'மார்க்கெட்டுக்குப் புதுசா வர்ற கார் வைத்திருப்பவர்களை மட்டும்தான் ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்புக்குக் கூட்டிட்டுப் போறீங்க... பழைய காரை புதுசு மாதிரி வைத்திருப்பவர்களுக்கும் வாய்ப்பு தரலாமே'' என உரிமையோடு கேட்டார், கோவை அருகே பன்னிமடையைச் சேர்ந்த வாசகர் விஜயராகவன். இவர் வைத்திருப்பது 1997 மாடல் ஃபியட் பிரீமியர் 138D.

'இந்தக் காலத்து ஆட்களுக்கு எல்லாம் ஆட்டோமேட்டிக் வசதிகள் இருக்கும் லேட்டஸ்ட் மாடல் கார்கள்தான் பிடிக்கும். ஆனா, இந்த ட்ரிப் முடிஞ்சதுக்குப் பிறகு உங்க கருத்த மாத்திக்குவீங்க' என்று எங்களை சவாலோடு வரவேற்றார். எங்கள் பயணத் திட்டம் கோவையில் இருந்து கிளம்பி வாளையாறு, கஞ்சிக்கோடு, பாலக்காடு வழியாக மலம்புழா அணைக்குச் செல்வதுதான். கோவையில் இருந்து சுமார் 65 கி.மீ தூரம். காரின் வயது கருதி ஸார்ட் அண்டு ஸ்வீட் பயணத் திட்டம்!

விஜயராகவனுடன் அவர் மனைவி ரஞ்சிதம், தம்பி மகன் பாலாஜி, நான்கு வயது பேரன் கனிஷ்க் ஆகியோரும் வந்திருந்தனர். நானும் போட்டோகிராபரும் பின்புறம் அமர்ந்துகொள்ள... பாலாஜி எங்கள் அருகில் அமர்ந்துகொள்ள, விஜயராகவன் டிரைவர் சீட்டைக் கைப்பற்ற, அவர் மனைவியும் பேரனும் முன் பக்கம் அமர்ந்துகொண்டனர். புல் பேக்டு கார்!

கோவை உக்கடத்தில் இருந்து காரை ஸ்டார்ட் செய்யும்போது சரியாக காலை 11.30 மணி. பழைய கார்களுக்கே உரிதான சின்ன இரைச்சலுடன் புறப்பட்டது ஃபியட் பிரீமியர். நண்பர்களுடன் பயணம் செல்லும்போது, யாருடைய காராக இருந்தாலும் விஜயராகவன்தான் ஓட்டுவாராம். இவரிடம் சாவியைக் கொடுத்துவிட்டு விலகிக்கொள்வார்களாம். காரணம், அவ்வளவு லாகவமாக காரை ஓட்டுகிறார்.

நகர எல்லையைத் தாண்டி, பாலக்காடு புறவழிச் சாலையை தொடும்போது நேரம் சரியாக 11.45. கிட்டத்தட்ட 12 கி.மீ தூரத்தை வெறும் 15 நிமிடங்களில் கடந்திருந்தது 16 வயதான டீசல் கார். பாலக்காடு சாலை, தற்போது ஆறு வழிச் சாலையாக மாற்றப்பட்டுவருவதால், மேடு பள்ளங்களுக்குப் பஞ்சம் இல்லை. ஆனாலும், நமக்கு அவ்வளவாக அதிர்வுகள் தெரியவில்லை. 'இதில் இருப்பது சாதாரண காயல் ஸ்பிரிங் சஸ்பென்ஷன்தான்'' என்று விஜயராகவன் சொன்னதை நம்பாமல் இருக்க முடியவில்லை.

சரியாக 12.05 மணிக்கு கேரளா எல்லையான வாளையாரை அடைந்தோம். வாளையார் அருகே உள்ள ஒரு கேரள ரெஸ்டாரன்ட்டில் ஒரு காபி குடித்து, சின்னதாக இளைப்பாறிக் கொண்டோம்.. இரு மாநில எல்லை என்பதால், செம்மொழியாம் தமிழிலேயே சம்சாரிக்கலாம். கடைக்காரருக்கு நன்றாகப் புரிகிறது.

எங்கள் துரதிருஷ்டம்... மழை மேகங்களின் வீடான கேரளாவில் அனல் காற்று வீசியது. ஆனால், அந்தக் குறையைப் போக்கி கேரளாவில் இருப்பது போலவே குளிர்ந்த தட்ப வெப்பநிலையை காருக்குள் கொண்டுவந்தது காரின் ஏ.சி சிஸ்டம். ஃபியட் பிரீமியரில் இருந்த சாதாரண டயர்களை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக ட்யூப்லெஸ் டயர்கள் மற்றும் அலாய் வீல்களைப் பொருத்தி உள்ளார் விஜயராகவன்.

இரு மாநிலங்களை இணைக்கும் சாலை என்பதால், சரக்கு லாரிகளுக்குப் பஞ்சம் இல்லை. அதுவும் சாதாரண லாரிகள் இல்லை; பெரும்பாலும் கன்டெய்னர் லாரிகள். கொச்சின் துறைமுகத்துக்கு இதுதான்தான் முக்கிய வழி.

லாரிகளை ஓவர்டேக் செய்யும்போது கார் சிறிது திணறியது. ''1,390 சிசி டீசல் இன்ஜின். இதில், 4 கியர்கள். இன்னும் ஒரு கியர் இருந்தால் நன்றாக இருக்கும்'' என்கிறார் விஜயராகவன்.

ஏ.சி இயங்கினால், சற்று பிக்-அப் குறைகிறது. எனினும், 1997-ம் ஆண்டு கார் என்பதால், இதை ஒரு குறையாகச் சொல்ல முடியாது. மேனுவல் ஸ்டீயரிங்தான் என்றாலும், மிக லாகவமாக பவர் ஸ்டீயரிங் போலவே கையாள்கிறார்.

நண்பகல் 1 மணி. மிகவும் பரபரப்பாக இருந்தது பாலக்காடு. அங்கிருந்து வெறும் 10 நிமிடங்களில் நமது பயண இலக்கான மலம்புழா அணையை அடையலாம்

அங்கிருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் நுழைந்து வலப்பக்கம் திரும்பினால், மலம்புழா அணை செல்லும் சாலை. தவறான வழியில் சென்றதால், சேட்டன் ஒருவரின் வழிகாட்டுதல் தேவைப்பட்டது. கேரளாவில் பெரும்பாலும் சாலைகள் தரமாக இருக்காது என்ற கூற்றை மலம்புழா ரோடு உறுதிப்படுத்தியது. எனினும், காயில் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் உதவியால், பெரிய அளவில் எங்களுக்கு இடையூறு இல்லை. வழியில் குறுக்கிட்ட மலம்புழா ஆற்றின் பாலத்தில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் நாங்கள் மறக்கவில்லை .

அணையை அடைந்தபோது சரியாக மதியம் 1.20 மணி. ஒருநாள் சுற்றுலா என்பதால், வீட்டில் இருந்தே கொண்டு வந்திருந்த மதிய உணவைச் சாப்பிட்டு முடித்தோம்.

இரண்டரை மணி நேரம், அணையில் இருந்த பூங்காவில் ஜாலியாகச் சுற்றிவிட்டு, சரியாக 4 மணிக்கு காரைக் கிளப்பினோம். கோவையை அடைந்தபோது மாலை 6.55. மொத்தம் 130 கி.மீ தூரப் பயணம். பின் சீட்டில் மூன்று பேர் உட்கார்ந்தும்கூட எந்தக் களைப்பும் அலுப்பும் இல்லை என்பது ஆச்சரியம்தான். மைலேஜ், ஆவரேஜாக 19 கி.மீ வரை கிடைப்பதாக, பூரிப்புடன் சொல்கிறார் விஜயராகவன்.

பிரீமியம் கார்தான் பிரீமியர்!

இரா.வசந்த் த.சித்தார்த்