கார்ட் அட்டாக்!

விர்ர்ர்ரூம் என காற்றைக் கிழித்துக்கொண்டு பறக்கும் கார்களின் சத்தம்... டயர்களில் தீப்பொறி பறக்கும் ஜெட் வேகம்... உற்சாகப்படுத்தும் ரசிகர்களின் விசில் சத்தம்... இவை அனைத்தும் இருங்காட்டுக்கோட்டை மைதானத்தில் சகஜம். அதே சத்தம், இப்போது சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையிலும் கேட்கிறது!

ஆம்... ரேஸ் வீரர்களை உருவாக்கும் ஆரம்பக்கட்ட பயிற்சிப் பட்டறை இங்கே உள்ளது. கார்களில் பறக்கும் வீரர்களை உருவாக்கும் இந்த இடத்தின் பெயர் ‘கார்ட் அட்டாக்’. இது சென்னையின் புகழ்பெற்ற கோ-கார்ட் மைதானம். விடுமுறைநாட்களில் பெருசு, சிறுசு என்ற வயசு வித்தியாசமின்றி கோ-கார்ட் கார்கள் காற்றைக் கிழித்துக்கொண்டு பறக்கின்றன.

கோ-கார்ட்... இதை ரேஸ் பள்ளிக்கூடத்தின் ஆரம்பப் பாடசாலை என்று சொல்லலாம். மைக்கேல் ஷூமேக்கர், ஃபெர்னாண்டோ அலான்சோ, நரேன் கார்த்திகேயன், கருண் சந்தோக் என அனைத்து ரேஸ் வீரர்களும் இதுபோன்ற கோ-கார்ட்டிங் மைதானத்தில்தான் சாம்பியன்ஷிப் வேட்டையைத் துவக்கினார்கள்.

ஸ்டீயரிங், பிரேக், ஆக்ஸிலரேட்டர், நான்கு குட்டி டயர்கள் இதுதான் கார்ட் கார்! ‘கார்ட் அட்டாக்’கில் உள்ள கார்ட்டுகள் 200-சிசி திறன் கொண்டவை. ஹோண்டா நிறுவனம் கோ-கார்ட் கார்களுக்கென்று பிரத்யேகமாகத் தயாரிக்கும் இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் இருக்கும் வீல் மேக்னீஸியம் அலாயால் செய்யப்பட்டவை.

‘‘சாதாரணமாக கார் ஓட்டுவது போல்தான் இதுவும். ஆக்ஸிலரேட்டர் பெடலை அழுத்திக்கொண்டே ஸ்டீயரிங்கைத் திருப்பினால் போதும், கார்ட் வேகமாகப் பறக்க ஆரம்பித்துவிடும். கார்ட் விபத்துக்குள்ளாகி விடக்கூடாது என்ற எண்ணத்தில் பந்தயப் பாதையின் இருபுறமும் பாதுகாப்புக்காக டயர்களை அடுக்கிவைத்திருக்கிறோம்.

ஒருவர் மட்டும் ஓட்டும் கார்ட்டில் ஐந்து நிமிடத்துக்கு 150 ரூபாய் என்று கட்டணம் வசூலிக்கிறோம். ஐந்து நிமிடங்களில் கார்ட்டை வேகமாக ஓட்டுபவர்களுக்குச் சிறப்புச் சலுகைகளும் உண்டு. முதன் முதலாக கார்ட் ஓட்டக் கற்றுக்கொள்பவர்களின் வசதிக்காக இரண்டு பேர் உட்காரக்கூடிய கார்ட்டுகளும் இருக்கின்றன. கற்றுத் தருகிறவருக்கு ஒரு

ஸ்டீயரிங், கற்றுக்கொள்பவருக்கு இன்னொரு ஸ்டீயரிங் என்று இரண்டு இருக்கும். இது மாதிரி கார்ட்டுகளுக்கு ஐந்து நிமிடத்துக்கு 200 ரூபாய் கட்டணம்’’ என்கிறார், ‘கார்ட் அட்டாக்’கின் உரிமையாளர் ரவி ஆல்ஃப்ரெட்.

‘கார்ட் ஓட்டும்போது இன்ஜினைத் தொடக் கூடாது. ஹெல்மெட் அணிந்து கொண்டுதான் கார்ட் ஓட்ட வேண்டும். கட்டாயம் ஷூ அணிந்திருக்க வேண்டும்’ என்றும் இங்கே பல விதிமுறைகள் இருக்கின்றன. பெண்கள் கார்ட் ஓட்டும்போது துப்பட்டாவைத் தவிர்த்துவிட வேண்டும். ஏனென்றால், சக்கரத்தில் துப்பட்டா சிக்கி விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

சென்ற வருடம் பைக் ரேஸ், கார் ரேஸ் என இந்தியாவையே கலக்கிய அஷ்வின் சுந்தர், கோ-கார்ட் பற்றி நம்மிடம் கூறியபோது, ‘‘கார்ட் ஓட்டிப் பழகினால் நல்ல ஸ்டீயரிங் கன்ட்ரோல் கிடைக்கும். வளைவுகளில் எப்படி வேகமாகத் திருப்புவதுன்னு கத்துக்கலாம். பிரேக், ஆக்ஸிலரேட்டர், ஸ்டீயரிங் கன்ட்ரோல் என அனைத்தும் கார்ட் ஓட்டுறது மூலமா பழகலாம். இதனால் ரேஸ் டிராக்கில் கார் ஓட்டும்போது நம்பிக்கையும் தைரியமும் கிடைக்கும்’’ என்கிறார். கோ-கார்ட்டிங்குக்காக பிரத்யேகமாக நடத்தப்படும் போட்டிகளில் இரண்டு முறை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றவர் இவர்.

கோ-கார்ட் மைதானங்களுக்குப் புறப்படுங்கள். ரேஸ் கனவு நிச்சயம் பலிக்கும்!

படங்கள்: ப.பிரவின்