சன் ரூஃப்

நிலவைக் கொண்டு வா.. காரில் கட்டி வை!

‘இரவு நேரங் களில் காரில் பயணம் செய்யும் போது வெளிச்சம் இருக்காது. பாட்டுக் கேட்பதைத் தவிர எந்த ஒரு உற்சாகமும் இல்லை’ என்று சலித்துக் கொள்பவர்களைக் குறி வைத்து வந்திருக்கிறது சன் ரூஃப் எனும் கண்ணாடிக் கதவு.

காரின் பக்கவாட்டுக் கதவுகளில் கண்ணாடிகள் இருப்பதுபோல, காரின் மேற்கூரையில் இருக்கிறது இந்த சன் ரூஃப். பட்டனை அழுத்தினால், கதவு விலகி வானத்தில் மின்னும்

நட்சத்திரங்களும் நகரும் மேகக்கூட்டமும் நம் கண்களுக்கு விருந்து படைக்கும். இந்த வசதி பெரும்பாலும் பென்ஸ், பிஎம்டபிள்யூ போன்ற சொகுசு கார்களில் மட்டுமே இருக்கிறது. நம்மூர் கார்களான மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவன கார்களில் இது மாதிரியான வசதியை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. ஆனால், இப்போது புதிதாகக் களம் இறங்கி இருக்கும் ஹூண்டாய் வீ 10 மாடல் காரில், சன் ரூஃப் இருப்பது ஓர் ஆச்சர்யம். காரணம், இந்தக் கண்ணாடிகள் இந்தியாவில் கிடைப்பது மிக அபூர்வம். இந்தச் சிக்கலுக்குத்தான் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது, வெப்பாஸ்டோ நிறுவனம்.

‘‘இந்தியாவில் சன் ரூஃப் ‘கல்ச்சர்’ வேகமாகப் பரவி வருகிறது. முன்பெல்லாம் சன் ரூஃப் என்றால் ஏதோ சன் கன்ட்ரோல் ஃபிலிம் என்று நினைத்துக்கொண்டு இருந்தார்கள். இப்போதுதான் நிறைய பேருக்கு என்னவென்று தெரிய ஆரம்பித்திருக்கிறது. இதன் தேவையும் வேகமாகப் பெருகி வருகிறது.

குடும்பத்தினருடன் சன் ரூஃப் பொருத்தப்பட்ட காரில் செல்வது ஒரு குதூகலமான அனுபவமாக இருக்கும் என்பதை பலர் லேட்டாக உணர்ந்திருக்கிறார்கள். அதுவும் குழந்தைகள்

இருந்தால் கூடுதல் உற்சாகம்! திறந்த ஜீப்பில் பயணம் செய்வது எப்படி ஒரு ஜாலியான அனுபவமாக இருக்குமோ, அதைவிட சன் ரூஃப் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும்’’ என்கிறார் வெப்பாஸ்டோ நிறுவனத்தைச் சேர்ந்த ரஞ்சித்.

‘‘சன் ரூஃப் இருக்கிற கார், அதிக இடவசதியாகக் காட்சி தரும். வெளிச்சமும் காற்றோட்டமும் இதன் கூடுதல் பிளஸ். கண்ணாடியில் சன் கன்ட்ரோல் ஃபிலிம் ஒட்டப்படுவதால், உள்ளே வெயிலடிக்காது’’ என்கிறார்.

‘‘கார் வாங்கும்போதே இருக்கிற சன் ரூஃப்கள் ஓகே... ஆனால், தனியாக இதைப் பொருத்தும்போது கார் அழகு குலைந்துவிடாதா?’’ என்ற நம் கேள்விக்குப் பட்டெனப் பதில் அளித்தார் ரஞ்சித். ‘‘ஜெர்மன் நாட்டு நிறுவனமான எங்கள் நிறுவனம்தான் பென்ஸ், பிஎம்டபிள்யூ போன்ற கார்களுக்கு சன் ரூஃப் சப்ளை செய்கிறது. அதுமட்டுமல்ல, இந்தியாவிலும் மாருதி, ஹூண்டாய், ஃபோர்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளோம்’’ என்றவர், ‘‘கார் தயாரிக்கும் தொழிற்சாலையிலேயே இது பொருத்தப்பட்டு நேரடியாக வந்தால்தான் நம்பகரமானதாக இருக்கும். வெளியே டீலர்களிடம் பொருத்தினால் காரை சேதப்படுத்திவிடுவார்கள் என்றெல்லாம் அச்சப்படத் தேவை இல்லை.

சின்ன கார், பெரிய கார் என அனைத்து வகையான கார்களிலும் பொருத்துவதற்கென

எங்களிடம் தனித் தனியாக நான்கு மாடல்கள் இருக்கின்றன. காரின் மேல் பாகத்தை அழகுக் குலையாமல் துண்டாக வெட்டி எடுப்பதற்கென எங்களிடம் கருவிகள் இருக்கின்றன. இதனால், எந்த மாடல் சன் ரூஃப் பொருத்துகிறோமோ அந்த அளவுக்குத் தேவையான இடத்தை வெட்டிவிட்டு, அப்படியே இந்த சன் ரூஃப்பை இணைத்துவிடுவோம்.

இதில் உள்ள கண்ணாடிகள் காரின் பக்கவாட்டு, முன்-பின் பக்கக் கண்ணாடிகளைவிட மூன்று மடங்கு உறுதியானது. மேலும், புற ஊதாக் கதிர்களை உள்ளே நுழையவிடாது. அதேபோல், பலத்த மழை பெய்தாலும் காருக்குள் தண்ணீர் புகுந்துவிடுமோ என்று அச்சம்கொள்ளத் தேவையில்லை. சன் ரூஃப்பில் தேர்ந்தெடுக்க நிறைய சாய்ஸ் இருக்கிறது. 9,000 ரூபாயில் துவங்கி 1,68,000 ரூபாய் வரை கிடைக்கும்’’ என்றவரிடம், ‘‘விலை கொஞ்சம் தூக்கலாக இருக்கிறதே’’ எனக் கேட்டபோது, ‘‘இவை அனைத்தும் ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அதனால்தான், விலை கொஞ்சம் கூடுதலாகத் தெரிகிறது’’ என்றார்.

‘‘காரின் கூரையை வெட்டும்போது நடுவில் உள்ள ரூஃப் லைட்ஸ் பாதிக்கப்படுமே?’’

‘‘ஆமாம், அதை வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப இடம் மாற்றிவிடுவோம். இன்னொரு விஷயம், சன் ரூஃப்பை மேற்கூரையில் ஏ.ஸி. ‘டக்ட்’ உள்ள கார்களில் பொருத்த முடியாது. மற்ற ரக கார்களில் பொருத்த முடியும்’’ என்றார் ரஞ்சித்.

இனி, காரில் பயணிக்கும்போது நிலவையும் நட்சத்திரங்களையும் உடன் அழைத்துக்கொண்டு செல்லலாம்!

- சார்லஸ்