Published:Updated:

XUV300 ஏன் வாங்கலாம், ஏன் வாங்கக் கூடாது... 5 காரணங்கள்!

XUV300 ஏன் வாங்கலாம், ஏன் வாங்கக் கூடாது... 5 காரணங்கள்!

XUV300 ஏன் வாங்கலாம், ஏன் வாங்கக் கூடாது... 5 காரணங்கள்!

XUV300 ஏன் வாங்கலாம், ஏன் வாங்கக் கூடாது... 5 காரணங்கள்!

XUV300 ஏன் வாங்கலாம், ஏன் வாங்கக் கூடாது... 5 காரணங்கள்!

Published:Updated:
XUV300 ஏன் வாங்கலாம், ஏன் வாங்கக் கூடாது... 5 காரணங்கள்!

மஹிந்திரா XUV500-ன் சின்னதம்பி XUV300, விற்பனைக்கு வந்துவிட்டது. ஸாங்யாங் டிவோலியின் அதே x100 பிளாட்ஃபார்மில் தயாராகியிருக்கும் XUV300, 4 மீட்டருக்குட்பட்ட 5 சீட்டர் எஸ்யூவி. விட்டாரா ப்ரெஸ்ஸா, எக்கோ ஸ்போர்ட் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு போட்டியாகக் களமிறங்கியிருக்கும் XUV 300 காரை ஏன் வாங்கலாம், ஏன் வாங்கக் கூடாது என்பதற்கு 5 காரணங்களைப் பார்ப்போம்.

ஏன் வாங்கலாம்?

1. பில்டு குவாலிட்டி - ஸாங்யாங் டிவோலியின் X100 பிளாட்ஃபார்மில் இந்த எஸ்யூவி தயாராகியுள்ளது. அதிவேகங்களில், கார்னரிங்கில் என எல்லா இடங்களிலும் டிவோலியின் கட்டுமானத் தரத்தை உணர முடிகிறது. கிரில், பம்பர் போன்றவை எல்லாமே டிவோலியின் இன்ஸ்பிரேஷன்தான். அதேநேரம் `டிவோலியின் ஜெராக்ஸ்’ என்று யாரும் சொல்லிவிடக் கூடாது என்று மஹிந்திரா முனைப்புடன் செயல்பட்டிருக்கிறது. இதனால் XUV300 டிசைனில் தனித்துவமும் தெரிகிறது. கட்டுமஸ்தாக இருக்கிறது XUV300. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2. பாதுகாப்பு - விலை உயர்ந்த ஹூண்டாய் க்ரெட்டாவில்கூட 2 டிஸ்க் பிரேக் மட்டும்தான். ஆனால், XUV300-ல் 4 டிஸ்க் பிரேக் உள்ளன. காம்பாக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில் எக்கோ ஸ்போர்ட் பாதுகாப்பில் உசத்தி என்பார்கள். எக்கோஸ்போர்ட்டில்கூட 6 ஏர்பேக்தான். ஆனால், XUV-ல் 7 ஏர்பேக் உண்டு. கூடவே, ஏபிஎஸ், எலக்ட்ரிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன், ஹில் அசிஸ்ட், டிராக்‌ஷன் கன்ட்ரோல் எனத் தற்போது பாதுகாப்பில் உசத்தியான கார் XUV300.

3. க்ரெட்டாதான் செக்மென்ட்டின் பெரிய காராக இருந்தது. ஆனால், க்ரெட்டாவைவிட  அகலம், வீல்பேஸ் என எல்லாமே XUV-யில் அதிகம். இடவசதியும் க்ரெட்டாவைவிட அதிகமாகவே உள்ளது. 

4.  XUV 300-ல் ஏகப்பட்ட செக்மென்ட் ஃபர்ஸ்ட் வசதிகள் உள்ளன. வழக்கமாக டிரைவிங் மோடுதான் பார்த்திருப்போம். ஆனால், XUV-ல் ஸ்டிரிங் மோடு உள்ளது. 17 இன்ச் அலாய் வீல், டூயல் ஸோன் கிளைமேட் கன்ட்ரோல், ஸ்மார்ட் கீ, ஸ்மார்ட் வாட்ச் போன்ற வசதிகளை முதல் முறையாகக் கொடுத்துள்ளது மஹிந்திரா. ஸ்மார்ட் வாட்ச் வைத்திருந்தால் காரின் பல விஷயங்களை மணிக்கட்டிலிருந்தே கன்ட்ரோல் பண்ணலாம்.  


5. மஹிந்திரா மராத்ஸோவில் இருக்கும் அதே 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் XUV300-ன் ப்ளஸ். 115bhp பவர் கொண்ட இந்த இன்ஜினில் டர்போலேக்கை கட்டுப்படுத்தியுள்ளார்கள். மராத்ஸோவைவிட XUV எடை குறைவு என்பதால் பெர்ஃபாமன்ஸ் அசத்தல். 2,000 rpm தாண்டிவிட்டால், 3,500 வரை `கிர்’ரென பறக்கிறது. ஓவர்டேக் செய்து ஓட்டுவதற்குச் சிறப்பாக உள்ளது. 150 கி.மீ வேகம் வரை சென்றபோது காரின் கையாளுமையும் நிலைத்தன்மையும் கைதட்ட வைக்கிறது. ஸ்டீரிங் மோடுக்கும் டிவோலி சேஸிக்கும் நன்றி.

ஏன் வாங்க வேண்டாம்?

1. டர்போலாக் கட்டுப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், டர்போலேக் இல்லாமல் இல்லை. டீசல் இன்ஜினுக்கு இன்னும் சுறுசுறுப்பு தேவை. இன்ஜினின் ஆரம்ப அதிர்வுகள் பழைய மஹிந்திரா இன்ஜின்களை நினைவுபடுத்துகின்றன.

2. இன்டீரியர் ரிச்சாகத் தெரிந்தாலும் பல இடங்களில் விலை குறைவான பிளாஸ்டிக் பயன்படுத்தியிருப்பது தெரிகிறது. ஏ.சி பட்டன்கள், கொஞ்சம் குறுகலாக, பயன்படுத்துவதற்கு வசதியாக இல்லை. சிவப்பு நிற ஏ.சி ஸ்க்ரீன் அலாரம் லைட் போலத்தான் இருக்கிறது.

3. எர்கானாமிக்ஸ் குறைபாடு சில இடங்களில் உள்ளன. கியர் போடும்போது லீவர் சென்ட்ர் ஆர்ம்ரெஸ்ட்டில் இடிப்பது பெரிய குறை. சென்டர் ஆர்ம்ரெஸ்ட்டும் கியர் லீவரும் உயரமாக இருப்பது உறுத்தலாகவும் இடைஞ்சலாகவும் இருக்கின்றன. எலாஸ்டிக் ஸ்டைல் பாக்கெட் பயன்படுத்துவதற்கு வசதியாக இல்லை. டேஷ்போர்டு கன்ட்ரோல்களிலும் எர்கானாமிக்ஸ் முன்னேற வேண்டும்.

4. காரின் உள்பக்கம்  ஏகப்பட்ட இடவசதியும், ஸ்டோரேஜ் வசதியும் கொடுத்த மஹிந்திரா பூட் ஸ்பேஸில் மொத்தமாக ஏமாற்றிவிட்டது. XUV300-ல் பூட் ஸ்பேஸ் வெறும் 265 லிட்டர்தான். க்ரெட்டாவில் 400 லிட்டர், பிரெஸ்ஸாவில் 328 லிட்டர், எக்கோஸ்போர்ட்டில் 346 லிட்டர் பூட் ஸ்பேஸை ஒப்பிடும்போது இது குறைவான அளவு. குறைவான ஸ்பேஸ் மட்டுமில்லை Loading Bay-ன் உயரமும் அதிகம். 

5. KUV100 காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினில் டர்போசார்ஜ் பொருத்தி தற்போது 110bhp வரை பவர் உயர்த்திக் கொடுத்துள்ளார்கள். இது 3 சிலிண்டர் இன்ஜின் என்பதால் வைப்ரேஷன் இருக்கிறது. ஐடிலிங் ஸ்மூத்தாக இருந்தாலும் கிர்ர்ர் என்ற சத்தம் உறுத்துகிறது. பவர் டெலிவரி இன்னும் சீராக இருந்திருக்கலாம். டர்போலேக்கும் இருக்கிறது. ஃபோர்டின் 1.0 லிட்டர் எக்கோ பூஸ்ட் இன்ஜின் அளவு சிறப்பாக இல்லை. பெட்ரோலா, டீசலா என்றால் டீசல்தான் எங்கள் தேர்வு.