 கி.மீ வேகம் வரை சென்றிருக்கிறேன். என் ஓட்டுதல் முறைக்குத் தேவையான பவர் எப்போதும் கிடைப்பதாகவே தோன்றுகிறது.

பிடித்தது:

இதன் AMT கியர்பாக்ஸ்தான் காரில் எனக்கு மிகவும் பிடித்தமான அம்சம். குறிப்பாக, அபார்ட்மென்ட் பார்க்கிங் போன்ற குறுகலான இடங்களில் எந்தச் சிரமமும் இல்லாமல் ரிவர்ஸ் எடுக்க மிகவும் உதவியாக இருக்கிறது. இன்டீரியரும் அருமை. மற்றபடி, மாருதி கார்கள் மேல் எனக்குத் தனிப்பட்ட பிரியம் உண்டு.

பிடிக்காதது:

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், மாருதி சாமானிய இந்திய வாடிக்கையாளருக்குப் பெரிதாக எந்தக் குறையும் வைக்காது. எனக்கு காரில் எந்தக் குறையும் இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும், இதன் முன்பக்க கிரில் டிசைன் சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். எனக்கும் ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தது. அப்புறம், அப்படியே செட் ஆகிவிட்டது. மற்றபடி, பெரிதாக குறையொன்றும் இல்லை.

என் தீர்ப்பு:

என்னைப் போன்ற சீனியர் சிட்டிஸன்கள் மட்டுமில்லாமல், பெண்களும் நெருக்கடியான நகர டிராஃபிக்கில் எளிதாகச் சென்று வர, டிசையர் AMT காரைத் தாராளமாக நம்பி வாங்கலாம்.