கார் பிரியரான டாக்டர் ஹிஜாமுதீன் பப்பாவின் மருத்துவமனையில் அணிவகுத்து

நிற்கின்றன பல வகை கார்கள். சென்னை நந்தனத்தில் இருக்கும் அவரது மருத்துவமனைக்குச் சென்றால், வாசலில் கம்பீரமாக வரவேற்கிறது லண்டன் டாக்ஸி. உள்ளே நுழைந்து திரும்பும் திசையெல்லாம் நிற்கின்றன பழமையான கார்களும் புதிய மாடல் கார்களும்.

இவரது கார் ஆர்வத்தை அறிந்து கொள்ள நேரில் சந்தித்தோம். 'எப்படி வந்தது இந்த ஆர்வம்' என்று கேட்டால், ''சிறுவயதில் வீட்டில் விளையாடுவதே கார்களுடன்தான். கார் என்பதே அபூர்வமான விஷயமாக இருந்த அந்தக் காலத்தில், எங்கள் வீட்டில் ஏதாவது ஒரு கார் நின்று கொண்டு இருக்கும். அதன் மீதான வியப்புதான் அதில் நான் மூழ்கிப் போக காரணமாக இருந்திருக்கும். பள்ளி நேரம் போக விளையாட்டு முழுவதும் வீட்டில் உள்ள கார்களுடன்தான் கழிந்தது. என்னிடம் என்ன பொம்மை வேண்டுமென்று

கேட்டால், கார் பொம்மைதான் கேட்பேன். அப்போதெல்லாம் மரம், தகரத்தால் ஆன கார் பொம்மைகள்தான் கிடைக்கும். தகர பொம்மை பலமுறை கையைக் கிழித்தாலும் அதனுடனான எனது விளையாட்டை நிறுத்தியதே

இல்லை'' என்று உற்சாகமாகப் பேசுகிறார் பப்பா.

''வின்டேஜ், கிளாஸிக், நவீனம் என எல்லா வகை கார்களும் வைத்து இருக்கிறீர்களே. எப்போது துவங்கியது இந்த வேட்டை?''

''அன்றாடப் பயன்பாட்டுக்கு அப்போதைய புதிய கார்கள் எப்போதும் இருக்கும். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, வின்டேஜ் கார் பிரியரான எனது நண்பர் அயூப் வைத்திருந்த ஒரு கார் என்னைக் கவர்ந்தது. அதன் வடிவத்தை மிகவும் ரசித்தேன். கிட்டத்தட்ட குழந்தைப் பிராயத்தில் விளையாடிய கார்களை நினைவுப்படுத்தியது அந்த கார். 'அதை எனக்குத் தர முடியுமா' என்று அவரிடம் கேட்டேன். உடனே தந்துவிட்டார். அப்போதிருந்து நானும் வின்டேஜ் கார் உரிமையாளர்களில் ஒருவராகி விட்டேன்.

அதன் பின்பு, சென்னையில் 'வின்டேஜ் - கிளாஸிக் ராலி' நடந்தபோது, அதில் முதன்முதலாகக் கலந்துகொண்டேன். அன்றைக்கு எனது காருக்கு முதல் பரிசு கிடைத்ததும் எல்லையற்ற சந்தோஷத்தை அடைந்தேன். அதன் பின்புதான் தெரிந்தது, நான் வைத்திருக்கும் 1932-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 'ஸிங்கர் போட் டெயில்' கார், ஓர் அபூர்வப் பிறவி என்பதை. காரணம், காரின் பின் பக்கம் படகு போல வடிவமைக்கப்பட்டு இருக்கும் இந்த மாடல் கார், உலகத்தில் மொத்தமே ஐந்து பேரிடம்தான் இருக்கிறது. அதில் நானும் ஒருவன் என்று அறிந்தபோது உற்சாகத்தை அளவிட வார்த்தைகள் இல்லை. அதன் பின்பு துவங்கியதுதான் கார் வேட்டை.

எந்த ஊருக்குப் பயணமானலும் அங்கு ஏதாவது பழைய கார் கிடைக்குமா என விசாரிக்க ஆரம்பித்தேன். அதன் விளைவு இப்போது என்னிடம் எட்டு கார்கள் இருக்கின்றன. ஒவ்வொரு காருக்கும் ஒவ்வொரு பின்னணியும் வரலாறும் இருக்கிறது. பிளைமவுத் கஸ்டம் காரை ஹைதராபாத்தில் வாங்கினேன். வாங்கும்போது காரின் பாதி மண்ணில் புதைந்து கிடந்தது. அது இதற்கு முன் ஜாம்ஷெட்பூரில் ஓடியதாக இதன் ஆர்.சி புத்தகம் சொல்கிறது. அந்தக் காலத்தில் இதை வாங்கியவர்கள் பெரிய ஜாம்பவான்களாகத்தான் இருக்க வேண்டும். காரணம், இதில் ஒரிஜினல் உதிரி பாகங்கள் அப்படியே இருந்தன.''

''பராமரிப்புச் செலவு எப்படி?''

''இது ஒரு ஹாபி, அதிலும் காஸ்ட்லி ஹாபி! இது போன்ற கார்களை பழைய இரும்பு

விலைக்குக்கூட வாங்கிவிடலாம். ஆனால், அதை ஒரிஜினலாக மாற்றுவதில்தான் சூட்சுமமே இருக்கிறது. வின்டேஜ் காருக்குக் கிடைக்காத உதிரி பாகங்களுக்குப் பதிலாக வேறு உதிரி பாகத்தைப் பொருத்தக்கூடாது. ஒரிஜினலைத் தேடிக் கண்டடைவதில்தான் த்ரில்லே இருக்கிறது. ஒரு காரை வாங்கி வந்து ஓட வைக்க ஆறு மாதம், ஒரு வருடம், இரண்டு வருடங்கள்கூட ஆகலாம். அசலுக்கான தேடலில் ஆர்வமும், பொறுமையும், செலவு செய்ய பணமும் இருந்து கொண்டே இருக்க வேண்டும். ஆர்வம் மங்கி சலிப்பு ஏற்பட்டால் இதை முற்றிலும் உதறி விட வேண்டியதுதான். எனக்கு இருக்கும் இந்த உற்சாகம் எனது மகனுக்கும் மகளுக்கும் இருப்பதைப் பார்க்கும்போது, இந்த விளையாட்டு தொடர்ந்து கொண்டே இருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.

அதேபோல், இது போன்ற வாகனங்களை எல்லா மெக்கானிக்காலும் பராமரிக்க முடியாது. இதற்கு ஆள் கிடைப்பதுதான் குதிரைக்கொம்பு. மெக்கானிக் என்பவர் வெறும் மெக்கானிக்காக மட்டுமே இருந்தால், இந்த வேலைகளைச் செய்ய முடியாது. அதையும் தாண்டி இதில் அர்ப்பணிப்பும், ஆர்வமும், திறமையும் இருக்க வேண்டும். எனக்குக் கிடைத்த மெக்கானிக் ஃபிலிப், தொழில்முறை மெக்கானிக் அல்ல. இவர் வேறு தொழிலில் இருக்கிறார். ஆனால், அவருடைய ஹாபி வின்டேஜ் கிளாஸிக் வாகனங்களுக்கு மெக்கானிக் வேலை செய்வது. எனது வாகனங்கள் அனைத்தும் ஒரிஜினலாக இருப்பதற்கும் ஒவ்வொரு ஆண்டும் பரிசுகள் வெல்வதற்கும் இவரது டீம் முக்கியக் காரணமாக இருக்கிறது.''

''எத்தனை கார்கள் வரை வாங்குவதாக உத்தேசம்?''

''என்னைப் பொருத்தவரை வெறும் கார்களாக வாங்கி நிறுத்துவதில் எந்த உபயோகமும் இல்லை. ஒரு நிறுவனத்தின் குறிப்பிட்ட மாடல் கார் என்றால், அந்த மாடல் ஒவ்வொரு ஆண்டும் எப்படி மாற்றங்களுக்கு உள்ளாகி வெளிவந்திருக்கிறது என்பதை அறிவதுபோல கலெக்ஷன் இருக்க வேண்டும். எதிர்காலத்தில் மெர்சிடீஸ் பென்ஸ் தயாரிப்பின் அனைத்து மாடல் கார்களையும் சேகரிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருக்கிறது. அதுவரை எனது கார் ஆர்வம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டுதான் இருக்கும்!''