பிறந்தால், அமெரிக்காவில் லாரி டிரைவராகப் பிறக்க வேண்டும். ஏன் இப்படிச் சொல்கிறேன் என வியப்பாக இருக்கிறதா? உண்மைதான். என் நண்பரிடமிருந்து வந்த ஒரு செய்தி, என்னை அமெரிக்க லாரி டிரைவர்களின் பக்கம் திரும்பவைத்தது.

என் நண்பருக்குத் தெரிந்த ஒருவர், டெட்ராய்டில் பிரபல ஆட்டோமோட்டிவ் தொழிற்சாலையில் மேலாளராக இருந்தபோது, திடீரென்று பணியிலிருந்து நீக்கப்பட்டார் (அமெரிக்காவில் பணி நிரந்தரம் என்பது ஏதும் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் நீக்கப்படலாம். அதிலும், ஆட்டோமோட்டிவ் துறையில் இது சகஜம்).

25 வருடம் இந்தத் தொழிலில் இருந்துவிட்டு திடீரென வேலை போனதால் பெரிதும் வருத்தப்பட்ட அந்த நண்பர், ‘இனி 8  to  5 வேலை செய்வது இல்லை’ என முடிவு எடுத்தார். லாரி ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பித்து அதற்குரிய தேர்வுகளையும் எழுதி, லாரி

டிரைவர் பணியில் சேர்ந்துவிட்டார். ‘‘எதற்காக இப்படி திடீரென மாற்றுப் பாதையில் செல்கிறீர்கள்? நீங்கள் நினைத்தால் சில வாரங்களில் நல்ல வேலையில் சேர்ந்திருக்கலாமே’’ எனக் கேட்டதற்கு, அவர் கூறிய பதில்தான் வியப்பில் ஆழ்த்தியது.

‘‘இந்தத் தொழிலில் இப்போது நல்ல சம்பளம் கிடைக்கிறது. நல்ல சீதோஷ்ணம் உள்ள மாநிலங்களுக்குச் செல்லும் வாய்ப்பும் கிடைக்கிறது. மேலும், வீடு போன்ற வசதி தன்னுடய டிரக்கிலேயே இருப்பதால், வாழ்க்கை முன்பைவிட சிறப்பாக இருக்கிறது’’ என்றார். ‘அட, அப்படி என்னதான் இந்தத் தொழிலில் இருக்கிறது’ என ஆராய்ந்தபோது பல விஷயங்கள் என்னைப் பெரிதும் கவர்ந்துவிட்டன.

லாரி டிரைவர்கள் சாதாரணமாக 40,000 முதல் 60,000 டாலர்கள் வரை சம்பளம் பெறுகின்றனர். அதிலும், நம் நண்பர் ‘ஓனர் ஆபரேட்டட் லாரி டிரைவர்’ வகையைச் சேர்ந்தவர்  (Owner Operated Lorry Driver)  . அதனால், வருடத்துக்கு 1,00,000 முதல் 1,50,000 டாலர்கள் வரை வருமானம் பெறுகிறார். மேலும், ‘ஃபோர்ப்ஸ்’ எனும் அமெரிக்கப் பத்திரிகை, 1,00,000 டாலருக்கு மேல் சம்பாதிக்கும் வேலைகளில் லாரி டிரைவர் வேலை 4-வது (முதல் 10-ல்) இடத்தைப் பிடித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

ஓனர் ஆபரேட்டட் லாரி டிரைவர் என்பது, சொந்த லாரி ஓட்டுநர்களைக் குறிக்கும். பல நிறுவனங்களிடம் கான்ட்ராக்ட் வைத்துக்கொள்வதாலும், தொடர்ந்து வேலை இருப்பதாலும், தமக்கு விருப்பமான நல்ல சீதோஷ்ண மாநிலங்களில் இருக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்கின்றனர். அமெரிக்காவின் வட மாநிலங்கள் 4 முதல் 6 மாதங்கள் வரை பனியால் சூழ்ந்து இருக்கும். ஆதலால், பனிக் காலங்களில் தென் மாநிலங்களில் இருக்கவே பலரும் விரும்புவார்கள்.

அமெரிக்காவில் உள்ள லாரிகளில் குறைந்தபட்சம் 18 சக்கரங்கள் இருக்கும். நீள மூக்குப் போல அமைந்துள்ள இதை ‘அமெரிக்கன் டிரக்’ என அழைக்கிறார்கள். இந்தியாவைப் போல 3 மடங்கு அதிக நிலப்பரப்புள்ள அமெரிக்காவின் வர்த்தகத்துக்கு இது பெரும் உதவி புரிந்து வருகிறது. டிரக்குகளில், கேபினும் டிரெய்லரும் இரண்டாகப் பிரிக்கப்பட்டு இருக்கும். இந்த கேபினில் டிரைவர்களின் வசதிக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ள சிறிய அறையில் டி.வி, டிவிடி, ப்ரிட்ஜ், எலெக்ட்ரிக் அடுப்பு, சிறிய பாத்ரூம், பெட்ரூம் என அனைத்து சௌகரியங்களும் இருக்கும். சில லாரிகளில் சோலார் பேனலும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

எல்லா தேசிய நெடுஞ்சாலைகளிலும் சில நூறு மைல்கள் இடைவெளியில் ‘டிராவலர்ஸ் ஆப் அமெரிக்கா’  (Travelers of America  ) எனும் தனியார் நிறுவனம் டிரக்குகள் நிறுத்தத்தை  (Truck Stops)  நிறுவியுள்ளது. இவை நூற்றுக்கணக்கான ஏக்கர்கள் பரப்பளவு வரை அமைக்கப்பட்டுள்ளது. இதில், உணவு விடுதிகள், அங்காடிகள், இன்டர்நெட் மையம், குளியல் அறைகள், ஓய்வு அறைகள், கேளிக்கை விடுதிகள் என சகலவசதிகளும் இருக்கும். ஒரே சமயத்தில் இரண்டு பக்கமும் உள்ள டீசல் டேங்குகளை நிரப்பும் விதமாக கேஸ் ஸ்டேஷன்  (Gas Station)  அமைக்கப்பட்டு இருக்கும்.

டிரக்குகளில் நவீன ஜி.பி.எஸ் வசதி இருப்பதால், வழியில் உள்ள டிரக் நிறுத்தங்கள், ரெஸ்ட் ஏரியாக்கள், கேஸ் ஸ்டேஷன் போன்ற விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். மேலும், வழியில் ஏற்பட்டுள்ள தடைகள் (சாலை கட்டுமானப் பணிகள், விபத்துகள்) குறித்த தகவல்களையும் உடனுக்குடன் தெரிவித்துவிடும். முக்கியமாக, பல்வேறு நகரங்களில், குறிப்பிட்ட நேரங்களில் சாலைப் போக்குவரத்து, டிரக்குகளுக்கு தடை செய்யப்பட்டிருக்கும். தடை செய்யப்பட்ட நேரத்துக்கேற்ப தங்கள் பயணத்தை அமைத்துக்கொள்ள முடியும். மேலும், சாலைகளில் உள்ள பாலங்களின் உயரத்தையும் அறியலாம் என்பதால், உயரமான சரக்குகளை ஏற்றிச் செல்லும்போது விபத்து தவிர்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் போக்குவரத்து அமைப்பு  (Department of Transportation),  சாலைகளில் செல்லும் டிரக்குகளின் சரக்கு அளவு, எடை ஆகியவற்றை அதிநவீனமாகக் கண்காணிக்கிறது. சாலைகளில் பல இடங்களில் சென்ஸார்கள் அமைக்கப்பட்டு, இவை டிரக்குகளின் எடை அளவு, வேகம் ஆகியவற்றை அருகில் உள்ள கண்காணிப்பு நிலையங்களுக்குத் தெரியப்படுத்துகிறது. இதன் மூலம், காவல்துறையினர் விதிமுறையை மீறும் டிரக்குகளை மட்டும் நிறுத்துவார்கள். இதனால், டிரைவர்களின் நேரம் மற்றும் எரிபொருள் பெரிதும் சேமிக்கப்படுகிறது.

டிரக்குகளில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு, ஓட்டுநர்களின் கட்டுப்பாட்டை இழக்கும்போது, அதை நிறுத்துவதற்காக ‘எமர்ஜென்சி டிரக் ஸ்டாப்ஸ்’  (Emergency Truck Stops)  பலவும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மலைப் பாதைகளில் காணலாம். டிரக்குகளின் வேகத்தைக் குறைப்பதற்காகவே இவ்வகை சாலைகள் புதைமணல்களாலும் சிறு கற்களாலும் அமைக்கப்பட்டு இருப்பதால், சாலையில் பயணிக்கும் மற்ற வாகனங்கள் விபத்துக்குள்ளாவது தவிர்க்கப்படுவது மட்டுமில்லாமல், டிரைவர்களும் காப்பாற்றப்படுகிறார்கள்.

சில டிரக்குகள் அபாயகரமான சரக்குகள், அணு உலைக் கழிவுகளை ஏற்றிச் செல்லும். இவ்வகை டிரக்குகள் 24 மணி நேரக் கண்காணிப்பில் இருக்கும். இவற்றில் உள்ள ‘ஆன் போர்ட் டைகனஸ்ட்டிக் சிஸ்டம்’  (Onboard Diagnostic Systems)  என்ற சாட்டிலைட் உதவியுடன், இதனை இயக்கும் தலைமை அலுவலகத்தின் கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டு, இதன் மூலமாக டிரக்குகளின் வேகம், டீசல் அளவு, இன்ஜின் தன்மை ஆகியவை உடனுக்குடன் தெரிவிக்கப்படும். அளவை மீறும் நேரங்களில் அபாய சமிக்ஞை செய்கிறது. இதனையும் மீறிச் சென்றால், தலைமை நிலைய அதிகாரி, அங்கிருந்தபடியே டிரக்கின் வேகத்தைக் குறைத்து நிறுத்துமாறு இன்ஜினுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியும். மேலும், இவை போகும் இடம் துல்லியமாகக் கண்காணிக்கப்படுகிறது. இதனால், அபாயகரமான சரக்குகள் மிகவும் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் எடுத்துச் செல்லப்படுகின்றன. இவை செல்லும் பாதையும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் இருந்து முற்றிலும் மாற்றியமைக்கப்படுகிறது.

ஐஸ் ரோடு டிரக்கிங்  (Ice Road Trucking)  எனும் அபாயகரமான பனிப் பயணத்தின் மூலம் டிரக் டிரைவர்கள் 1 வருட சம்பாத்தியத்தை ஒரு சில மாதங்களிலேயே ஈட்டிவிடுகின்றனர். முக்கியமாக, கனடா மற்றும் அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள கனிம வளச் சுரங்கம் மற்றும் எண்ணெய் கிணறுகளுக்கு வேண்டிய தளவாடங்கள், உபகரணங்களை பனி படர்ந்த இடங்களுக்குக் கொண்டுசெல்ல வேண்டும். இவ்வகை பயணங்கள் பனிக் காலங்களில் மட்டுமே அமைகிறது. இதற்குக் காரணம், இங்கு சாலைகள் அமைப்பது கடினம். ஆதலால், இங்குள்ள மிகப்பெரிய பரப்பளவு கொண்ட ஏரிகள், பனிக் காலத்தில் ஐஸாக மாறி, இயற்கையான சமதளப் பாதை அமைக்கிறது. இதில்தான் டிரக்குகள் பயணத்தை மேற்கொள்கின்றன. மிகவும் அபாயகரமான இந்தப் பயணம், பல்லாயிரம் அடி ஆழமுள்ள ஏரியின் மேல் தொடங்குகிறது. தொடர்ந்து டிரக்குகள் செல்வதால், சில சமயம் ஐஸ் உருகி டிரக்குகள் ஆயிரம் அடி ஆழத்தில் மூழ்கும் அபாயமும் இருக்கிறது.

டிரக் டிரைவர்களின் உடல் நலத்தைக் கருத்தில்கொண்டு, அமெரிக்காவின் டி.ஓ.டி. 10 மணி நேரத்துக்குப் பின் கட்டாய ஓய்வு, டிரக்குகளுக்கு என அளவான வேகம் ஆகியவற்றைக் கட்டாயமாக்கிச் சட்டம் இயற்றியுள்ளது. மேலும், டிரக்குகளில் ஆட்டோமேட்டிக் கியர் சிஸ்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆயிரம் அதிநவீன உத்திகள் ஏற்பட்டாலும் இயற்கையின் கருணை இல்லாமல் பயணிக்க முடியாது என்பது இங்கு நூறு சதவிகித உண்மை.

தற்போது அமெரிக்காவில், டிரக் டிரைவர்களின் தேவை அதிகரித்துள்ளது. மேலும், அடுத்த சில வருடங்களில் இந்தத் தேவை 25 முதல் 30 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது. இதனால், டிரக் டிரைவர்களின் வருமானம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்!

(தொழில்நுட்பம் தொடரும்)