கல்லூரி ரசகுல்லாஸின் பறக்கும் ராக்கெட் ஸ்கூட்டி! டீன்ஸ், பெப், பெப் பிளஸ் என நீண்டு கொண்டே போகும் ஸ்கூட்டி வரிசையில், இப்போது புதிதாக அறிமுகமாகி இருக்கிறது ஸ்கூட்டி ஸ்ட்ரீக்.

ஸ்கூட்டி என்பது ஏற்கெனவே நம்பகத்தன்மைக்குப் பெயர் போன ஸ்கூட்டரெட். ஏபிஎஸ் பாடி பேனல்கள் மிகவும் ஸ்ட்ராங்காக இருக்கின்றன. ஸ்கூட்டி பெப்பின் தோற்றத்தில் இருந்து கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது ஸ்ட்ரீக். கொஞ்சம் ஆண்மை கலந்த கம்பீரமான தோற்றத்தை விரும்பும் பெண்களை இதன் டிசைன் கவரும். ஸ்கூட்டி பெப்பில் வட்ட வடிவில்

இருக்கும் ஹெட் லைட் டிசைன், இதில் செவ்வக வடிவத்துக்கு மாறியிருக்கிறது. இந்தியாவில் இருக்கும் ஸ்கூட்டரெட்டுகளில் முதன்முறையாக LED விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இண்டிகேட்டர் விளக்குகளின் டிசைனும் கச்சிதமாக இருக்கிறது. ஆனால், பின்பக்க டிசைன் முன்பக்கத்தைப்போல ரசிக்கும்படியாக இல்லை. டெயில் லைட், ஸ்கூட்டியின் கவர்ச்சியைக் குறைக்கிறது. சீட், இருவர் வசதியாக உட்கார்ந்து செல்வதற்கேற்ப சொகுசாக இருக்கிறது.

ஸ்பீடோ மீட்டர் டயல்களை இன்னும் கொஞ்சம் அழகாக வடிவமைத்திருக்கலாம். ஸ்கூட்டி பெப்பில் இருக்கும் பவர், எக்கனாமி 'மோட்' இதில் ஏன் இல்லை? ஸ்கூட்டி பெப்பில் முன் பக்கம் (க்ளோவ் பாக்ஸ்) பொருட்களை வைத்துக் கொள்ள இடம் உண்டு. இதைப் பூட்ட முடியாது. ஆனால், ஸ்கூட்டி ஸ்ட்ரீக்கில் பொருட்களை முன்னால் வைத்துப் பூட்டிவிட முடியும். மொபைல் சார்ஜ் செய்யும் வசதியும் உள்ளது. முன்பக்கம் பை மாட்டி வைத்துக் கொள்ள 'ஹ¨க்' உள்ளது. சீட்டுக்குக் கீழே ஒரு ஹெல்மெட் வைக்கும் அளவுக்கு இடம் இருக்கிறது.

ஸ்கூட்டி ஸ்ட்ரீக்கின் முக்கிய மாற்றமே இருக்கைக்குப் பின்னால் வெளியே இருக்கும்

Click to enlarge

பெட்ரோல் டேங்க்தான். இதனால் பெட்ரோல் போடும்போது சீட்டைத் திறக்க வேண்டிய அவசியம் இல்லை. சீட்டுக்கு அடியில் இருக்கும் பொருட்களை பெட்ரோல் போடுபவர்கள் பார்த்து விடுவார்களோ என்கிற பதற்றம் இனி பெண்களுக்குத் தேவை இல்லை. ஆனால், எப்படி இருந்தாலும் சீட்டை விட்டு எழுந்துதான் பெட்ரோல் டேங்க் மூடியைத் திறக்க வேண்டும்.

ஸ்கூட்டி ஸ்ட்ரீக்கை ஓட்டும்போது மற்ற ஸ்கூட்டிகளை ஓட்டுவதில் இருந்து நல்ல வித்தியாசத்தை உணர முடிகிறது. ரேக் ஆங்கிள் குறைவாக இருப்பதால், ஸ்டீயரிங் மிகவும் ஷார்ப்பாக இருக்கிறது. ஸ்டீயரிங்கை 'லைட்'டாக வளைத்தால் போதும், உடனடியாகத் திரும்பிவிடும். 40 கி.மீ வேகத்தில் (மிட் ரேஞ்ச்) ஓட்டும்போது பிக்-அப் சிறப்பாக இருக்கிறது. ஆனால், அதற்கு மேல் இன்ஜின் இழுக்க ஆரம்பிக்கிறது. கையாளுமையில் மற்ற ஸ்கூட்டிகளைத் தோற்கடிக்கிறது ஸ்ட்ரீக்.

ஆல் அலுமினியம் சஸ்பென்ஷன் தனது வேலையைக் கச்சிதமாகச் செய்கிறது. பெரிய சைஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளதால் நல்ல 'க்ரிப்'. பிரேக்ஸ§ம் ஓகே.!

லிட்டருக்கு 50 கி.மீ-க்கு மேல் மைலேஜ் தரும் என்று சொல்கிறது டிவிஎஸ். இன்னும் நாம் மைலேஜ் டெஸ்ட் செய்யாததால் இது பற்றி முழுமையாகச் சொல்ல முடியாது. மொத்தம் ஐந்து வண்ணங்களில் வெளிவருகிறது ஸ்கூட்டி ஸ்ட்ரீக். 99 கலர் இதில் கிடையாது.

நகரின் அனைத்து வீதிகளிலும் புகுந்து புறப்பட இளம்பெண்களுக்கான சரியான ஸ்கூட்டரெட் ஸ்கூட்டி ஸ்ட்ரீக். சிறப்பான கையாளுமை, க்ரிப், போதுமான பர்ஃபாமென்ஸ் என அத்தனை அம்சங்களும் அளவோடு உள்ளது. வெளியிலேயே பெட்ரோல் டேங்க், மொபைல் சார்ஜர், சீட்டுக்கு அடியில் பொருட்கள் வைத்துக் கொள்ள அதிக இடவசதி, முன் பக்கம் பூட்டி வைத்துக் கொள்ள க்ளோவ் பாக்ஸ் என இளம்பெண்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு சிறப்பாகச் செய்திருக்கிறது டிவிஎஸ். ஆனால், பின்பக்கத் தோற்றம்தான் ரசிக்கும்படி இல்லை.