Published:Updated:

வரப்போகிறது விலை குறைவான டிவிஎஸ் என்டார்க்...இந்த வசதிகள் மட்டும் மிஸ்ஸிங்!

வரப்போகிறது விலை குறைவான டிவிஎஸ் என்டார்க்...இந்த வசதிகள் மட்டும் மிஸ்ஸிங்!
வரப்போகிறது விலை குறைவான டிவிஎஸ் என்டார்க்...இந்த வசதிகள் மட்டும் மிஸ்ஸிங்!

ஸ்கூட்டி சீரிஸ், வீகோ, ஜூபீட்டரைத் தொடர்ந்து தனது நான்காவது ஸ்கூட்டரான என்டார்க் 125-யை, கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் களமிறக்கியது டிவிஎஸ். பவர்ஃபுல் என்ஜின், முன்புற பெட்டல் டிஸ்க் பிரேக், ஸ்போர்ட்ஸ் பைக் போன்ற டிசைன், அதிக சிறப்பம்சங்கள் என அசத்தியதால், இதன் விற்பனையில் வெற்றியை ருசித்துவிட்டது டிவிஎஸ். இந்நிலையில் தற்பொழுது என்டார்க்கின் டிரம் பிரேக் வேரியன்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது இந்நிறுவனம்.

வரப்போகிறது விலை குறைவான டிவிஎஸ் என்டார்க்...இந்த வசதிகள் மட்டும் மிஸ்ஸிங்!

மாற்றங்கள் என்னென்ன?

இந்த மாடலின் தோற்றத்தில் எவ்வித மாற்றமும் இல்லை; அதே வண்ணங்களிலே இதுவும் விற்பனை செய்யப்படும். முன்புறத்தில் டிஸ்க் பிரேக்கிற்குப் பதிலாக டிரம் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. 125cc ஸ்கூட்டர் என்பதால் டிஸ்க் மாடல் போலவே இதிலும் காம்பி பிரேக் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. டிசைன் போலவே என்டார்க்கின் இன்ஜினிலும் மாற்றமில்லை. இந்த ஸ்கூட்டரில் இருக்கும் 3 வால்வ் - 124.8சிசி இன்ஜின், 9.4bhp சக்தியைக் கடத்துகிறது. இதனால் டிரம் பிரேக் மாடலும் 95கிமீ வேகம் வரை செல்லும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

மைனஸ் என்ன? 

விலை குறைப்புக்காக டிரம் பிரேக் மாடலில் இன்ஜின் கில் சுவிட்ச், அண்டர் சீட் LED லைட், USB மொபைல் சார்ஜிங் பாயின்ட் போன்ற வசதிகளை டிவிஎஸ் நீக்கியது ஏமாற்றமளிக்கிறது. இவற்றுக்குப் பதிலாக என்டார்க்கின் டிஜிட்டல் மீட்டரில் இருக்கும் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி, GPS நேவிகேஷன், கால் மற்றும் மெசேஜ் அலர்ட், போனின் சிக்னல் மற்றும் பேட்டரியைத் தெரிந்துகொள்ளும் வசதி, லொக்கேஷன் அசிஸ்ட், Auto Reply SMS போன்ற அட்வான்ஸ்ட் வசதிகளில் சிலவற்றை நீக்கியிருக்கலாம். ஏனெனில் இந்த ஸ்கூட்டரை ஓட்டும் அனைவரும், தினசரி அவற்றைப் பயன்படுத்துகிறார்களா என்பது சந்தேகமே.

வரப்போகிறது விலை குறைவான டிவிஎஸ் என்டார்க்...இந்த வசதிகள் மட்டும் மிஸ்ஸிங்!

இந்த எக்கனாமிக்கல் என்டார்க்கின் விலை? 

அறிமுகமான 7 மாதத்திலேயே 1 லட்சம் வாகனங்களுக்கு மேல் விற்பனையானதை வைத்துப் பார்க்கும்போதே, என்டார்க்கின் வெற்றியைப் புரிந்துகொள்ள முடிகிறது. டிரம் மாடலின் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை 62,712 ரூபாய்; இது டிஸ்க் மாடலைவிட 5,000 ரூபாய் குறைவு! ஆனால் டெல்லியில் என்டார்க்கின் டிஸ்க் மற்றும் டிரம் மாடலுக்கு இடையேயான விலை வித்தியாசம் வெறும் 1,648 ரூபாய்தான்! எனவே பிரிமியம் வசதிகளும், கூடுதல் பாதுகாப்பும் வேண்டும் என்பவர்களுக்கு டிஸ்க் மாடலும், விலை குறைவான என்டார்க் வேண்டும் என்பவர்களுக்கு டிரம் மாடலும் சரியான சாய்ஸாக இருக்கும். 

Vikatan