Published:Updated:

வந்துவிட்டது யமஹாவின் BS-6 YZF-R15 V3.0...! பைக்கில் என்னென்ன மாறியிருக்கிறது?

மற்ற BS-6 மாடல்களைப் போலவே, விலை உயர்வு குறையாகத் தெரியாமல் இருப்பதற்கு, YZF-R15 V3.0 பைக்கில் சிற்சில வசதிகளைப் புதிதாகச் சேர்த்திருக்கிறது யமஹா.

YZF-R15 V3.0 BS-6
YZF-R15 V3.0 BS-6 ( Yamaha India )

தனது டாப் செல்லிங் 150சிசி பைக்கான FZ V3.0 சீரிஸ் பைக்கின் BS-6 வெர்ஷனைத் தொடர்ந்து, தற்போது YZF-R15 V3.0 பைக்கின் BS-6 வெர்ஷனைக் களமிறக்கிவிட்டது யமஹா. Racing Blue & Thunder Grey (1.47 லட்சம்), Darknight (1.49 லட்சம்) எனும் 3 கலர்களில் வந்திருக்கும் இந்த மாடல், முன்பைவிட 5,620 ரூபாய் வரை (3%) விலை உயர்ந்திருக்கிறது.

YZF-R15 V3.0 BS-6
YZF-R15 V3.0 BS-6
Yamaha India

இதில் Racing Blue கலர் ஏற்கெனவே இருந்ததுதான் என்றாலும், இந்தோனேசிய மற்றும் ஆசிய சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பைக்கைப் போலவே, அதில் தற்போது Rim Strip-க்குப் பதிலாக அலாய் வீல்களுக்கு நீல நிறம் பூசப்பட்டிருக்கிறது. அதேபோல Thunder Grey கலரிலும் சிவப்பு ஃபினிஷ் முற்றிலுமாக நீக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி இரு கலர்களிலும் இடம்பெற்றிருக்கும் கிராஃபிக்ஸ் புதிது. வழக்கமான கலர்களைவிடக் கூடுதல் விலையில் வரும் Darknight ஆப்ஷனில் எந்த மாறுதலும் இல்லை.

மற்ற BS-6 மாடல்களைப் போலவே, விலை உயர்வு குறையாகத் தெரியாமல் இருப்பதற்கு, YZF-R15 V3.0 பைக்கில் சிற்சில வசதிகளைப் புதிதாகச் சேர்த்திருக்கிறது யமஹா. சைடு ஸ்டாண்ட் இன்ஜின் Cut-Off ஸ்விட்ச் (ஸ்டாண்ட் போட்டிருந்தால், பைக் ஸ்டார்ட் ஆகாது), முன்பைவிடக் கூடுதல் ஒலியைத் தரும் டூயல் ஹாரன், ரோடு க்ரிப்புக்குப் பெயர்பெற்ற பின்பக்க 17 இன்ச் ரேடியல் டியூப்லெஸ் டயர் (140/70 R17 M/C 66H) ஆகியவை அதற்கான உதாரணம். மற்றபடி பைக்கின் அளவுகளில் எந்த மாறுதலும் இல்லை. ஆனால், லிமிடெட் எடிஷன் (MONSTER ENERGY MOTOGP) மாடல், BS-4 வெர்ஷனில் மட்டுமே உண்டு என்பதை நினைவில் கொள்ளவும்.

YZF-R15 V3.0 BS-6
YZF-R15 V3.0 BS-6
Yamaha India

4 வால்வ் - VVA - ASC - Fi - SOHC - 11.6:1 கம்ப்ரஷன் ரேஷியோ ஆகிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய 155சிசி இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணியில் எந்த மாறுதலும் இல்லை. ஆனால், FZ V3.0 சீரிஸ் பைக்குகளைப் போலவே, BS-4ல் இருந்து BS-6க்கு அப்கிரேடு ஆகும்போது, கொஞ்சம் செயல்திறனை இந்த சிங்கிள் DiASil சிலிண்டர் இன்ஜின் இழந்திருக்கிறது. அதாவது 19.3bhp@10,000rpm பவர் மற்றும் 1.47kgm@8,500rpm டார்க்கை BS-4 மாடல் வெளிப்படுத்தியது என்றால், 18.6bhp@10,000rpm பவர் மற்றும் 1.41kgm@8,500rpm டார்க்கை BS-6 வெர்ஷன் தருகிறது. இது பைக்கின் பர்ஃபாமன்ஸில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது, பைக்கை ஓட்டிப்பார்க்கும்போது தெரிந்துவிடும்.