எனக்குச் சொந்த ஊர் தூத்துக்குடி. மதுரைக்கு வந்து 15 ஆண்டுகள் ஆகின்றன. நான் அரசு நூலகராகப் பணிபுரிகிறேன். அனைத்து விகடன் இதழ்களையும் தவறாமல் படித்து விடுவேன். நான் பணி புரியும் நூலகத்துக்கு வரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மோட்டார் விகடனைப் படிக்கப் போட்டி போடுவார்கள். இதில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்க்கத் துவங்கிய நான், இப்போது அதன் தீவிர வாசகன். மோட்டார் விகடனைத் தொடர்ந்து படித்ததால், சீக்கிரமே கார் வாங்க வேண்டும் என்ற உந்துதலும் ஏற்பட்டது!

ஆபீஸ், வீடு எனப் போய் வர ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர் பைக் ஓகே. ஆனால், குடும்பத்துடன் ஷாப்பிங், வெளியூர் என செல்ல கார் வேண்டாமா?’ என்று 'உள் துறை’யில் இருந்து வந்த உத்தரவும் எனது கார் தேடலை மேலும் அதிகப்படுத்தி இருந்தது.

அன்றாடம் அதிக தூரம் ஓட்டுபவர்களுக்கு மட்டுமே டீசல் கார் உகந்தது என்று மோட்டார் விகடன் தொடர்ந்து சொல்லிவருவதால், நமக்கு பெட்ரோல் கார்தான் சரிவரும் என்று ஓர் முடிவுக்கு வந்திருந்தோம்.

புதிதாக கார் வாங்கும் பெரும்பாலோர், மாருதி ஆல்ட்டோதான் வாங்குகிறார்கள். அதனால், நாம் வித்தியாசமாக வேறு கார் வாங்குவோம் என முடிவெடுத்தோம். முதன்முறையாக கார் வாங்குவதால், நானும் என் மனைவியும் பல ஷோ ரூம்களுக்கு நேரில் சென்று தகவல்களைச் சேகரித்தோம்.

முதலில் 'ஹூண்டாய் இயான்’ காரைத்தான் 'ஷாட் லிஸ்ட்’ செய்து வைத்திருந்தோம். நண்பருடைய இயான் காரில் ஒருமுறை பயணித்தபோது, பின் இருக்கைகளில் கால் வைக்க அவ்வளவாக வசதி இல்லாதது தெரிந்தது. அதனால், இயான் வேண்டாம் என்று முடிவெடுத்தோம்.

மோட்டார் விகடனில் வெளிவந்த ஓர் கம்பாரிஸன் கட்டுரையைப் பார்த்து நிஸான் மைக்ரா மீது கவனம் திரும்பியது. இது அப்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு இருந்ததால், சாலையில் ஓட்டிச் செல்லும்போது அனைவரது கவனத்தையும் கவரும் என நினைத்தேன். விலையும் எங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு இருந்தது. மேலும், காரின் வடிவமைப்பும் எங்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

அதனால், கடந்த ஆண்டு மார்ச் மாதம் மதுரை கப்பலூரில் உள்ள ஜீவன் நிஸான் ஷோ ரூமில் மைக்ராவை புக் செய்தோம். எங்களின் கேள்விகளுக்கு அவர்கள் பதிலளித்த விதமும், அணுகுமுறையும் நன்றாக இருந்தது. எனக்கு அப்போது டிரைவிங் தெரியாது என்பதால், என்னை பக்கத்தில் வைத்துக் கொண்டு அவர்களே ஓட்டிக் காண்பித்தார்கள். குடும்பதோடு அமர்ந்து 5 கி.மீ வரை பயணம் செய்தோம். அப்போதே புதிய கார் வாங்கிவிட்ட திருப்தி. கார் மிகவும் வசதியாக இருந்தது. செர்ரி ரெட் கலர் கேட்டேன். அது இல்லாததால், வெள்ளை நிற மைக்ரா ஆர்டர் செய்தோம். ஆனால், வெள்ளை நிற மைக்ராவும் அப்போது ஸ்டாக் இல்லாததால், அவர்களால் குறித்த நேரத்தில் காரை டெலிவரி செய்ய முடியவில்லை. ஒரு மாதம் வரை தாமதமாகி விட்டது. அதற்குள் நான் டிரைவிங் கற்றுக் கொண்டேன்

20.4.12 அன்று கார் டெலிவரி எடுத்தேன். டிரைவிங் பழகிய பிறகு, முதன்முறையாக எனது சொந்த காரை ஓட்டியபோது ஏற்பட்ட உணர்வை என்னால் மறக்க முடியாது. இன்றும் அதை என்னால் நம்ப முடியவில்லை.

நண்பர்களும், 'பள்ளத்தில் அமர்ந்திருப்பது போல இல்லாமல், கார் ஓட்டுவதற்கு வசதியாக இருக்கிறது’ என்று சொன்னார்கள். மைலேஜ் சிட்டிக்குள் 14 கி.மீ, நெடுஞ்சாலையில் 18 கி.மீ வரை கிடைக்கிறது.

கார் வாங்கிய பிறகு, நீண்ட தூரம் சென்றது திருச்சிதான். ஹைவேயில் கார் ஓட்ட ஓட்ட ஆசையாக இருந்தது. வேகமாகச் செல்லும்போது தேவையான பிக்-அப் கிடைக்கிறது. பிரேக் அடிக்கும் போது எந்த உதறலும் இல்லை. எனக்கேற்ற உயரத்தில், சரியான பொசிஷனில் இருக்கைகள் இருப்பதால், டிராஃபிக்கில் ஓட்டும்போது பக்கவாட்டில் வரும் வாகனங்களைக் கவனித்து ஓட்ட முடிகிறது. காருக்குள் அமர்ந்தால், சாலையை முழுமையாகப் பார்க்க முடிகிறது.

காரை பார்க்கிங் செய்யும்போது ஸ்டீயரிங் வளைப்பதற்கு சுலபமாக இருக்கிறது. கியர் மாற்றுவதும் எளிமையாக இருக்கிறது. 10,000 கி.மீ அல்லது 6 மாதங்களுக்கு ஒருமுறை ஆயில் மாற்றினால் போதும் என்று சொன்னார்கள்.

ஆனால், நான் கார் வாங்கி ஒரு வருடம் ஆகிவிட்டது. 5,000 கி.மீ-தான் ஓட்டி இருந்தேன். ஆனால், இரண்டு முறை ஆயில் மாற்றித் தந்தனர்.

பிடித்தது

ஒரு கட்டத்தில், மாருதி ஸ்விஃப்ட் மீது எனக்கு ஒரு கண் இருந்தது. ஆனால், விலை அதிகமாக இருந்தது. நிஸான் விலை குறைவு மட்டுமல்ல; மாருதி ஸ்விஃப்ட் காரில் இருப்பதைவிட பின் இருக்கையில் அதிக இட வசதி இருக்கிறது.

காருக்குள் இருந்தபடியே இரண்டு பக்கமும் சைடு வியூ மிரரை அட்ஜஸ்ட் செய்துகொள்ளும் வசதியும் இதில் உண்டு. சஸ்பென்ஷன் அருமையாக இருக்கிறது. வேகமாகச் செல்லும்போதும், மேடு பள்ளங்களில் செல்லும்போதும் அதிக குலுங்கல் இன்றி ஸ்மூத்தாகச் செல்கிறது. 250 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிக்கி போதுமானதாக இருக்கிறது. ஏ.சி ஆன் செய்த உடனே இன்ஸ்டன்ட் கூலிங் கிடைக்கிறது. சர்வீஸும் உடனடியாகச் செய்து தருகிறார்கள். சர்வீஸ் சார்ஜும் குறைவாகவே உள்ளது. கியர் லீவர் மிகவும் முன்புறம் இல்லாமல் நடுவே இருப்பதால், பயன்படுத்த எளிதாக இருக்கிறது. நாங்கள் எதிர்பார்த்ததைப் போன்றே ஹெட்லைட் இதில் கவர்ச்சியாக இருக்கிறது. இன்டீரியர் வசதியாகவும், சுத்தம் செய்வதற்குச் சுலபமாகவும் உள்ளது. காரைப் பார்த்த உறவினர், நண்பர்கள் என யாரும் எந்தக் குறையும் சொல்லாமல் இருப்பதே எங்களுக்குப் பெரிய நிறைவுதான்.

பிடிக்காதது

நிஸானுக்கு மதுரை, சென்னை, திருச்சி போன்ற நகரங்களில் மட்டுமே சர்வீஸ் சென்டர் உள்ளன என்பது ஒரு குறைதான். விலை குறைந்த வேரியன்டில் அலாரம், டோர் சேஃப்டி அலர்ட்ஸ், பவர் வின்டோஸ் இல்லை. இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். டேஷ் போர்டு, பெரியதாக இடத்தை அடைத்துக் கொண்டு இருக்கிறது. இயானில் உள்ளதைப் போல டேஷ் போர்டு கார்னரை ஸ்மார்ட் ஆக வடிவமைத்து இன்னும் கொஞ்சம் அழகாக்கி இருக்கலாம். பின்புறம் இடம் அதிகமிருந்தாலும், இருக்கை நேராக அமர்வது போன்று இருப்பதால், அசௌகர்யமாக உள்ளது. கொஞ்சம் சாய்வாக அமைத்திருக்கலாம். ஸ்பீடோ மீட்டர் கவர்ச்சி இல்லாமல் சாதாரணமாக இருக்கிறது, பெட்ரோல் மீட்டர் டிஜிட்டலில் இருப்பதால், பெட்ரோல் அளவை சரியாகக் கணிக்க முடியவில்லை. ஆனால், எங்களைப் போன்ற நடுத்தரக் குடும்பத்தினருக்கு இருக்கும் சொகுசு கார் ஆசைக்கு, நிஸான் நல்ல சாய்ஸ்!