இந்த ஆண்டில் தனது மூன்றாவது வெற்றியைப் பதிவுசெய்து, சாம்பியன்ஷிப் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறி இருக்கிறார், நடப்பு சாம்பியன் செபாஸ்டியன் வெட்டல். மொனாக்கோவில் நடைபெற்ற ரேஸில், மெர்சிடீஸ் அணியின் நிக்கோ ராஸ்பெர்க் வெற்றி பெற, கனடாவில் வெட்டல் வெற்றி பெற்றிருக்கிறார். இரண்டு ரேஸிலும் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஃபெர்னாண்டோ அலான்சோ பின் தள்ளப்பட்டு இருக்கிறார்.

மொனாக்கோ

உலகின் மிகச் சவாலான ரேஸ் டிராக் என வர்ணிக்கப்படும் மொனாக்கோவில், கடந்த மே 26-ம் தேதி, 2013 ஃபார்முலா-1 சீஸனின் ஆறாவது ரேஸ் போட்டி நடைபெற்றது. வெறும் இரண்டு கிலோ மீட்டருக்கும் கொஞ்சம் அதிகமான பரப்பளவைக்கொண்ட சின்ன நாடு மொனாக்கோ. இதில், பெரிய ரேஸ் டிராக் கட்டுவதற்குப் பதில், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சாலையில் ரேஸ் நடக்கும். அப்போது, டிராஃபிக்கை நிறுத்திவிட்டு மூன்று நாட்கள் ரேஸ் நடத்துவதுதான் வழக்கம். வெள்ளி, சனி, ஞாயிறு என்பதற்குப் பதில் இங்கு வியாழன், சனி, ஞாயிறு என ரேஸ் காலண்டர் மாறிவிடும். சாதாரணச் சாலைகள் என்பதால், ஆபத்தான வளைவு, நெளிவுகள் அதிகம். அதனால்தான் ரேஸ் வீரர்களுக்கு இது மிகவும் சவாலான ரேஸ் டிராக்காக விளங்குகிறது.

மொனாக்கோ ரேஸுக்கான தகுதிச் சுற்றில், மெர்சிடீஸ் அணியின் நிக்கோ ராஸ்பெர்க் முதல் இடம் பிடித்தார். லூயிஸ் ஹாமில்ட்டன் இரண்டாம் இடமும், செபாஸ்ட்டியன் வெட்டல் மூன்றாம் இடமும் பிடித்தனர். மொனாக்கோ ரேஸில் வழக்கமான விபத்துப் படலம், முதல் லேப்பிலேயே துவங்கியது. ரேஸ் துவங்கிய சில விநாடிகளிலேயே கேட்டர்ஹாம், வில்லியம்ஸ் - ரெனோ, சஹாரா ஃபோர்ஸ் இந்தியா அணிகளின் கார்கள் மோதிக் கொண்டன.

28-வது லேப்பின்போது, விபத்தில் சிக்கி ரேஸில் இருந்து வெளியேறினார் ஃபெராரி அணியின் ஃபிலிப் மாஸா. அதனைத் தொடர்ந்து 44-வது லேப்பின்போது, மீண்டும் பெரிய விபத்து. வில்லியம்ஸ் - ரெனோ அணியின் பாஸ்டர் மால்டொனால்டோவின் காரும், காஸ்வெர்த் காரின் மேக்ஸ் சில்ட்டனின் காரோடு மோத, மால்டொனால்டோவின் கார் மூன்று அடி உயரத்துக்கும் மேலே பறந்து ரேஸ் டிராக்கையே களேபரமாக்கியது. இந்த விபத்தின் காரணமாக ரேஸ் 20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. 22 ரேஸ் வீரர்களோடு துவங்கிய போட்டியின் இறுதிக் கட்டத்தில், ஏழு வீரர்கள் விபத்து மற்றும் பல்வேறு காரணங்களால் ரேஸைவிட்டு வெளியேறினர். மொத்தம் 78 லேப்புகள் கொண்ட மொனாக்கோ ரேஸின் இறுதியில், ரேஸை முதல் இடத்தில் இருந்து துவக்கிய நிக்கோ ராஸ்பெர்க் வெற்றி பெற்றார். இவரை விட 3.8 விநாடிகள் பின்தங்கிய செபாஸ்ட்டியன் வெட்டல் இரண்டாம் இடமும், ரெட்புல் அணியின் மற்றொரு வீரர் மார்க் வெப்பர் மூன்றாம் இடமும் பிடித்தனர்.

கனடா

ஃபார்முலா-1 ரேஸ் பந்தயத்தின் ஏழாவது ரேஸ் போட்டி, கனடாவின் மாண்ட்ரீல் நகரில் ஜூன் 9-ம் தேதி நடைபெற்றது. மொனாக்கோ ரேஸ் டிராக் போன்றே கனடாவின் ரேஸ் டிராக்குக்கும் தனிச் சிறப்பு உண்டு. புனித லாரன்ஸ் நதியின் மேல் செய்ற்கையாக உருவாக்கப்பட்ட 'லே- நேட்ரி டேம்’ எனும் தீவில்தான் இந்த ரேஸ் டிராக் அமைந்துள்ளது. தகுதிச் சுற்றில் வெற்றி பெற்ற செபாஸ்ட்டியன் வெட்டல் முதல் இடத்தில் இருந்தும், மெர்சிடீஸ் அணியின் லூயிஸ் ஹாமில்ட்டன் இரண்டாவது இடத்தில் இருந்தும், வில்லியம்ஸ் அணியின் வேல்ட்டரி பொத்தாஸ் மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கத் தகுதி பெற்றனர்.

ஒரு பக்கம் ரேஸ் விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்க, யாரும் எதிர்பாராத வகையில் விபத்து ஒன்று ஏற்பட்டது. மொத்தம் 70 லேப்புகள்கொண்ட இந்த ரேஸ் போட்டியின் 63-வது லேப்பின்போது, சாபர் அணியின் எஸ்தபன் குத்ரேஸின் கார் விபத்தில் சிக்கியது. ரேஸ் டிராக்கில் இடையூறாக நின்ற அந்த காரை அகற்ற, மொபைல் கிரேன் வரவழைக்கப்பட்டது. ரேஸைக் கண்காணிக்கும் மார்ஷல்களில் ஒருவரான மார்க் ராபின்சன், மொபைல் கிரேன் காரை அகற்றும்போது பக்கத்தில் நின்று அதைக் கவனித்துக்கொண்டு இருந்தார். அப்போது, அவர் கையில் வைத்திருந்த ரேடியோ தவறிக் கீழே விழ... அதை எடுக்கக் குனிந்தபோது, கிரேன் எதிர்பாராத விதமாக மார்க் ராபின்சனின் தலையில் வேகமாக முட்டியது. ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட மார்க் ராபின்சன், பிறகு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த விபத்துக்குப் பின்பு, தொடர்ந்து ரேஸ் நடைபெற்றது. இதில், ரெனோ அணியின் செபாஸ்ட்டியன் வெட்டல் வெற்றி பெற, ஃபெராரியின் ஃபெர்னாண்டோ அலான்சோ இரண்டாம் இடமும், மெர்சிடீஸ் அணியின் லூயிஸ் ஹாமில்ட்டன் மூன்றாம் இடமும் பிடித்தனர். முன்னாள் உலக சாம்பியன்கள் மூன்று பேருமே முதல் மூன்று இடங்களைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

ஃபார்முலா-1 ரேஸில், இதுவரை 7 சுற்றுகள் முடிவடைந்து இருக்கின்றன. செபாஸ்ட்டியன் வெட்டல் 132 புள்ளிகளுடன் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். அலான்சோ 96 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், லோட்டஸ் அணியின் கிமி ராய்க்கோனன் 88 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

ஆண்டு வருமானம் 175 கோடி!

ஃபோர்ப்ஸ் நிறுவனம், உலகில் அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதில், உலகின் தலைசிறந்த கோல்ஃப் வீரரான டைகர் உட்ஸ் முதல் இடம் பிடித்திருக்கிறார். இவர், கடந்த ஆண்டு மட்டும் சுமார் 400 கோடி ரூபாய் வருமானம் பெற்று முதல் இடம் பிடித்திருக்கிறார். சுவிட்சர்லாந்தின் முன்னணி டென்னிஸ் வீரரான ரோஜர் ஃபெடரர் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இவரின் வருமானமும் கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய். இந்தப் பட்டியலில், கடந்த ஆண்டு 31-வது இடத்தில் இருந்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி, 180 கோடி ரூபாய் வருமானத்துடன் இந்த முறை 16-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். இதில், ஐபிஎல் உள்ளிட்ட கிரிக்கெட் போட்டிகளின் மூலம் கிட்டத்தட்ட 20 கோடி ரூபாயும், மீதியை விளம்பரங்கள் மூலமும் பெற்றிருக்கிறார் டோனி. ஃபார்முலா-1 கார் ரேஸின் முன்னணி ரேஸ் வீரரான ஃபெர்னாண்டோ அலான்சோவின் வருமானத்தைவிட, டோனியின் வருமானம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அலான்சோ 175 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியிருக்கிறார்.

-சார்லஸ்