என் செல்லமே....

இனோவா...

நோவா செய்த கப்பல் போல நீளமாகக் காட்சியளிக்கும் இனோவாவில் சாய்ந்து சந்தோஷமாக சிரிக்கிறார் ‘காதல்’ பரத்!

‘‘உலகத்தில் எனக்குப் பிடிச்ச இடங்கள் இரண்டு. ஒண்ணு என் பெட்ரூம், இன்னொண்ணு என் இனோவா! என்னோட மேக்-அப் ரூம், தியேட்டர், டிஸ்கஷன் ஹால், ரெஸ்ட் ரூம்னு எல்லாமே இந்த இனோவாதான் பாஸ்!’’ என்கிறார் ஜாலியாக. ‘பாய்ஸ்’ படத்தில் ரகளையான கல்லூரி மாணவனாக அறிமுகமான பரத், உண்மையில் எதையும் அளந்து ஆராய்ந்து, ஆழமாக சிந்தித்த பின்தான் முடிவெடுப்பாராம். ‘‘நான் வாங்குகிற கார் எனக்குப் பயன்படுற மாதிரி, எங்க குடும்பத்தின் எல்லா தேவைகளுக்கும் உதவுற மாதிரி இருக்கணும்னு நினைச்சேன். வசமா அமைஞ்சது இனோவா!’’ என்கிறார் தன் காரை ஆசையாக வருடியபடி!

முதல் கார்....

நியூ காலேஜில் நான் படிச்சுட்டு இருக்கும்போது என் ஃப்ரெண்ட்ஸ் விதவிதமான கார்களில் வந்து ரகளை பண்ணுவாங்க. அப்போ நான் பைக்தான் வெச்சிருந்தேன். பாய்ஸ் படத்தில் நடிச்சதுக்கு அப்புறமா வெளியே பைக்கில் போக முடியாதுங்கிறதால அப்பாவோட ஃபோர்டு ஐகான் காரை எடுத்து ஓட்ட ஆரம்பிச்சேன்.

கார் ஓட்ட நான் முறையா கத்துக்கல. ஃப்ரெண்ட்ஸோட வெளியே போகும்போது அவங்க காரை ஓட்டி ஓட்டித்தான் கத்துக்கிட்டேன். அதனால, ரிவர்ஸ் எடுக்கணும்னாலே எனக்கு இன்னமும் பயம்தான்.

ஒன்றரை லட்ச அலங்காரம்

அப்பாவோட ஃபோர்டு ஐகானில் இஷ்டத்துக்கும் புகுந்து விளையாடினேன். ஊஃபர், எல்சிடி

டிவி-ன்னு ஒன்றரை லட்ச ரூபாய் செலவு பண்ணினேன்’’ என்று சொல்லும் பரத்துக்கு கார்கள் மேல் அவ்வளவு ஈடுபாடு கிடையாதாம்.

நான் சம்பாதிச்சு வாங்கின முதல் கார் இது. ‘இந்த கார் வாங்கு, அந்த ஃபாரின் கார் வாங்கு’ன்னு என் ஃப்ரெண்ட்ஸ் ஆளுக்கொரு யோசனை சொன்னாங்க. ஆனா, நான் அவசரப்படலை. எனக்கு என்ன தேவைன்னு யோசிச்சேன். எவ்ளோ தூரத்தில் ஷூட்டிங் ஸ்பாட் இருந்தாலும் காரில் போய் வரும்போது களைப்புத் தெரியாமல் இருக்கணும். கதை டிஸ்கஷன் பண்றதுக்கு, மேக்-அப் போடுறதுக்கு வசதியா இருக்கணும். ஷூட்டிங் ஸ்பாட் போகும்போது என் காஸ்ட்யூமர், மேக்கப்மேன், மேனேஜர்னு நிறைய பேர் உட்கார்வதற்கும் ஏற்றபடியா பெரிய காரா இருக்கணும். குறிப்பா நல்ல மைலேஜ் கொடுக்கணும். இதுக்கு எந்த கார் சரியா வரும்னு யோசிச்சேன். டொயோட்டா இனோவாதான் மனசுக்குப் பட்டது. இப்போ என்னோட பெஸ்ட் ஃப்ரெண்டு இந்த இனோவாதான்.

எனக்கு ரேஸ் மேல் ஆர்வம் கிடையாது. அதனால் வேகமாப் போறதே பிடிக்காது. அதிகபட்சம் 80 கி.மீ. வேகம் போவேன். அதுக்கு மேல் எப்பவும் ‘நோ’. வேகமாப் போறது நமக்கு மட்டுமல்ல, நம்மை நம்பி காரில் வர்றவங்களையும் பாதிக்கும். அதனால், எப்பவுமே நான் காரில் வேகமாப் போக மாட்டேன்!

பெண்களுக்கு இடம் உண்டா?

நான் அதிகமா பசங்களோடதான் காரில் போவேன். அதுக்காக கேர்ள் ஃப்ரெண்ட்ஸே கிடையாதுன்னு பொய் சொல்லமாட்டேன். என் குரூப்ல கேர்ள்ஸும் உண்டு. அடிக்கடி ஈ.சி.ஆர் ரோடுதான் போவோம். எப்போதாவது பெங்களூருக்கு காரிலேயே ஜாலி டிரைவ் போறதும் உண்டு!

கனவு கார்

லேட்டஸ்ட் மெர்சடீஸ் பென்ஸ் வாங்கணும்னுதான் ஆசை’’ என்றவரிடம், ‘‘அந்த பென்ஸ் காரில் உங்கள் பக்கத்து ஸீட்டில் யார் இருப்பார்கள்?’’ எனக் கேட்டால், ‘‘என் வருங்கால மனைவிதான்!’’ என்று சிரித்தபடி ‘கூடல் நகர்’ பட ஷூட்டிங்கில் கலக்கிறார் பரத்.

படங்கள்: டி.கலைச்செல்வன்