Published:Updated:

ஃபோக்ஸ்வேகன் முன்னாள் தலைவர் வின்டர்கோர்ன் மீது மோசடி வழக்கு...சிக்கியது ஆதாரம்!

ஃபோக்ஸ்வேகன் மீது இதுவரை 75,000 பக்கங்கள்கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்துள்ளார்கள். முன்னால் இயக்குநருடன் சேர்த்து 4 பேர் மீது வெவ்வேறு புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் முன்னாள் தலைவர் வின்டர்கோர்ன் மீது மோசடி வழக்கு...சிக்கியது ஆதாரம்!
ஃபோக்ஸ்வேகன் முன்னாள் தலைவர் வின்டர்கோர்ன் மீது மோசடி வழக்கு...சிக்கியது ஆதாரம்!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், தனது டீசல் கார்களின் எமிஷன் டெஸ்ட்டில் பொய் தகவல்களைத் தருவதற்காக 'defeat device' என்ற கருவியைப் பொருத்திய வழக்கு, இன்னும் ஜெர்மனியில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கின் புதிய திருப்பமாக, இந்நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வின்டர்கோர்ன் மீது மோசடி வழக்கு சுமத்தப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் முன்னாள் தலைவர் வின்டர்கோர்ன் மீது மோசடி வழக்கு...சிக்கியது ஆதாரம்!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தயாரித்த பல கோடி டீசல் கார்களில், எமிஷன் டெஸ்ட்டை ஏமாற்றும் கருவியை பொருத்தியதாக 2015-ம் ஆண்டு ஒப்புக்கொண்டது. இதனால், அத்தனை கார்களையும் இந்நிறுவனம் ரீகால் செய்ய நேர்ந்தது மட்டுமில்லாமல், அமெரிக்காவில் பல கோடி டாலர்களை அபராதமாகவும் செலுத்தியது. ஜெர்மனியில் நடைபெற்று வரும் இந்த வழக்கில், ஃபோக்ஸ்வேகனின் முன்னாள் இயக்குநர் மார்ட்டின் வின்டர்கோர்ன் மீது குற்றத்தை மறைத்ததற்கான மோசடி வழக்கு பதியப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரம் இருப்பதாகவும் வழக்கறிஞர்கள் கூறியுள்ளார்கள்.

ஃபோக்ஸ்வேகன் முன்னாள் தலைவர் வின்டர்கோர்ன் மீது மோசடி வழக்கு...சிக்கியது ஆதாரம்!

டீசல் இன்ஜின்களில் பொருத்தப்பட்ட கருவிக்கு சாஃப்ட்வேர் அப்டேட் செய்ய, ''23 மில்லியன் யூரோ'' தொகையை அளிப்பதற்கு வின்டர்கோர்ன் ஒப்புதல் கொடுத்துள்ளார். இந்த ஆதாரத்தை அடிப்படையாக வைத்தே மோசடி வழக்கு பதியப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், 6 மாதம் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என்று கூறுகிறார்கள். 71 வயதான வின்டர்கோர்ன் மீது, அமெரிக்காவிலும் கடந்த ஆண்டு மோசடி வழக்கு பதிவுசெய்யப்பட்டது.  

ஃபோக்ஸ்வேகன் முன்னாள் தலைவர் வின்டர்கோர்ன் மீது மோசடி வழக்கு...சிக்கியது ஆதாரம்!

ஃபோக்ஸ்வேகன் மீது இதுவரை 75,000 பக்கங்கள்கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்துள்ளார்கள். இந்நிறுவனத்தின் முன்னாள் இயக்குநருடன் சேர்த்து, தற்போது 4 பேர் மீது வெவ்வேறு புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இன்னும் 36 பேர்மீது வழக்குப் பதிய வேண்டுமா, வேண்டாமா என்ற சந்தேகம் உள்ளதாகவும் வழக்கறிஞர்கள் தெரிவிக்கிறார்கள்.