பைக் உலகின் லேட்டஸ்ட் சென்சேஷன் யமஹா எம்டி-09. 30 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு, யமஹா அறிமுகப்படுத்தும் மூன்று சிலிண்டர்கள் கொண்ட முதல் சூப்பர் பைக் என்பதுதான் இதன் தனிச் சிறப்பு. இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த பைக்கில் அப்படி என்னதான் ஸ்பெஷல்?

டிசைன்

நேக்கட் பைக்கான இதன் தோற்றம், பார்ப்பவர்கள் அனைவரையுமே திணறடிக்கும். பார்ப்பதற்கு FZ1 பைக் போலவே இருந்தாலும் சின்னச் சின்ன விஷயங்களில் வித்தியாசம் காட்டியிருக்கிறது யமஹா. மல்ட்டி ரிஃப்ளெக்டர் ஹெட்லைட் என்பதால், கார்களைப் போன்று பவர்ஃபுல் வெளிச்சத்தை அள்ளி வீசுகிறது. மூன்று சிலிண்டர்கள்கொண்ட 'ட்ரிப்பிள்’ பைக் என்பதுதான் இதன் ஸ்பெஷல். அதனால், சிலிண்டர்களை யமஹா எப்படி வடிவமைத்து இருக்கிறது என்பதில்தான் எல்லோரது கவனமும் இருந்தது. 'த்ரீ இன் ஒன்’ என்ற கொள்கைபடி, மூன்று சிலிண்டர்களையும் இறுதியில் ஒன்றாக இணைத்து, ஒரே எக்ஸாஸ்ட் பைப்பாக வடிவமைத்து முடித்திருக்கிறது யமஹா. சிலிண்டர்களுக்கு 'நானோ ஃபிலிம் கோட்டிங்’ கொடுக்கப்பட்டு இருப்பதால், அவ்வளவு எளிதில் துருப் பிடிக்காது.

பெரிய பைக்காகக் காட்சி தரும் இதன் பெட்ரோல் டேங்க்கும் பார்ப்பதற்குப் பெரிதுதான். ஆனால், 14 லிட்டர் மட்டுமே கொள்ளளவு கொண்டது. தினமும் அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில், டெய்லி கம்யூட்டர் பைக்காக இதை வடிவமைத்திருக்கிறது யமஹா. அதனால், ஸ்பிளிட் சீட், குட்டி சீட் போன்ற ரேஸிங் அம்சங்கள் இல்லை. மிகவும் சௌகரியமான, நீளமான இருக்கையைக் கொண்டுள்ளதால், இரண்டு பேர் வசதியாக உட்கார்ந்து பயணிக்க முடியும். ஹேண்டில்பார் உயரமாகவும், அதே சமயம அகலமாகவும் இருப்பதால், வசதியாகப் பிடித்து ஓட்ட முடிகிறது.

டயல்களைப் பொறுத்தவரை, செவ்வக வடிவில் ஒற்றை டிஜிட்டல் மீட்டரைக் கொண்டிருக்கிறது எம்டி-09. ஓடோ, ட்ரிப், ஸ்பீடோ மீட்டர் அனைத்துமே டிஜிட்டலில் ஒளிர்கின்றன. இவற்றுடன் கடிகாரம், கியர் இண்டிகேட்டர் மற்றும் ஃப்யூயல் இண்டிகேட்டர்களும் இந்த டிஜிட்டல் மீட்டரில் இடம் பிடித்திருக்கின்றன. மோனோக்ராஸ் சஸ்பென்ஷனைக் கொண்டிருக்கிறது யமஹா எம்டி 09.

புதிய டிசைன் 10 ஸ்போக் அலாய் வீலை இதில் அறிமுகப்படுத்தி இருக்கிறது யமஹா. இது மிகவும் லைட் வெயிட் என்பது குறிப்பிடத்தக்கது. 1000 சிசி திறன்கொண்ட FZ1 பைக்கைவிட இதன் எடை 26 கிலோ குறைவு. எடையைக் குறைப்பதற்காக பைக் முழுவதும் மிகவும் விலை உயர்ந்த உலோகங்களைப் பயன்படுத்தியிருக்கிறது. 17 இன்ச் ரேடியல் டயர்களைக்கொண்ட இந்த பைக்கில், முன் பக்கம் 120/70 சைஸ் டயரும், பின் பக்கம் மிகவும் அகலமான 180/55 அளவு டயரும் பொருத்தப்பட்டுள்ளது. முன் பக்கம் பவர்ஃபுல் இரட்டை டிஸ்க் பிரேக்கும், பின் பக்கம் ஒற்றை டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன.

இன்ஜின்

847 சிசி திறன்கொண்ட புத்தம் புதிய இன்ஜினை இதில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. லிக்விட் கூல்டு, 3 சிலிண்டர், 6-ஸ்பீடு கியர்பாக்ஸ்கொண்ட இந்த பைக்கின் சக்தி 115 bhp. இதன் அதிகபட்ச டார்க் 8.9kgm. வேகத்தைப் பொறுத்தவரை, இது அதிகபட்சம் மணிக்கு 200 கி.மீ வேகத்தைத் தாண்டும் என எதிர்பார்க்கலாம்.

'14 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொள்ளளவுகொண்ட இந்த பைக்கில், ஒருமுறை முழுமையாக பெட்ரோல் நிரப்பிவிட்டு, 240 கி.மீ போய்வரலாம்’ என்கிறது யமஹா. அந்தக் கணக்கின்படி பார்த்தால், இந்த பைக் லிட்டருக்கு 17 கி.மீ மைலேஜ் தரும். இந்த ஆண்டு இறுதியில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த பைக் விற்பனைக்கு வர இருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் இந்த பைக் FZ09 என்ற பெயரில் அறிமுகமாகும்.

அமெரிக்காவில் இதன் விலை, இந்திய மதிப்பில் 5 லட்ச ரூபாய். 2016-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 10 சதவிகித மார்க்கெட் ஷேரைப் பிடிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் இயங்கிவரும் யமஹா, இந்தியாவிலும் இந்த பைக்கை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். அப்படி விற்பனைக்கு வந்தால், எம்டி-09 பைக்கின் விலை நம் நாட்டில் 10 லட்ச ரூபாய்க்குள் இருக்கும்!

- சார்லஸ்