Published:Updated:

டியூக், G310R, இன்டர்செப்டாரை விட குறைவான விலையில் வந்துவிட்டது ஹோண்டா CB300R!

டியூக், G310R, இன்டர்செப்டாரை விட குறைவான விலையில் வந்துவிட்டது ஹோண்டா CB300R!
டியூக், G310R, இன்டர்செப்டாரை விட குறைவான விலையில் வந்துவிட்டது ஹோண்டா CB300R!

ஹோண்டா தனது CB300R பைக்கை விற்பனைக்குக் கொண்டுவந்துவிட்டது. முதல் முறையாக இந்தியச் சந்தையில் 300cc ஸ்ட்ரீட் பைக்கைக் களமிறக்கியுள்ளது ஹோண்டா. 8 ஆண்டுகளுக்கு முன்பு CB250R பைக்கை CKD முறையில் விற்பனைக்குக் கொண்டுவந்தது போல CB300R பைக்கையும் CKD முறையில் கொண்டுவந்திருக்கிறார்கள். 

ரூ.2.41 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில், கேடிஎம் டியூக் 390-யை விட 3 ஆயிரம் ரூபாய் குறைவான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது CB300R. இந்த பைக் ஹோண்டாவின் ப்ரீமியம் பைக்குகள் விற்பனை செய்யப்படும் 22 ஷோரூம்களில் மட்டுமே கிடைக்கும். பைக்கை முன்பதிவு செய்பவர்களுக்கு மார்ச் மாதம் முதல் டெலிவரி தொடங்கும் என்று கூறியிருக்கிறார்கள். முன்பதிவுக் கட்டணம் 5000 ரூபாய். `Sports Cafe' என்ற ரெட்ரோ ஸ்டைலில் வரும் முதல் 300cc பைக் இதுதான். 

CB300R-ல் LED ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், IMU-ABS சிஸ்டம் இருக்கின்றன. வளைவுகளில் பிரேக் பிடிக்கும்போதும் டிஸ்க் பிரேக் லாக் ஆகாமல் பாதுகாப்பானதாக மாற்றுகிறது IMU சிஸ்டம்.

இந்த பைக்கில் 286cc சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் உள்ளது. 4 வால்வ், லிக்விட் கூல்ட், DOHC இன்ஜின், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 30.4bhp@8500rpm பவர் மற்றும் 27.4Nm@6500rpm டார்க்கை வெளிப்படுத்தக்கூடியது. முன்பக்கம் USD ஃபேர்க்கும், பின்பக்கம் ப்ரீஅட்ஜஸ்டபிள் மோனோஷாக் சஸ்பென்ஷனும் இருக்கின்றன. பிரேக்கைப் பொறுத்தவரை 4 பிஸ்டன் கேளிப்பர் டிஸ்க் பிரேக் முன்பக்கமும், 2 பிஸ்டன் கேளிப்பர் டிஸ்க் பின்பக்கமும் உள்ளது.

பவர் குறைவு என்ற வருத்தத்தை பைக்கின் 147 கிலோ எடை ஓரளவுக்குச் சரிசெய்கிறது. செக்மன்டிலேயே எடை குறைவான பைக்குகளில் ஒன்று CB300R. 10 லிட்டர் பெட்ரோல் டேங்க் இதில் உள்ளது. டியூக் 390, G310R மற்றும் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 பைக்குகளுடன் இது போட்டிபோடுகிறது. கிரே மற்றும் சிவப்பு என இரண்டு நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது CB300R. 

இந்த ஆண்டு இன்னும் என்னென்ன பைக்குகள் விற்பனைக்கு வரப்போகின்றன...ஒரு சின்ன டீசர் இதோ - https://bit.ly/2DjGZCw