மலை உச்சியில் மல்யுத்தம்!

பல்ஸரா? புல்லட்டா?

இமயமலைக்கு புல்லட்டில் போய்வருவது புது விஷயமில்லை. ஆனால், பல்ஸரில் பயணிப்பது என்பது முழுக்க முழுக்க ஓர் சாகசம். சவாலுக்காக இப்படி ஒரு சாகசத்தை மூன்று இளைஞர்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள்.

டெல்லியில் இருந்து இமயமலைக்கு மோட்டார் சைக்கிள்களில் சென்று திரும்பியிருக்கிறார்கள் கென்னி, நிலூத்பால் சிங், ஹிம்மான்ஷூ மூவரும்.

போட்டி ஆரம்பம்!

‘‘புல்லட் மோட்டார் சைக்கிளுக்கு ஈடுகொடுத்து பல்ஸரில் இமயமலைக்கு வர முடியுமா?’’- என்று எங்களிடம் சவால்விட்டவன் பெயர் கென்னி. நாங்கள் மூவரும் கர்நாடகா மாநிலம் சுவர்ணகல்லில் உள்ள தேசியப் பொறியியல் கல்லூரியில் படித்தவர்கள். கல்லூரியில் சவால், போட்டி என்று பரபரப்பைக் கிளப்புவோம். இப்போது வேலை நிமித்தமாக ஆளுக்கொரு மூலை பிரிந்துவிட்டாலும் இன்னும் போட்டிகளுக்குப் பஞ்சமில்லை.

சோதனை மேல் சோதனை!

கடந்த செப்டம்பர் 9-ம் தேதி, நண்பன் கென்னி மட்டும் புல்லட்டில் கிளம்ப... நாங்கள் டெல்லியிலிருந்து பல்ஸரில் இமயமலைக்குப் புறப்பட்டோம். குளிருக்குக் கம்பளி, ஜெர்க்கின், டென்ட் அமைக்க தார்ப்பாய், பல்ஸருக்குத் தேவையான ஸ்பேர் பார்ட்ஸ் ஆகியவற்றை எடுத்துக்கொண்டோம். டெல்லியிலிருந்து அனந்த்பூர் சாஹிப் என்னும் இடத்தை அடைவதற்குள் நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டோம். சாலையில் மேடு பள்ளம், தூசு தும்பு என இம்சை நிறைந்த பயணமாக இருந்தது. ‘இந்த டிரிப் தேவையா?’ என்று சலிப்பாகிவிட்டது’’ என்றார் பல்ஸர் 200 சிசி பைக்கில் சென்ற நிலூத்பால் சிங். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்தவரான இவர், இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்கிறார்.

‘‘முதல் நாள் பயணம்தான் இப்படி. ஆனால், அடுத்த நாள் பயணம் புதுமையான அனுபவங்கள் நிறைந்ததாக அமைந்தது’’ எனத் தொடர்ந்தார் பல்ஸர் 150 சிசி-யில் பயணம் செய்த ஹிம்மான்ஷூ. ‘‘குலுமணாலி நோக்கி நாங்கள் சென்றபோது, குளிர்ந்த காற்றும் பனியும் எங்களை உற்சாகப்படுத்தி வரவேற்க, திடீரென மழையும் பெய்து வாழ்த்தத் துவங்கியது. ஆனால், மணாலியைக் கடந்ததும் திரும்பவும் எங்களுக்குச் சோதனைக் காலம். ‘ரோத்தாங்க் பாஸ்’ என்னும் இடத்தைக் கடந்த பிறகு, மலைச் சாலை மிகப் பெரிய மேடு பள்ளங்களோடு இருந்தது.

அந்தப் பள்ளங்களை புல்லட்டில் கென்னி சுலபமாகக் கடந்துவிட, என் 150 சிசி பல்ஸரும் என் நண்பனின் 200 சிசி பல்ஸரும் திணறியது. நல்லவேளை, நாங்கள் பயந்தது போல பைக்கின் ஃபோர்க்குக்கு எந்தப் பாதிப்பும் இல்லை’’ என்றார் ஹிம்மான்ஷூ.

உறைபனிக்கு நடுவே..!

‘‘குழிகள் நிறைந்த இந்தப் பாதையை ஒருவழியாகக் கடந்துவிட்டாலும் அடுத்துவரும் பாதைகளும் மிகவும் மோசமாக இருக்கும் என்கிற பயம் எங்களைவிட்டு அகலவில்லை. அதே சமயம், த்ரில்லும் குறையவில்லை. ‘டார்ச்சா’விலிருந்து ‘பாங்க்’ வரையிலான மலைப் பாதையைக் கடக்க எத்தனித்தபோது, கடுமையான உறைபனி. என் பைக் முதலில் ஸ்டார்ட் ஆகவே இல்லை. பல்ஸர் 150-ம் புல்லட்டிலும் கிக் ஸ்டார்ட் இருந்தது என்பதால், அவர்கள் கிக் செய்து ஸ்டார்ட் செய்துவிட்டார்கள். ஆனால், எனது பல்ஸர் 200-ல் வெறும் செல்ஃப் ஸ்டார்ட்தான் என்பதால், பட்டனைத் தட்டிக்கொண்டே இருந்தேன், பலனில்லை. கடைசியில், வண்டியில் ஏறி உட்கார்ந்துகொண்டு மலையில் இருந்து வேகமாகக் கீழே உருட்டிக்கொண்டே வந்து பைக்கை ஸ்டார்ட் செய்துவிட்டேன். இவ்வளவு கஷ்டப்பட்டு ஸ்டார்ட் செய்தபிறகுதான் சோக் இருக்கும் ஞாபகமே வந்தது’’ என்று சிரிக்கிறார் நிலூத்பால் சிங்.

தலைசுற்றும் உயரம்!

‘‘ ‘பரலாச்சலா’ என்னும் இடத்தை அடைந்தபோது, தலை கிறுகிறுவெனச் சுற்றியது. அது கடல் மட்டத்திலிருந்து 16,500 அடி உயரம்.

‘சர்ச்சு’ என்னும் இடத்தில் இருந்து ‘லாச்சுங்லா’வை நெருங்கியபோது, அதிகமான பனிப் பொழிவால் அசம்பாவிதம் எதுவும் நடந்துவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையால், நாங்களே பைக்கை ஓரங்கட்டிவிட்டோம். மேலும், இன்ஜினுக்கு எந்தப் பாதிப்பும் வராமல் தடுக்க, தார்ப்பாய் போட்டு பைக்கை மூடிவிட்டு, டென்ட் அடித்து ஓய்வெடுத்தோம்.

பிறகு, அங்கிருந்து 18 கி.மீ தொலைவில் உள்ள ‘பாங்’ என்னும் இடத்துக்குச் செல்வதற்கு மட்டும் எங்களுக்கு இரண்டு மணி நேரமானது. காரணம், அந்த மலைப் பாதையில் மணிக்கு 5 கி.மீ வேகத்துக்கு மேல் செல்ல முடியாது. அந்த அளவுக்கு மோசமான பாதை அது.

ஷாக் அடித்த பைக்!

‘பாங்’கில் பைக்கை நிறுத்திவிட்டு, ‘லே’ செல்வதற்காக வண்டியை ஸ்டார்ட் செய்தோம். ஏதோ ஷாக் அடித்தது போல ஓர் உணர்வு. அதிகக் குளிரால் வண்டியைத் தொடவே முடியவில்லை. பைக்கை சோக் போட்டு ஒரு வழியாக ஸ்டார்ட் செய்து, அப்படியே கொஞ்ச நேரம் பைக்

இன்ஜின் சூடாவதற்காக விட்டுவிட்டோம். சிறிது நேரப் பயணத்துக்குப் பிறகு ‘லே’வில் உள்ள கார்துங்லாவை அடைந்தோம். மோட்டார் சைக்கிள்கள் செல்லக்கூடிய உயரமான மலை உலகத்திலேயே இதுதானாம். ‘லே’வில் ஆசை தீர நான்கு நாட்கள் சுற்றிவிட்டு, டெல்லி திரும்பினோம்.

அனுபவம் புதுமை!

‘புல்லட்டைவிட பல்ஸரில் சென்று திரும்பிய அனுபவம் எப்படி இருந்தது?’ என்றுதான் எல்லோரும் எங்களிடம் கேட்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நான் திரும்பத் திரும்பச் சொல்வது, ‘மேடு பள்ளம் என மலைப் பாதைகளில் ஓட்டியபோதும் என் பல்ஸரின் ஃபோர்க் ஒன்றும் ஆகவில்லை. இன்ஜினின் சத்தம் மாறியதைத் தவிர எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. என் பல்ஸர் 200 சிசி டியூப்லெஸ் டயர் என்பதாலோ என்னவோ, ஒரு இடத்தில்கூட பஞ்சர் ஆகவில்லை. ஆனால், ஹிம்மான்ஷூவின் பல்ஸர் 150 சிசி டெல்லி திரும்பும்போது பஞ்சராகிவிட்டது. செயினை மட்டும் அடிக்கடி ‘டைட்’டாக்க வேண்டி இருந்தது.

நாங்கள் பயணம் செய்த மொத்த தூரத்தின் அளவு 2868.4 கி.மீ. இந்தப் பயணத்தில் நான் நிரப்பிய பெட்ரோல் 62.46 லிட்டர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், சாதாரணமாக 40 கி.மீ மைலேஜ் தரும் என் பல்ஸர் 200 சிசி 45.92 கி.மீ மைலேஜ் தந்தது’’ என்று வியக்கிறார் நிலூத்பால் சிங்.

இனி பல்ஸர் வைத்திருப்பவர்களும் இமயமலைக்கு கிளம்பிவிடுவார்கள் என எதிர்பார்க்கலாம்!

- இளவரசன்