Published:Updated:

மோட்டார் விகடன் விருதுகள் 2019 பட்டியலுடன் 5 நிமிட வாசிப்பில் 10 மேட்டர்கள்!

மோட்டார் விகடன் விருதுகள் 2019 பட்டியலுடன் 5 நிமிட வாசிப்பில் 10 மேட்டர்கள்!
மோட்டார் விகடன் விருதுகள் 2019 பட்டியலுடன் 5 நிமிட வாசிப்பில் 10 மேட்டர்கள்!

இந்த இதழ் மோட்டார் விகடன்:  https://bit.ly/2RaLU2n

மோட்டார் விகடன் விருதுகள் 2019 பட்டியலுடன் 5 நிமிட வாசிப்பில் 10 மேட்டர்கள்!

சிறந்த கார் - ஹூண்டாய் சான்ட்ரோ | சிறந்த மிட் காம்பேக்ட் கார் - மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் | சிறந்த காம்பேக்ட் சேடான் - ஹோண்டா அமேஸ் | சிறந்த மிட் சைஸ் செடான் - டொயோட்டா யாரிஸ் | சிறந்த லக்ஸுரி செடான் - லெக்ஸஸ் ES300h | சிறந்த எக்ஸிக்யூட்டிவ் எஸ்யூவி - மஹிந்திரா ஆல்ட்டுராஸ் | சிறந்த ப்ரீமியம் எஸ்யூவி - வால்வோ XC40 | சிறந்த பெர்ஃபார்மன்ஸ் கார் - பிஎம்டபிள்யூ M2 Competition | சிறந்த எம்பிவி - மஹிந்திரா மராத்ஸோ | சிறந்த ஃபேஸ்லிஃப்ட் - ஃபோர்டு ஆஸ்பயர் | சிறந்த வேரியன்ட் - டியாகோ JTP / டிகோர் JTP | சிறந்த பைக் - யமஹா YZF-R15 V3.0 | சிறந்த கம்ப்யூட்டர் பைக் - டிவிஎஸ் ரேடியான் | சிறந்த எக்ஸிக்யூட்டிவ் கம்ப்யூட்டர் - டிவிஎஸ் அப்பாச்சி RTR 1604V | சிறந்த மிட் சைஸ் பைக் - ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 | சிறந்த ப்ரீமியர் பைக் - சுஸூகி GSX-S750 | சிறந்த அட்வென்ச்சர் பைக் - சுஸூகி V-Strom 650 | சிறந்த ஸ்கூட்டர் - டிவிஎஸ் என்டார்க் 125 | சிறந்த கார் தயாரிப்பாளர் - டாடா மோட்டார்ஸ் | சிறந்த பைக் ரேஸர் - ஜெகன் | மொபைல் ஆஃப் தி இயர் - One Plus 6T | ப்ரீமியம் மொபைல் - Google Pixel 3XL | பட்ஜெட் மொபைல் - ரியல்மீ 2 ப்ரோ | மிட் ரேஞ்ச் மொபைல் - போக்கோ F1 | ஸ்மார்ட் ஃபோன் கேட்ஜெட் - Mi பேண்ட் 3

மோட்டார் விகடன் விருதுகள் 2019 பட்டியலுடன் 5 நிமிட வாசிப்பில் 10 மேட்டர்கள்!

- மோட்டார் விகடன் விருதுகள் 2019-ன் வெற்றிப் பட்டியல் இது. இந்த விருதுத் தெரிவுகளுக்கான காரணங்களை கச்சிதமாக விவரித்திருக்கிறது மோட்டார் விகடன் டீம். இதழில் வாசிக்கத் தவறாதீர்கள்.

சாலை ஈரமாகவும் வழுக்கலாகவும் இருக்கும்போது ஓட்ட வசதியாக, இதில் டெரெய்ன் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் கொடுத்திருக்கிறார்கள். அதேபோல ஹில்-அசிஸ்ட், ஹில் டிஸன்ட், டிராக்ஷன் கன்ட்ரோல், ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், ரோல்ஓவர் மிட்டிகேஷன் என்று பாதுகாப்புக்குப் பல அம்சங்கள் இதில் உண்டு. இதில் ரியர் டிஸ்க் பிரேக் இல்லை என்றாலும், கார் சொல்லும் இடத்தில் நச்சென நிற்கிறது. சில மைனஸ் பாயின்ட்களைத் தாண்டி, ஹேரியர் தனது செக்மென்ட்டில் முக்கியமான ஒரு காராக உருவெடுத்திருக்கிறது. காரணம் - அசத்தல் டிசைன், அற்புதமான உள்ளலங்காரம்...

- ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரிலிருந்து சுமார் 100 கி.மீ தூரத்தில் இருக்கும் மணல்மேடுகள் நிறைந்த கிம்ஸர் என்ற கிராமம் வரை, ஹேரியரை ஓட்டிச் சென்று டெஸ்ட் டிரைவ் செய்யப்பட்டது டாடா ஹேரியர். இதன் மீதான எதிர்பார்ப்புகள் மெய்யானதா என்பதைக் கச்சிதமாகக் காட்டியிருக்கிறது 'டாடா ஹேரியர்: லேண்ட்ரோவர் பாதி... ஜீப் மீதி... டாடாவின் டபுள் ட்ரீட்!' எனும் ஃபர்ஸ்ட் டிரைவ் பகுதி. 

மோட்டார் விகடன் விருதுகள் 2019 பட்டியலுடன் 5 நிமிட வாசிப்பில் 10 மேட்டர்கள்!

பைக் ஓட்டத் தெரிந்திருப்பதோடு, கூடவே ரேஸர் ஆக வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் போதும். எப்படி என்றால், ஸ்பான்ஸர்களை உங்களை நோக்கி வர வைக்கும் அளவுக்குத் தீவிரமான ஆர்வமும் திறமையும் இருக்க வேண்டும். மற்றபடி, நீங்கள் நினைப்பதுபோல் ரேஸ் என்பது லட்சம்-கோடி ரூபாய்க் கனவு என்று பயந்து, இந்த ஆசையைத் துறக்க வேண்டியதில்லை. பலரும் தங்களின் ரேஸ் கனவைக் கலைப்பதற்கு, பணம்தான் முக்கியக் காரணமாக இருக்கிறது. நிஜம் அதுவல்ல! எல்லாவற்றுக்கும் முறையான வழிமுறைகள் உண்டு...

- இந்திய பைக் ரேஸர்களில் முக்கியமானவரான சுதாகர் எழுதும் 'நீங்களும் ரேஸர் ஆகலாம்!' எனும் புதிய தொடர் இது. மொத்தம் 7 தடவை நேஷனல் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற சுதாகர், எந்தப் பின்னணியும் இல்லாமல் ரேஸ் உலகத்துக்குள் நுழைந்தவர். இப்போது 'கிங்டம் ரேஸிங் அகாடமி' எனும் பெயரில் பல ரேஸர்களை உருவாக்கி வருகிறார். ஏகப்பட்ட பைக் ரேஸர்கள், இவரின் பட்டறையில் பட்டை தீட்டப்பட்டவர்கள். பெண்களும் குழந்தைகளும் ரேஸ் பைக் ஆக்ஸிலரேட்டர் முறுக்க வேண்டும் என்ற இவரின் ஆசையில் உருவானவர்கள் பலர். 'ரேஸிங் துறையில் இவர்களைப்போல் எல்லோரும் உருவாகலாம். மோட்டோ ஜிபியில் எளிதில் கால் பதிக்கலாம்' எனும் கான்செப்டில் இவர் எழுதும் இந்தத் தொடர், நிச்சயம் ரேஸிங் ஜீன் உள்ள இளசுகளை வெறியேற்றும். முதல் பகுதியில் ரேஸ் ஓட்ட ஆசை வந்தவுடன், நீங்கள் முதலில் செய்ய வேண்டிய நடைமுறை ஒன்று குறித்து தெளிவுபடுத்தியுள்ளார்.

மோட்டார் விகடன் விருதுகள் 2019 பட்டியலுடன் 5 நிமிட வாசிப்பில் 10 மேட்டர்கள்!

ஒரு சனிக்கிழமை இரவு 12 மணி இருக்கும். பிரேக்டவுன் நம்பருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு. ``ஹலோ, சர்வீஸ் சென்டரா?’’ என்றது குரல். ரொம்பப் பதற்றமான குரல். 'சொல்லுங்க' என்றதும் படபடவெனப் பேச ஆரம்பித்துவிட்டார்.

``சார், நான் புளியங்குளம் பக்கத்துல இருந்து பேசுறேன். என் கார் திடீர்னு பிரேக்டவுன் ஆகி நின்னுடுச்சு. என்னன்னே தெரியலை. இங்க யாருமே இல்லை. மனைவி, பிள்ளைங்களோட தனியா இருக்கேன். கொஞ்சம் சீக்கிரம் யாரையாவது அனுப்புனீங்கன்னா நல்லாருக்கும்'' என்று பீதியோடு பேசினார்.

ஒரு சுபகாரியத்துக்காகச் சென்றுவிட்டுத் திரும்பும்போது, இப்படி ஒரு பிரேக்டவுன் நடந்திருக்கிறது. அவர் மனைவி, கழுத்து நிறைய நகைகள் போட்டிருப்பதாகவும், இது ஆள் அரவமற்ற இடம் என்றும் சொன்னார். கேட்கும்போது எனக்கே 'திக்' என்றிருந்தது. காரணம், அவர் நின்றிருந்த இடம் அப்படி. சரியாகச் சொன்னால் 'பரியேறும் பெருமாள்' படத்தில் வரும் புளியங்குளம் எனும் இடம். உடனடியாக ஆளை அனுப்பினால்கூட, 45 நிமிடங்கள் ஆகலாம்...

- சர்வீஸ் அனுபவம் பகிரும் புதிய தொடரில், 'நில்... கவனி... சர்வீஸ்! - ஸ்பீடு பிரேக்கரால் வந்த பிரேக் டவுன்!' எனும் முதல் பகுதியே வேற லெவல். இதில், 'என்ன செய்ய வேண்டும்?' எனும் டிப்ஸ் குறிப்பிடத்தக்கவை.

மோட்டார் விகடன் விருதுகள் 2019 பட்டியலுடன் 5 நிமிட வாசிப்பில் 10 மேட்டர்கள்!

* முடிந்தளவு ஒரே பெட்ரோல் பங்க்கையே பயன்படுத்துங்கள். சிலர் காஸ்ட்லியான பெட்ரோல்தான் தரமான எரிபொருள் என்று நினைப்பார்கள். அப்படியல்ல; உங்கள் கார் யூஸர் மேனுவலை ஒரு தடவை புரட்டுங்கள். என்ன பெட்ரோல் பயன்படுத்த வேண்டும் என்ற ஐடியா கிடைக்கும் என்பதைத் தாண்டி, பல தெரியாத விஷயங்களும் புலப்படும்.

* டயர்களுக்கும் எப்போதுமே ஒரே காற்றைத்தான் நிரப்ப வேண்டும். நைட்ரஜன் அடித்துவிட்டு, அதே டயரில் சாதா காற்றை நிரப்பக்கூடாது. டயர் மீது குறிப்பிட்டிருக்கும் ப்ரெஷர் என்பது அதிகபட்ச அளவு. கார் மேனுவலில் கொடுக்கப்படும் ப்ரெஷரையே டயர்களில் அடிக்க வேண்டும்.

- இதுபோல் மொத்தம் 14 பராமரிப்பு வழிகாட்டுதல்களைக் கொண்டிருக்கிறது, 'கார் வாங்குவது எப்படி?' தொடரின் 'கார் வாங்கியவுடனே இதெல்லாம் பண்ணுங்க!' எனும் பகுதி. ஒரே கார்தான் - ஆனால் பலருக்கும் பலவிதமாக மைலேஜ் தரும். இது காரின் பிரச்னை அல்ல; டிரைவிங் ஸ்டைல், வாகனப் பராமரிப்பு, எரிபொருளின் தரம் எல்லாமே இதற்குக் காரணம். அதனால் புது கார் ஓனர்கள், அதை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்பதை 14 டிப்ஸ்களுடன் வழிகாட்டப்படுகிறது.

மோட்டார் விகடன் விருதுகள் 2019 பட்டியலுடன் 5 நிமிட வாசிப்பில் 10 மேட்டர்கள்!

ஃபெமிலியரான டீசல் இன்ஜின்தான். ஆம்! டஸ்ட்டர், டெரானோ, கேப்ச்சரில் இருக்கும் அதே 1.5 லிட்டர், 110 bhp பவரும் 24 kgm டார்க்கும்கொண்ட K9K டீசல் இன்ஜின்தான். நீங்கள் மைண்ட் வாய்ஸில் புலம்புவது கேட்கிறது. ஆம், அந்த டர்போ லேக்? டஸ்ட்டர், கேப்ச்சர் அளவுக்கு இல்லை. ஆனால் 2,000 rpm-க்குக் கீழே கொஞ்சம் டர்போ லேக்கை உணர்ந்தேன். லோ ஸ்பீடுகளில் கொஞ்சம் கடகடக்கவும் செய்தது கிக்ஸ். டர்போ விழித்துவிட்டால், காரை நிறுத்தத் தோன்றவில்லை. மிட் ரேஞ்சிலிருந்து வெறித்தனம் காட்ட ஆரம்பிக்கிறது கிக்ஸ்.

0-100 கி.மீ-யை செக் செய்யவில்லை. ஆனால், சட்டென நிமிர்ந்து பார்ப்பதற்குள் டிஜிட்டலில் மூன்று இலக்கத்தைத் தொட முடிந்தது. 2,100 - 4,000 rpm வரை பவரையும் டார்க்கையும் மிக்ஸ் செய்து அடிக்கிறது கிக்ஸ். ஸ்ட்ராங் பர்ஃபாமென்ஸ் நச். ஓவர்டேக்கிங்கில் படுத்தவில்லை. கிளட்ச்சும் சரி; கியரும் சரி - எந்த இடத்திலும் கைவிடவில்லை. நல்ல பார்ட்னர்ஷிப். ஃபன் டு டிரைவ் பார்ட்டிகளுக்கு, செம கிக் ஏற்றும் கிக்ஸ்...

- நிஸான் கிக்ஸ் - பரவச அனுபவத்துடன் நிறைகளை அடுக்குகிறது 'கிக்ஸ்... நிஸானின் சிக் எஸ்யூவி!' எனும் ஃபர்ஸ்ட் டிரைவ் அனாலிசிஸ்.

மோட்டார் விகடன் விருதுகள் 2019 பட்டியலுடன் 5 நிமிட வாசிப்பில் 10 மேட்டர்கள்!

வேகன்-R... பார்த்துப் பழகிய டிசைன், கார்னரிங் பயம், மிகக் குறைவான வசதிகள், செக்மென்ட்டிலேயே கம்மியான பவர்/டார்க் - இதெல்லாம் ஃபன் பார்ட்டிகளுக்கு எந்தளவு பிடிக்கும் என்று தெரியவில்லை...

பெரிய கார் போன்ற தோற்றமும், பெரிய இன்ஜினும்தான் டட்ஸன் கோவின் பலம். டிரைவிங் மற்றும் ஹேண்டிலிங்கும் ரசிக்கும்படியாகவே உள்ளது. 

இங்கே சான்ட்ரோவும் டியாகோவும்தான் வெவ்வேறான விஷயங்களைக் கொடுத்து உங்கள் பாசத்தையும் பணத்தையும் வாங்கிவிடுவார்கள். சான்ட்ரோவில் டிசைன், வசதிகள் இரண்டிலும் அதிக கவனம் செலுத்தி ஈர்த்துவிட்டார்கள்...

- மாருதி சுஸூகி வேகன்-R VS ஹூண்டாய் சான்ட்ரோ VS டட்ஸன் கோ VS டாடா டியாகோ - ஒப்பீடு அலசல் கட்டுரையில் துளிகள் இவை. மிக விரிவாகவும் தெளிவாகவும் ஒப்பீடு செய்திருக்கிறது 'ரவுடி பேபிகள்! - எந்த பேபி ஸ்மார்ட்?' எனும் டீட்டெயில்டு அனாலிசிஸ்.

மோட்டார் விகடன் விருதுகள் 2019 பட்டியலுடன் 5 நிமிட வாசிப்பில் 10 மேட்டர்கள்!

இந்த மூன்று பைக்குகளில், எதன் மீதும் அளவு கடந்த காதல் வரவில்லை. ஒவ்வொரு பைக்குக்கும் ஒவ்வொரு குறை இருக்கிறது. பழைய புராணங்களும், காஸ்ட்லியான பைக் என்கிற பெயரும், கவர்ச்சியான டெக்னாலஜியும் கவாஸாகி மற்றும் பிஎம்டபிள்யூ பைக்குகளுக்கு இங்கு உதவவில்லை...

- அட்வென்ச்சர் என்றால் சும்மா இல்லை. கொஞ்சம் தில்லும் பணமும் செலவழித்துத்தான் ஆக வேண்டும். இது அட்வென்ச்சர் பைக்குகளுக்கும் பொருந்தும். ஆம்! மார்க்கெட்டில் ஹிமாலயன் பைக்கைத் தவிர, 2 லட்ச ரூபாய்க்குக் குறைவாக அட்வென்ச்சர் பைக்குகள் நஹி!  ஹிமாலயனுக்குப் போட்டியாக இருந்த ஒரே பைக் - கவாஸாகி வெர்சிஸ் X-300. ஆனால் இதன் விலைக்கு 2 ஹிமாலயன் வாங்கிவிடலாம். இப்போது இந்தப் போட்டியில் பிஎம்டபிள்யூ G310GS பைக்கும் சேர்ந்து விட்டது. மூன்றையும் காடு, கடல், மேடு என உறும விட்டதன் ரிப்போர்ட்டைத் தருகிறது 'பட்... பட்... பட்... பட்ஜெட் அட்வென்ச்சருக்கு ரெடியா?' எனும் ஒப்பீடு அனாலசிஸ் மேட்டர்.

மோட்டார் விகடன் விருதுகள் 2019 பட்டியலுடன் 5 நிமிட வாசிப்பில் 10 மேட்டர்கள்!

இன்ஜின் விஷயத்தில் மோஜோவை நாடியிருந்தாலும், ஃப்ரேம் மற்றும் சஸ்பென்ஷன் விஷயத்தில் ஜாவா தனியாகவே செயல்பட்டிருக்கிறது. டபுள் க்ரேடில் ஃப்ரேம் - டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ட்வின் கேஸ் ஷாக் அப்ஸார்பர் என வழக்கமான செட்-அப்தான்...

பழைய பைக்கின் ஃபீலை புதிய மாடலில் கொண்டுவந்த க்ளாசிக் லெஜெண்ட்ஸுக்கு லைக் போட்டே ஆகவேண்டும். டிசைனைப் பொறுத்தவரை, ஜாவா சீரிஸ் மாடர்ன் ரெட்ரோ பைக்ஸ் நல்ல முயற்சி.  ஓட்டுதல், கையாளுமை, பிரேக்கிங் என எல்லாமே ஓகேதான்...

- ஜாவா & ஜாவா 42 குறித்த ஃபர்ஸ்ட் ரைடு முதல் தீர்ப்பை 'புல்லட்டுக்கு பதில் ஜாவா ஓகேவா?' எனும் ரிப்போர்ட்டில் வாசிக்கத் தவறாதீர்கள். 

மோட்டார் விகடன் விருதுகள் 2019 பட்டியலுடன் 5 நிமிட வாசிப்பில் 10 மேட்டர்கள்!

> டொயோட்டா ஃபார்ச்சூனருடன் போட்டியிடும் மஹிந்திரா ஆல்ட்டுராஸ் எப்படி இருக்கிறது? இதனுடன் ஒப்பிட்டால் விலை குறைவான டாடா ஹெக்ஸா எப்படி? 

> மஹிந்திரா ஆல்ட்டுராஸ் பெரிய சைஸ் - மாடர்ன் கேபின் - சொகுசான இடவசதி - அதிக சிறப்பம்சங்கள் - எளிதான ஓட்டுதல் என அசத்துகிறது. ஆனால் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் டாடா ஹெக்ஸா, XUV500-க்குப் போட்டியாகக் களமிறக்கப்பட்ட காராகும். இது ஒரு செக்மென்ட் கீழே பொசிஷன் செய்யப்பட்ட மாடல்தான். என்றாலும், லேடர் ஃப்ரேம் - 7 சீட்டர் - 4WD - டர்போ டீசல் இன்ஜின் - ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகியவை, ஹெக்ஸா & ஆல்ட்டுராஸுக்குப் பொதுவானதுதான்.

- மோட்டார் வாகனங்கள் தொடர்பான பல கேள்விகளுக்கு தெளிவாகவும் கச்சிதமாகவும் பதில் சொல்கிறது 'மோட்டார் கிளினிக்'
பகுதி. 

இந்த வார மோட்டார் விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க:  https://bit.ly/2BZNSYO