கார் ரேசுக்கு எப்படி கோ-கார்ட் ரேஸ் முதல் படியாக இருக்கிறதோ, அதேபோல் பைக் ரேசுக்கு முதல்படியாக இருப்பதுதான் பாக்கெட் பைக் ரேஸ். புகழ் பெற்ற மோட்டோ ஜீபி பைக் ரேஸ் வீரரான வாலன்டினோ ராஸி, அவரது 12-வது வயதில் இருந்து இது போன்ற பாக்கெட் பைக்கில்தான் பைக் ரேஸ் ஓட்டவே கற்றுக் கொண்டார். பார்ப்பதற்கு குட்டிப் பையன்கள் ஓட்டும் பொம்மை பைக் போலக் காட்சியளிக்கும் இதில்தான் கட்டிளம் காளைகள் சீறிப் பறக்கிறார்கள்.

ரேஸ் டிராக்குகளில் இருக்கும் பிட் லேனின் குறுகிய பாதையில் பயன்படுத்துவதற்காக, ரேஸ் மெக்கானிக்குகளால் புல் வெட்டும் இயந்திரத்தின் இன்ஜினை வைத்து உருவாக்கப்பட்ட இந்த குட்டி பைக், 'பிட் பைக்' (Pit bike) என்ற பெருமையையும் பெயரையும்

பெற்றது. நாளடைவில் இந்த குட்டி பைக்கை வைத்து பொழுதுபோக்குக்காக ரேஸ் ஓட்டத் துவங்கினர். கோ-கார்ட் ரேஸ் மைதானத்தில் நடக்கும் இந்த ரேஸ், ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பிரபலம்.

முழு பைக்கில் கால் பங்கே உருவம் கொண்ட இதில், பொதுவாக 40 சிசி முதல் 100 சிசி வரை அளவு கொண்ட 2 ஸ்ட்ரோக் இன்ஜின்கள் பயன்படுத்தப்படுகின்றன. சூப்பர் பைக்குகளில் இருப்பதைப் போல, இதிலும் சிறிய ஃபேரிங் பொருத்தப்பட்டு மிரட்டலாகக் காட்சியளிக்கிறது. இதன் சக்தி, பயன்பாட்டுக்கு ஏற்ப 2 bhp முதல் அதிகபட்சமாக 20 bhp வரை வேறுபடுகின்றன. இந்த பைக்கில் ஹேண்டில் பார், சீட், ஃபுட் ரெஸ்ட் ஆகியவை சிறுவர், பெரியவர் என இரு தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. பொதுவாக, இதில் முன்பக்க சஸ்பென்ஷன் இருக்காது. பின்பக்கம் இருப்பது மோனோ ஷாக் சஸ்பென்ஷன். இதில், விலையும் எடையும் குறைவான மெக்கானிக்கல் டிஸ்க் பிரேக்தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. வெறும் 18 கிலோ எடை கொண்ட இந்த பைக்கை கையிலோ, காரிலோ வைத்து எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். அடிப்படை மாடல் 15 ஆயிரம் ரூபாய்க்குக் கிடைக்கும். அதே சமயம் மூன்று லட்சம் ரூபாய் பெறுமான பாக்கெட் பைக்குகளும் உள்ளன.

பாக்கெட் பைக் ரேஸில் பல பிரிவுகள் இருக்கின்றன. குட்டி பைக்தானே என்ற ஏளனத்துடன் இதைப் பார்க்க வேண்டியது இல்லை. காரணம், இது மணிக்கு 120 கி.மீ வரை வேகம் செல்லும். மேலும், இந்த பைக்கை ஓட்ட பாதுகாப்புக் கவசங்கள் அவசியம். பெரிய பைக்குகளில் ரேஸ் ஓட்டி அடி வாங்குபவர்கள், பயிற்சிக்காக இந்த குட்டி பைக்கைத்தான் நாடுவார்கள். பயிற்சி மட்டுமின்றி, விலையும் குறைவு என்பதால், பணம் பையைக் கடிக்காது. பைக் ரேஸில் கலக்க விரும்புபவர்கள் இது போன்ற பாக்கெட் பைக் ஓட்டிப் பழகினால், முழு வீச்சில் ரேஸ் ஓட்ட வசதியாக இருக்கும்!