Published:Updated:

ஹோண்டாவின் புதிய ஸ்கூட்டரில் பிஎஸ்-VI மட்டுமல்ல...இன்னும் சில சர்ப்ரைஸ்!

ஜெஃப்பிரின் ஆல்டோ.ஜோ
ஹோண்டாவின் புதிய ஸ்கூட்டரில் பிஎஸ்-VI மட்டுமல்ல...இன்னும் சில சர்ப்ரைஸ்!
ஹோண்டாவின் புதிய ஸ்கூட்டரில் பிஎஸ்-VI மட்டுமல்ல...இன்னும் சில சர்ப்ரைஸ்!

பிஎஸ்-VI மாசு கட்டுப்பாட்டு விதிமுறை ஏப்ரல் 2020-ல் இருந்து அமலுக்கு வரவுள்ள நிலையில், பல கார்கள் மற்றும் பைக் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது வாகனங்களின் இன்ஜின்களை மேம்படுத்திவருகிறார்கள். கார்களில் முதலாவதாக மாருதி களமிறங்கியதுபோல பைக்குகளில் ஹோண்டா களமிறங்கியுள்ளது. ஹோண்டா தனது முதல் பிஎஸ்-VI ஸ்கூட்டரை ஜூன் 12 -ம் தேதி அறிமுகப்படுத்த உள்ளதாகத் தகவல் வந்துள்ளது. 

ஹோண்டாவின் புதிய ஸ்கூட்டரில் பிஎஸ்-VI மட்டுமல்ல...இன்னும் சில சர்ப்ரைஸ்!

இந்தப் புதிய ஸ்கூட்டருக்கு "PLEASE HOLD A PIN DROP SILENCE" எனும் டேக்லைனைக் கொடுத்துள்ளது ஹோண்டா. சத்தம் இல்லாமல் பயணிக்கும் என்பதைக் குறிக்கும் இந்த டேக்லைனை வைத்து, இது ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கலாம் என்று யூகிக்கலாம். ஆனால், இது எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான நேரம் இல்லை என்பதால், ஹோண்டா பிஎஸ்-VI ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தும் என்று தோன்றுகிறது. மேலும், குறிப்பிடப்பட்டுள்ள  சைலென்ஸ் என்பது, ஸ்மூத்தாக  மற்றும் அதிக சத்தம் இல்லாமல் பயணிப்பது என்பதை உணர்த்துவது. இதனால், புதிய ஸ்கூட்டரில் இன்ஜினில் ஃபியூயல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்க வாய்ப்புகள் உண்டு.

புதிய ஆக்டிவா, அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், வரவிருக்கும் புதிய ஸ்கூட்டர், ஒரு 125சிசி ஸ்கூட்டராக இருக்கலாம். தற்போது டிவிஎஸ் என்டார்க், சுஸுகி பர்கமேன், ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் என 125சிசி ஸ்கூட்டர் செக்மென்ட்டில் வரிசைகட்டி, போட்டியாளர்கள் இறங்கும் நிலையில் ஹோண்டா இந்த செக்மென்ட்டில் கவனம் செலுத்த அதிக வாய்ப்பு உண்டு. ப்ளூடூத் வசதியும் கிடைக்கலாம். இந்த புதிய ஸ்கூட்டர், ஹோண்டாவில் மட்டுமல்லாது இந்தியாவில் முதல் பிஎஸ்-VI டூ வீலர் என்ற பெருமையையும் தட்டிச்செல்லும் போல.

Vikatan