Published:Updated:

தரமான ரிப்போர்ட்ஸ்: 8 நிமிட வாசிப்பில் மோட்டார் விகடனின் 12 பதிவுகள்!

தரமான ரிப்போர்ட்ஸ்: 8 நிமிட வாசிப்பில் மோட்டார் விகடனின் 12 பதிவுகள்!
தரமான ரிப்போர்ட்ஸ்: 8 நிமிட வாசிப்பில் மோட்டார் விகடனின் 12 பதிவுகள்!

இம்மாத மோட்டார் விகடன்: https://bit.ly/2ULvMSg

தரமான ரிப்போர்ட்ஸ்: 8 நிமிட வாசிப்பில் மோட்டார் விகடனின் 12 பதிவுகள்!

வேகன்-R நம் நாட்டில் அறிமுகமாகி, 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. முதன்முதலாக 1999-ம் ஆண்டு, டால் பாய் ஹேட்ச்பேக் காராக இந்தியாவில் விற்பனைக்கு வந்தது வேகன்-ஆர். இப்போது 20-வது ஆண்டில், பல மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்களோடு புதிய வேகன்-R காரைக் களத்துக்கு கொண்டுவந்திருக்கிறது மாருதி சுஸூகி. இந்த நிறுவனத்தின் பெஸ்ட் செல்லர்களில் ஒன்று (2.2 மில்லியன் கார்கள்), இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் டாப் டென் கார்களில் ஒன்று என வேகன்-Rக்குப் பல பெருமைகள் இருந்தாலும், இப்போது போட்டி அதிகம். டியாகோ XZ+, சான்ட்ரோ, டட்ஸன் கோ தவிர மாருதி சுஸூகியின் செலெரியோ என பட்ஜெட் ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் போட்டி பலமாக இருக்கிறது. புதிய வேகன்-ஆர் போட்டியாளர்களைச் சமாளிக்குமா?

தரமான ரிப்போர்ட்ஸ்: 8 நிமிட வாசிப்பில் மோட்டார் விகடனின் 12 பதிவுகள்!

- புதிய வேகன்-ஆர் காரின் மாற்றங்கள், இன்ஜின் - கியர்பாக்ஸ், சிறப்பம்சங்களை அடுக்குகிறது 'வேகன்-R - இப்ப வேற லெவல்!' எனும் 
ஃபர்ஸ்ட் லுக் அலசல். 

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125: 2018 ஆட்டோ எக்ஸ்போவில் மேஸ்ட்ரோ எட்ஜ் 125, டூயட் 125 ஸ்கூட்டர்களை முதல் முறையாகக் காட்சிப்படுத்தினார்கள். டூயட் 125, டெஸ்ட்டினி என்ற பெயரில் விற்பனைக்கு வந்துவிட்டது. இந்த ஆண்டில் மேஸ்ட்ரோ விற்பனைக்கு வரப்போகிறது. உத்தேச விலை: ரூ 80,000 - என்ன எதிர்பார்க்கலாம்: i3s இன்ஜின், ஸ்போர்ட்டி டிசைன், 8.7bhp பவர், செமி டிஜிட்டல் மீட்டர்.

தரமான ரிப்போர்ட்ஸ்: 8 நிமிட வாசிப்பில் மோட்டார் விகடனின் 12 பதிவுகள்!

டிவிஎஸ் ஜூபிட்டர் 125: டிவிஎஸ் என்டார்க் 125 கடந்த ஆண்டின் சிறந்த ஸ்கூட்டர். என்டார்க்கின் ஃபார்முலாவில், ஃபேமிலி ஆடியன்ஸை ஈர்க்க வரப்போகிறது  ஜூபிட்டர் 125. இதில் என்டார்க்குக்கு இணையாக வசதிகளும், மைலேஜும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா இருக்கும். உத்தேச விலை: ரூ 83,000 - என்ன எதிர்பார்க்கலாம்: அதிர்வுகள் இல்லாத இன்ஜின், 9.4bhp பவர், 22 லிட்டர் பூட் ஸ்பேஸ், கூடுதல் மைலேஜ்.

- இவை மட்டுமா... மேலும் இந்த ஆண்டு மார்ச் வரை வரப்போகும் 16 இரு சக்கர வாகனங்கள் குறித்த மினி டிரெய்லரை வெளியிட்டிருக்கிறது 'பைக்ஸ் 2019' பகுதி. 

தரமான ரிப்போர்ட்ஸ்: 8 நிமிட வாசிப்பில் மோட்டார் விகடனின் 12 பதிவுகள்!

> மேம்படுத்தப்பட்ட டிசைன், மாற்றியமைக்கப்பட்ட கேபின், அதிக சிறப்பம்சங்கள், புதிய பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என ஃப்ரீஸ்டைல்/ஆஸ்பயர் பேஸ்லிஃப்ட் ஆகிய  கார்களில் இடம்பெற்ற அம்சங்கள், அப்படியே ஃபிகோ பேஸ்லிஃப்ட் காருக்கும் இடம் பெயர உள்ளன. அசத்தல் விலை கியாரன்ட்டி.

> 6-வது தலைமுறை போலோ GTi காரை, இந்தியாவுக்குக் கொண்டுவர இருக்கிறது ஃபோக்ஸ்வாகன். 5 பேருக்கான இடவசதியைக் கொண்டிருக்கும் இந்த காரில், 200bhp பவர் மற்றும் 32kgm டார்க்கை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் - 7 ஸ்பீடு டூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இது முழு காராக CBU முறையில் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் என்பதால், நிச்சயம் இதன் விலை அதிகமாகவே இருக்கும்.

- இவை மட்டுமா... மேலும் இந்த ஆண்டு வரப்போகும் 28 கார்கள் குறித்த மினி டிரெய்லரை வெளியிட்டிருக்கிறது 'கார்கள் 2019' பகுதி. 

தரமான ரிப்போர்ட்ஸ்: 8 நிமிட வாசிப்பில் மோட்டார் விகடனின் 12 பதிவுகள்!

சிறப்பம்சங்கள்: 360 டிகிரி பார்க்கிங் கேமராவுக்காகவே கிக்ஸ் ஏகப்பட்ட லைக்ஸ்களை அள்ளும். இந்த செக்மென்ட்டில் வேறு எந்த காரிலும் இந்த வசதி இல்லை. இதனால் ரிவர்ஸ் எடுக்கும்போது எதையும் இடித்துவிடாமல் ஈஸியாக பார்க் செய்யலாம். 

கிக்ஸில் இருக்கும் பல சிறப்பம்சங்கள் கேப்ச்சரிலும் உண்டு. ஆட்டோ ஹெட்லைட்ஸ்/வைப்பர், லெதர் இருக்கைகள், LED ஹெட்லைட்ஸ் எல்லாம் ஓகே. ஆனால், 7 இன்ச் டச் ஸ்க்ரீனில் ஆண்ட்ராய்டு ஆட்டோ/ஆப்பிள் கார் ப்ளே போன்ற வசதிகள் இல்லை. பார்க்கிங், கிக்ஸ்போன்று 360 டிகிரி கிடையாது.

சிறப்பம்சங்களில் கிக்ஸை ஓவர்டேக் செய்கிறது க்ரெட்டா. `செக்மென்ட்டில் முதன்முதலாக' என்று க்ரெட்டாவுக்கு நிறைய இடங்களில் கேப்ஷன் போடலாம். SX(O) என்பதுதான் க்ரெட்டாவின் டாப் மாடல். இதில் வென்டிலேட்டட் இருக்கை வசதியைக் கொண்டு வந்திருக்கிறது ஹூண்டாய். 

பாதுகாப்பு: பாதுகாப்பைப் பொறுத்தவரை மூன்று எஸ்யூவிகளிலுமே ABS, ESC, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் போன்ற வசதிகள் இருக்கின்றன. கிக்ஸிலும் கேப்ச்சரிலும் நான்கு காற்றுப்பைகள் இருக்க, க்ரெட்டாவின் டாப் எண்டில் ஆறு காற்றுப்பைகள் உண்டு.

- கிக்ஸ், க்ரெட்டாவுக்கு என்ன மாதிரியான போட்டியாளர்? கேப்சரின் டார்கெட் கஸ்டமர் யார்? மூன்று டீசல் கார்களையும் டெஸ்ட் செய்து விட்டு வெளியிடப்பட்ட முழுமையான போட்டி ரிசல்ட்டைத் தருகிறது 'நிஸான் கிக்ஸ் VS ரெனோ கேப்ச்சர் VS ஹூண்டாய் க்ரெட்டா - லைக்ஸ் அள்ளும் கிக்ஸ்... போட்டிக்கு வர்ட்டா எனும் க்ரெட்டா!' எனும் ஒப்பீட்டு அலசல்.

தரமான ரிப்போர்ட்ஸ்: 8 நிமிட வாசிப்பில் மோட்டார் விகடனின் 12 பதிவுகள்!

``என் ரெண்டு குழந்தைகளையும் மாசம் ஒரு தடவை வெளியூருக்கு டூர் கூட்டிட்டுப் போவேன். ஒவ்வொரு தடவை டூர் முடியும்போதும் அவங்க ரெண்டு பேருமே காய்ச்சல்ல படுத்துடுறாங்க! மற்ற நாள்கள்ல அவங்களுக்கு எதுவுமே ஆகுறதில்லை. எனக்கென்னமோ கார்லதான் பிரச்னை இருக்குனு நினைக்கிறேன். நீங்கதான் இதுக்கு ஒரு தீர்வு கண்டுபிடிச்சுக் கொடுக்கணும்..'' என்றார்.

'என்னடா இது வம்பாப் போச்சு! நான் என்ன டாக்டரா... இல்லை டீனா!' என்று கவுண்டமணி ஸ்டைலில் எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். ஆனால், நம்மை நம்பி வந்தவரிடம் கை விரிப்பது தமிழனுக்கு வீரமில்லையே..?

``என் சின்னப் பையன் தெரியாமல், பெர்ஃப்யூம் பாட்டிலைத் தட்டிட்டான். அது ஏ.சி கிரில்லுக்குள் போயிடுச்சு. அதனால் அதை க்ளீன் பண்ணிட்டேன்'' என்றார். சரசரவென ஆக்ஷனில் இறங்கிவிட்டேன். ஏ.சி மெக்கானிக்கை விட்டு ஏ.சி கிரில்லைத் தனியே கழற்றிப் பார்த்தபோது, பிரச்னைக்கான காரணம் இதுதான் என்பது உறுதியானது. 

- 'கார் ஏ.சி-யால் காய்ச்சல் வருமா?' என்ற வியப்பூட்டும் சந்தேகத்துக்கு சுவாரஸ்யமானதும் பயனுள்ளதுமான விடை சொல்கிறது 'சர்வீஸ் அனுபவம்' பகுதி.

தரமான ரிப்போர்ட்ஸ்: 8 நிமிட வாசிப்பில் மோட்டார் விகடனின் 12 பதிவுகள்!

FZ-Fi V3.0 மற்றும் FZ S-Fi V3 இடையே என்ன வித்தியாசம்?

FZ-Fi மாடலுடன் ஒப்பிடும்போது, FZS-Fi மாடலின் பெட்ரோல் டேங்க்கில் இருக்கும் ஏர் வென்ட் பகுதியைச் சுற்றி க்ரோம் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும் இன்ஜின் அடிபடுவதைத் தடுக்கக்கூடிய Belly Pan வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி பைக்கின் கலர் ஆப்ஷன்களிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறது யமஹா. Metric Black மற்றும் Racing Blue ஆகியவை FZ-Fi மாடலில் இருந்தால், Matt Black, Dark Matt Blue, Grey and Cyan Blue ஆகியவை FZS-Fi மாடலில் இருக்கின்றன. மற்றபடி சேஸி, டெயில் லைட், இண்டிகேட்டர்கள், மிரர்கள், டயர்கள், பிரேக்ஸ் ஆகியவை, இரண்டு மாடலுக்கும் பொதுவானதாக இருக்கின்றன.

- போட்டி மிகுந்த இந்திய பைக் சந்தையில்தான் விட்ட இடத்தைப் பிடிக்கும்விதமாக, FZ-Fi V3.0 மற்றும் FZS-Fi V3.0 பைக்கை அறிமுகப்படுத்தியிருக்கிறது யமஹா. இதில் என்ன ஸ்பெஷல் என்பதைச் சொல்கிறது '2019 யமஹா FZ S-Fi V3.0 - பெர்ஃபாமென்ஸ் அதேதான் பாதுகாப்பு அடுத்த லெவல்!' எனும் ஃபர்ஸ்ட் லுக் ரிப்போர்ட். 

தரமான ரிப்போர்ட்ஸ்: 8 நிமிட வாசிப்பில் மோட்டார் விகடனின் 12 பதிவுகள்!

பெர்ஃபாமென்ஸ்: 5,000 rpm வரை ரெவ் ஆனது இன்ஜின். ஸ்போர்ட் மோடு என்றால் 5,600rpm வரை போகிறது. 0-100 கி.மீ வேகத்தை 6 நொடியில் அடைந்துவிடும் என்கிறது பிஎம்டபிள்யூ. தடதடக்கும் idle, கிர்ரெனக் கடுப்பேற்றும் overrun என எதுவுமே கிடையாது. ரிஃபைன் மென்ட் லெவல் சிறப்பு. X4 காரின் பெட்ரோல் வேரியன்ட்டான 30i, 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின்கொண்டது. இதில் வெறும் 35kgm டார்க்தான். இந்த ட்வின் பவர் டர்போ இன்ஜினின் பவர் 252bhp. 4,000 rpm கடந்து விட்டால் பெட்ரோல் பெர்ஃபாமென்ஸ் தெறி லெவல். இன்ஜின் எதுவாக இருந்தாலும், டிரைவிங்கை அருமையாக மாற்றுகிறது 8 ஸ்பீடு ZF ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்.

- பல கார்களை டெஸ்ட் செய்திருக்கிறோம். ஆனால், இந்த பிஎம்டபிள்யூ X4 டெஸ்ட் டிரைவ், நம் வாழ்நாளில் கொஞ்சம் ஸ்பெஷல். பின்னே... சென்னைத் தொழிற்சாலையில் குவாலிட்டி டெஸ்ட் முடித்து வெளியே வந்த முதல் X4 காரை ஃப்ரெஷ்ஷாக டெஸ்ட் செய்வது என்றால் சும்மாவா? ஓடோமீட்டர் ரீடிங்கில் `0'  இருப்பதைப் பார்ப்பதெல்லாம் `வாவ்' விஷயம்தானே! இந்தியாவின் முதல் பிஎம்டபிள்யூ X4 காரில் ஒரு ஜாலி ரைடு... - `பிஎம்டபிள்யூ X4 30d - ஸ்டைல், பெர்ஃபாமென்ஸ் Xட்ரா4' எனும் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டை தவறவிடாதீர்.

தரமான ரிப்போர்ட்ஸ்: 8 நிமிட வாசிப்பில் மோட்டார் விகடனின் 12 பதிவுகள்!

* காரை நன்றாக கம்பாரிஸன் செய்து பாருங்கள். குடும்பத்தினருடன் டெஸ்ட் டிரைவ் செய்ய மறக்காதீர்கள்.

* டெஸ்ட் டிரைவ் முடிந்த பிறகே புக்கிங் என்பதில் உறுதியாக இருங்கள். இதுவும் குடும்பத்தினரின் முன்னிலையில்தான் நடக்க வேண்டும்.

* புக்கிங் செய்யும்போது, இன்வாய்ஸ் தவிர வேறு எதிலும் கையொப்பம் இடாதீர்கள்.

* ஃபார்ம்-20 என்கிற விண்ணப்பம்தான், ஒரு காரின் ரிஜிஸ்ட்ரேஷனுக்கு ரொம்ப முக்கியம். இதில் வங்கியின் ஒப்புதலும், உங்களின் கையொப்பமும் இருந்தாலொழிய காரை RTO-வுக்கு ரிஜிஸ்ட்ரேஷனுக்கு அனுப்ப முடியாது.

- நிச்சயதார்த்தம் எல்லாம் முடிந்த பிறகு `இந்தப் பொண்ணைப் பிடிக்கலை' என்று கல்யாணத்தை நிறுத்தும் பேர்வழிகள், நிறைய பேரை நாம் பார்த்திருக்கிறோம். கார் வாங்கும் விஷயத்திலும் இப்படி பலர் இருக்கிறார்கள். கார் வாங்கும் முன் கவனத்துக்குரிய விஷயங்களை அடுக்கிறது 'கார் வாங்குவது எப்படி?' தொடரின் `அவசர புக்கிங்... சிக்கலில் தள்ளும்!' எனும் பகுதி. 

தரமான ரிப்போர்ட்ஸ்: 8 நிமிட வாசிப்பில் மோட்டார் விகடனின் 12 பதிவுகள்!

முதல் பார்வை: பெரிய பைக்குகளுக்குப் போட்டியாக நிற்கும் ஏஸ் டீலக்ஸ், நேரில் பார்க்க 125சிசி பைக்கின் அளவில்தான் இருக்கிறது. எல்லா பாகங்களும் கறுப்பு நிறத்தில் இருக்க, பைக்கின் Matte Black நிறம் அதற்குச் செம பொருத்தம். 14 லிட்டர் பெட்ரோல் டேங்க்கை டிசைன் செய்ய மெனக்கெடவில்லை. ஃபெண்டர்களின் டிசைனும் சிம்பிள்தான். ஃபிளாட்டான சீட்டின் மீது விலா எலும்புபோல வரிவரியாக டிசைன் செய்திருக்கிறார்கள். சீட்டின் அகலம், நீளம், உயரம் எல்லாமே குறைவு. பின்பக்கம் பிடித்துக்கொள்ள கிராப் ரெயில் (கைப்பிடி) கிடையாது. கிராப் ரெயிலுக்குப் பதில் சீட் ஸ்ட்ராப் வைக்கப்பட்டிருக்கிறது. சீட்டின் உயரமும் நீளமும் குறைவு என்பதால், பருமனான ரைடர்கள் சீட் ஸ்ட்ராப் மீதுதான் உட்கார வேண்டியுள்ளது. ஹெட்லைட், இண்டிகேட்டர், மிரர், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் என எல்லாமே ரெட்ரோ லுக் தரும் ரவுண்டு டிசைன். 

- இந்த முதல் பார்வையுடன் வசதிகள் மற்றும் தரம், ஓட்டுதல் அனுபவம், விலை உள்ளிட்ட அம்சங்கள் குறித்த ஃபர்ஸ்ட் ரைடு ரிப்போர்ட்: `க்ளீவ்லேண்ட் ஏஸ் டீலக்ஸ்... டீலக்ஸா? சாதாவா?' - சீனாவில் தயாராகி, CKD முறையில் இந்தியச் சாலையைத் தொட்டிருக்கும் அமெரிக்க நிறுவனமான க்ளீவ்லேண்டின் ஏஸ் டீலக்ஸ், 200-300சிசி பைக்குகளின் ஆடு-புலி ஆட்டத்தில் புலியா, ஆடா? என்பதை இந்த ரிப்போர்ட்டில் தெரிந்துகொள்ளலாம்.

தரமான ரிப்போர்ட்ஸ்: 8 நிமிட வாசிப்பில் மோட்டார் விகடனின் 12 பதிவுகள்!

ரேஸ் லைசென்ஸ் எடுத்தவுடன் நீங்கள் முழுமையான ரேஸர்தானா என்றால்... ஆம்! லைசென்ஸ் எடுத்த அடுத்த நிமிடம் முதல், உங்களுக்குள் ஒரு தன்னம்பிக்கையும் புத்துணர்ச்சியும், ஆர்வமும் வேகமும் எக்ஸ்ட்ரா rpm-ல் எகிறியடிக்கும். எனக்கும் அப்படித்தான் முதல் உணர்வு ஏற்பட்டது. இப்போது நீங்கள், FMSCI-யால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அக்மார்க் ரேஸர். ஆனால், இனிதான் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

சாதாரண லைசென்ஸ் எடுப்பதுபோல், ரேஸிங் லைசென்ஸ் எடுப்பதற்கு `8' போட்டோல்லாம் காட்ட வேண்டியதில்லை. ஆனால், அதைத் தாண்டிச் சில விஷயங்கள் உண்டு. முறைப்படி சில அகாடமிகளில் நீங்கள் பயிற்சி எடுத்ததற்கான சான்றிதழைக் காட்ட வேண்டும். உங்கள் டிரைவிங் லைசென்ஸையும் காண்பிக்க வேண்டும். பயிற்சியாளரின் கையொப்பம் வேண்டும். அப்படியென்றால், ரேஸர் ஆவதற்கு முதல் படி - பெருநகரங்களில் உள்ள ஏதாவது ஒரு ரேஸிங் அகாடமியில் சேர்ந்து பயிற்சி எடுப்பதுதான். 

- உண்மையான ரேஸ் விரும்பிகளுக்கு முறைப்படி வழிகாட்டுகிறது 'ரேஸ்' தொடரின் 'ரேஸ் லைசென்ஸ் எடுங்க... கொண்டாடுங்க!' பகுதி. 

தரமான ரிப்போர்ட்ஸ்: 8 நிமிட வாசிப்பில் மோட்டார் விகடனின் 12 பதிவுகள்!

ஓட்டுதல் அனுபவம்: சீராகச் செல்லும் வாழ்க்கையில் பிரச்னைகள் வருவதுபோல, பெர்ஃபாமென்ஸ் பைக்குகளுக்கு இடைஞ்சலைத் தருவது நம் ஊர் சாலைகள்தான். ரேஸ் டிராக்குகளை மனதில் வைத்துத் தயாரிக்கப்பட்டிருக்கும் நின்ஜா 300, ஓரளவுக்குச் சிறப்பாகவே செயல்படுகிறது. 

இங்கிருக்கும் பைக்கிலே இந்திய சாலைகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டிருக்கும் பைக் எது என்றால், அது நிச்சயம் இன்டர்செப்டர் 650 பைக்தான். கரடுமுரடான சாலைகளில் செல்ல நேர்ந்தாலும், அதை அசால்ட்டாகச் சமாளித்துவிடுகிறது பைக்கின் சஸ்பென்ஷன். 

'Precision Sharpness' 'எனும் வார்த்தைக்கு, கேடிஎம் டியூக் 390 அர்த்தம் தந்திருக்கிறது. ஓட்டுதல் அனுபவத்தில் இது எதிர்பார்த்தபடியே அசத்துகிறது என்றாலும், ரைடரை எந்நேரமும் துடிப்பாக வைத்திருப்பதும் இதுதான்.

-  2.8 - 3.8 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் பைக் வாங்க விரும்புவோருக்கு, கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்க பைக்குகளாக இருப்பவை என்ற முறையில், இவற்றை ஒப்பிட்டுப் பார்க்க முடிவு செய்தபோது கிடைத்த ரிப்போர்ட்டை 'நின்ஜா 300 VS டியூக் 390 VS இன்டர்செப்டர் 650 - ஒவ்வொன்றும் ஒரு தினுசு... எது ரவுசு?' எனும் ஒப்பீட்டு அலசலில் விரிவாகக் காணலாம். 

தரமான ரிப்போர்ட்ஸ்: 8 நிமிட வாசிப்பில் மோட்டார் விகடனின் 12 பதிவுகள்!

ஸ்டைல்: ட்ரையம்ப் செய்திருக்கும் ஸ்டைல் மாற்றங்களைக் கவனிக்க கூர்மையான கண்கள் தேவை. ஸ்ட்ரீட் ட்வின் பைக்கின் டிசைன் காந்தம் போன்றது. அருகில் சென்றால் மெய்மறந்து ஒட்டிக்கொள்வோம். அதனாலேயே ஸ்டைலில் பெரிய வித்தியாசங்கள் காட்டாமல் சின்னச் சின்ன விஷயங்களை மட்டும் மாற்றியிருக்கிறார்கள். வீல்களுக்கு Machined design கொடுத்திருப்பதும், இன்ஜின் ஃபின்ஸ் தவிர மற்ற எல்லா இடங்களிலும் கறுப்பு வண்ணம் பூசப்பட்டிருப்பதும் பொருத்தமாக இருக்கிறது. இது பைக்கின் தரத்தை உயர்த்திக் காட்டுகிறது. சில்வர் நிறத்தில் இருக்கும் Single Pod இன்ட்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் முழுக்க கறுப்பு நிறத்துக்கு மாறிவிட்டது. சைடு பேனல் டிசைனையும் மாற்றி விட்டார்கள். Brushed Aluminium ஹெட்லைட் Brace மற்றும் சைடு மிரர்களின் தரம் உயர்ந்துள்ளது. பிரேக் மற்றும் க்ளட்ச் லீவர்கள் அட்ஜஸ்ட் செய்துகொள்ளக் கூடியதாக மாற்றப்பட்டிருக்கின்றன.

- ஸ்டைல் உடன் வசதிகள், இன்ஜின், ரைடிங் ஆகிய தன்மைகளுடன் புதிய ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்வினை யார் வாங்கலாம்? என்ற கேள்விக்கும் விடை சொல்கிறது, `சிறப்பான, தரமான ட்ரையம்ப் காத்திருக்கு!' எனும் ஃபர்ஸ்ட் ரைடு ரிப்போர்ட்.

இம்மாத மோட்டார் விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க: https://bit.ly/2I4O9Qm