Published:Updated:

`தேவையற்ற பொருள்களில் அழகு சிலைகள்!’ - சென்னையில் ஹூண்டாய் கண்காட்சி

`தேவையற்ற பொருள்களில் அழகு சிலைகள்!’ - சென்னையில் ஹூண்டாய் கண்காட்சி
`தேவையற்ற பொருள்களில் அழகு சிலைகள்!’ - சென்னையில் ஹூண்டாய் கண்காட்சி

ஹூண்டாய் நிறுவனத்தின் தொழிலாளர்கள் கார் உற்பத்தியில் வீணாகும் தேவையற்ற பொருள்களை வைத்து கலைப்பொருள் செய்து அதைச் சென்னையில் உள்ள இன்கோ சென்டரில் காட்சிப்படுத்தியுள்ளார்கள்.

`தேவையற்ற பொருள்களில் அழகு சிலைகள்!’ - சென்னையில் ஹூண்டாய் கண்காட்சி

ஹூண்டாய் நிறுவன ஊழியர்கள் சேர்ந்து நடத்தும் `ஸ்க்ரப் ஆர்ட் எக்சிபிஷன்' என்ற அந்த நிகழ்ச்சியில் மொத்தம் 20 குழுக்கள் இணைந்து 25 கலைப்பொருள்கள் செய்துள்ளார்கள். இந்தக் கண்காட்சி டிசம்பர் 13-லிருந்து ஜனவரி மாத இறுதி வரை நடைபெறும். கார் தயாரிப்பின்போது வீணான நட், போல்ட், பைப், மெட்டல் ஷீட், பியரிங்க் போன்ற பொருள்களை கண்கவர் பீரங்கி, சிங்கம், ஆமை, நாய், தும்பி, ஹெலிகாப்டர், கார், பைக் போன்ற பல வடிவங்களாக மாற்றியுள்ளார்கள்.

`தேவையற்ற பொருள்களில் அழகு சிலைகள்!’ - சென்னையில் ஹூண்டாய் கண்காட்சி

இந்தக் கண்காட்சி ஹூண்டாய் தொழிலாளர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதற்காக நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தொழிலாளர்கள் அதிக ஆர்வத்தோடு கலந்துகொண்டனர். இந்தக் கலைப்பொருள்கள் ஒன்று முதல் ஒன்றரை அடி வரை செய்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அரையடியிலேயே அனைத்து வடிவங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. கண்காட்சி முடிந்த பிறகு இந்தப் பொருள்கள் எல்லாம் கம்பெனியில் அழகு பொருள்களாக வைக்கப்படும். கண்காட்சியை இம்முறை இன்கோ சென்டர் கஃபேயில் வைத்துள்ளதால் பார்வையாளர்களை அதிகம் கவரும் என நம்புகிறோம்" என்று ஹூண்டாய் நிறுவனத்தைச் சேர்ந்த பெர்ட்டில்லா கூறினார்.