ரிவர்ஸ் கியரில் இருந்த கார் விற்பனை மீண்டும் டாப் கியருக்கு எகிறி இருக்கிறது. கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் தொடங்கி, 2009 ஜனவரி வரை நான்கு மாதங்களாக வாகன விற்பனையின் வேகம் குறைந்து கொண்டே வந்தது. 'இந்த வீழ்ச்சி எங்கே போய் முடியும்?' என்று எல்லோருமே பயந்து கொண்டிருந்த நேரம், பிப்ரவரியில் வாகன விற்பனை இரட்டை இலக்க வளர்ச்சியைக் காட்டி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் பயணிகள் கார் விற்பனை சுமார் 22 சதவிகிதம் உயர்ந்து 1,15,386 கார்கள் விற்பனையாகி உள்ளது. கார் மற்றும் எம்யூவி, எஸ்யூவி வாகனங்களின் ஒட்டுமொத்த விற்பனை பிப்ரவரியில் 15 சதவிகிதம் அதிகரித்து, 1,45,019 வாகனங்களாக உயர்ந்துள்ளது.

இதுவரை இல்லாத புதிய சாதனையாக, மாருதி சுஸ¨கி நிறுவனம் பிப்ரவரியில் மட்டும் மொத்தம் 79,190 கார்களை விற்பனை செய்துள்ளது. இதன், உள்ளாட்டு விற்பனை 19 சதவிகிதம் அதிகரித்து 70,625 கார்களாகவும், ஏற்றுமதி செய்யும் கார்களின் எண்ணிக்கை இரு மடங்குக்கு மேல் உயர்ந்து, 8,565 கார்களாகவும் ஆகியிருக்கிறது.

இதே போல், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திலும் இதுவரை இல்லாத அளவாக ஒரே மாதத்தில் 15 சதவிகிதம் உயர்ந்து 19,039 கார்களாக விற்பனை அதிகரித்துள்ளது.

ஹ¨ண்டாய் நிறுவனத்தின் விற்பனை 32 சதவிகிதம் வரை அதிகரித்து, 38,254 கார்களாக உயர்ந்திருக்கிறது. இதன் சிறிய வகை கார்களான சான்ட்ரோ, ஐ10, கெட்ஸ் மற்றும் ஐ20 ஆகிய மூன்று மாடல் கார்கள் மட்டும் கடந்த பிப்ரவரியில் 34,285 கார்கள் விற்பனையாகி இருக்கின்றன.

விலை குறைந்ததால் விற்பனை அதிகமானது!

திடீரென கார்களின் விற்பனை அதிகமானதற்கு, மத்திய அரசு அறிவித்த மூன்று ஊக்கத் திட்டங்கள் (Stimulus Packages) தான் காரணம்.

முதலாவதாக மத்திய அரசு கலால் (எக்ஸைஸ்) மற்றும் சேவை வரியை 10-லிருந்து 8 சதவிகிதமாகக் குறைத்தது. அதேபோல, சேவை வரியை 12-லிருந்து 10 சதவிகிதமாகக் குறைத்தது. இதனால், கார்களின் விலை மேலும் 2,000 முதல் 3,000 வரை ரூபாய் குறைந்தது. வர்த்தக வாகனங்களுக்கான டயரின் விலையில் சலுகைகளை அறிவித்தது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது சிறிய கார்களின் விலையில் கிட்டத்தட்ட 10,000 ரூபாய் வரையும், பெரிய கார்களுக்கு 50,000 ரூபாய் வரையும் குறைந்திருக்கிறது. இந்த விலை குறைப்புதான் கார் வாங்க தூண்டுகோலாக அமைந்திருக்கிறது.

ஐ10, ஐ20, மாருதி 800, ஆல்ட்டோ போன்ற சிறிய வகை கார்களின் விற்பனை கணிசமாக அதிகரித்திருப்பதால், ஒட்டுமொத்தமாக கார்களின் விற்பனை கிடுகிடுவென உயர்ந்து விட்டது.

வட்டி குறைந்தது, விற்பனை எகிறியது!

கார் விற்பனை அதிகமானதற்கு, கார் கடனுக்கான வட்டி குறைப்பும் ஒரு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

2006-ல் கார் கடனுக்கான வட்டி 9-10 சதவிகிதமாக இருந்தது. அதுவே 2008-ல் 14-15 சதவிகிதமாக அதிகரித்தது. இப்போது, 10.25-11.75 சதவிகிதமாக குறைந்து விட்டது. ஆனால், கார் கடன் வழங்கும் தனியார் வங்கிகளில் இது இன்னும் 12..75- 14.25 சதவிகிதமாக அதிகமாகவே இருக்கிறது.

''கார் கடனுக்கான வட்டியை 11.50-12-லிருந்து முதல் ஆண்டுக்கு 10 சதவிகிதமாக எஸ்பிஐ வங்கி அதிரடியாக குறைத்துள்ளது. மேலும், கடன் வாங்குபவர் கையில் இருந்து செலுத்தும் ஆரம்பத் தொகையும் அனைத்து மாடல்களுக்கும் 15 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. கடனைத் திரும்பச் செலுத்தும் காலமும் 84 மாதங்களாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இந்தச் சலுகை வரும் மே 31-ம் தேதி வரை அமலில் இருக்கும். இந்த இரு அம்சங்களும் வரும் மாதங்களில் கார் விற்பனை உயர நிச்சயம் உதவி செய்யும். எஸ்பிஐ வங்கியைப் பின்பற்றி இதர பொதுத்துறை வங்கிகளும் வட்டியைக் குறைத்து வருவது நல்ல விஷயம்.

பெட்ரோல் விலை குறைந்ததும் காரணம்!

2009-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட காராக இருந்தால், காரின் மாடலும் புதிதாக இருக்கும்

என ஜனவரி மாதத்தில் கார் வாங்குவதற்குப் பலர் ஆயத்தமானார்கள். அவர்களுக்கு கார் பிப்ரவரி மாதத்தில்தான் விற்பனை செய்யப்பட்டுள்ளதால், இந்த மாதத்தில் கார் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. மேலும், ஐந்தாவது ஊதியக் குழுவின் சம்பள உயர்வு மற்றும் அரியர் தொகை அரசு ஊழியர்களுக்குக் கிடைத்திருப்பதும் கார் விற்பனை அதிகமானதற்கு இன்னொரு முக்கியக் காரணம்.

சென்னையிலுள்ள தென்னிந்திய ஆட்டோமொபைல் அசோசியேஷனின் செயலாளர் எம்.கே.சுப்ரமணியன், ''என்னைப் பொறுத்தவரை கார் விற்பனைக்குப் பிரதான காரணம், பெட்ரோல், டீசல் விலை உள்நாட்டில் குறைக்கப்பட்டு இருப்பதுதான். மேலும், வட்டி விகித குறைப்பும் ஒரு காரணம். தற்போது பொருளாதாரம் மற்றும் நிதி நெருக்கடி ஓரளவு சீராகத் தொடங்கி இருப்பதாலும் கார் விற்பனை அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது'' என்றார்.

நாட்டில் பணவீக்க விகிதம் வெகுவாகக் குறைந்து வருவதும், டாடாவின் ஒரு லட்ச ரூபாய் காரான நானோவின் வரவும் ஒட்டுமொத்த கார் விற்பனையை மேலும் வேகமெடுக்க வைக்கும்.

டூ வீலர்கள்

சென்ற பிப்ரவரி மாதத்தில் இரு சக்கர வாகனங்களின் விற்பனையும் கணிசமாக உயர்ந்திருக்கிறது. அதன் விற்பனை கடந்த ஆண்டு பிப்ரவரி மாத விற்பனையைவிட 16.23 சதவிகிதம் அதிகரித்து 6,30,849 ஆக உயர்ந்துள்ளது. இதில் மார்க்கெட் லீடரான ஹீரோ ஹோண்டாவின் விற்பனை 24 சதவிகிதம் அதிகரித்து, 3,29,055 ஆக உயர்ந்திருக்கிறது. 'ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா' மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேலான பைக்குகளை விற்பனை செய்து சாதனை படைத்திருக்கிறது. டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இரு சக்கர வாகன விற்பனை 13 சதவிகிதம் உயர்ந்து 1,07,301 ஆக அதிகரித்திருக்கிறது!