Published:Updated:

1,37,000 ரூபாய் ஆன் ரோடு விலையில் 125 சிசி கே.டி.எம் பைக்!

1,37,000 ரூபாய் ஆன் ரோடு விலையில் 125 சிசி கே.டி.எம் பைக்!
1,37,000 ரூபாய் ஆன் ரோடு விலையில் 125 சிசி கே.டி.எம் பைக்!

கே.டி.எம் டியூக் சீரிஸ் வரிசையில் புதிதாகக் களமிறங்கியுள்ள பைக்தான் டியூக் 125சிசி. இந்தியாவில் 2012-ல் 200சிசி டியூக் பைக் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் வெற்றியைத் தொடர்ந்து 250சிசி, 390சிசி என அதிக திறன் கொண்ட கேடிஎம் பைக்குகள் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்து அட்வென்சர் 390, டியூக் 790 என எதிர்பார்த்திருந்த நேரத்தில் சிறிய இன்ஜின் கொண்ட டியூக் 125 பைக்கை அறிமுகப்படுத்திவிட்டது கேடிஎம். கடந்த மாதமே இந்திய அளவில் பைக்கை வெளியிட்டிருந்தாலும் தமிழகத்தில் கடந்த வாரம் முதல் விற்பனைக்கு வந்துள்ளது. 

இதன் 124.7சிசி இன்ஜின், டியூக் 200-க்கு கொஞ்சமும் சளைக்காமல் அக்ரஸிவான இன்ஜினாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. எடை குறைவான அலுமினியத்தில் உருவாகியிருக்கும் இன்ஜினில், அதிக வெப்பத்தைத் தாங்கும் அளவு கார்பன் லைனிங் கொடுத்துள்ளார்கள். கூடவே லிக்விட் கூலிங்கும் இருக்கிறது. டியூக் பைக்குகளில் வரும் 4 valve DOHC இன்ஜின்தான் இதுவும். 14.7bhp பவர் மற்றும் 12Nm டார்க்கை வெளிப்படுத்துகிறது. ட்ரெல்லிஸ் ஃப்ரேம், முன்பக்கம் 43மி.மீ சஸ்பென்ஷன், Upside down ஃபோர்க்குகள், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் சஸ்பென்ஷன் பின்பக்கம், LED ஹெட்லைட்,  டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், என டியூக் 200 பைக்கில் இருக்கும் எல்லா வசதிகளும் இதில் உண்டு.

இந்தியாவில் ஏபிஎஸ் பிரேக் வைத்து வரும் முதல் 125cc பைக் இதுதான். 1,37,000 எனும் ஆன்ரோடு விலையில் விற்பனைக்கு வந்துள்ளது டியூக் 125. ``கே.டி.எம் என்றாலே பெர்ஃபாமன்ஸ் விரும்பிகளுக்கானது என்பார்கள். ஆனால், டியூக் 125 எல்லோருக்குமான பைக். அதற்காக 125cc சுமாராக இருக்குமோ என்று யோசிக்காதீர்கள். 150cc பைக்கின் ஃபன் டிரைவிங் உங்களுக்கு இதில் கிடைத்துவிடும்'' என்று கே.டி.எம் நிறுவனத்தின் சென்னை மண்டல விற்பனை மேலாளர் கோபிநாத் கூறினார்.