Published:Updated:

`iEGR தொழில்நுட்பத்துடன் SCR டெக்னாலஜி!' BS-6 லாரி, பஸ்களை அறிமுகப்படுத்தியது அசோக் லேலாண்டு

iEGR தொழில்நுட்பத்துடன் SCR டெக்னாலஜியைச் சேர்த்து BS-6 இன்ஜின்களில் புதிய வாகனங்கள் உருவாக்கியுள்ளன.

அசோக் லேலாண்டு BS-6
அசோக் லேலாண்டு BS-6

அசோக் லேலாண்டு, புதிய BS-6 லாரிகள் மற்றும் பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாகனங்களின் தரத்தை உறுதி செய்து Automotive Research Association of India (ARAI) சான்றிதழ்களை வழங்கியுள்ளது. 'இந்த BS-6 லாரிகள் மற்றும் பேருந்துகள் மார்ச் மாத இறுதியில் விற்பனைக்கு வரும்' என அறிவித்துள்ளது அசோக் லேலாண்டு.

அசோக் லேலாண்டு BS-6
அசோக் லேலாண்டு BS-6
அசோக் லேலாண்டு BS-6
அசோக் லேலாண்டு BS-6
அசோக் லேலாண்டு BS-6
அசோக் லேலாண்டு BS-6

BS-6 வாகனங்கள் 'மிட்-நோக்ஸ்' தொழில்நுட்பத்துடன் வெளிவந்துள்ளன. இதற்கு முன்பு BS-4 இன்ஜின்களில் உள்ள iEGR தொழில்நுட்பத்துடன், இப்போது BS-6 இன்ஜின்களில் SCR டெக்னாலஜியைச் சேர்த்துள்ளது அசோக் லேலாண்டு. இந்தப் புதிய லாரிகள் மற்றும் பேருந்துகள் 50 லட்சம் கிலோமீட்டருக்கும் மேலே ஓட்டப்பட்டு, டெஸ்ட் டிரைவ்வும் செய்யப்பட்டுள்ளன.

அசோக் லேலாண்டு BS-6
அசோக் லேலாண்டு BS-6

இதனுடன், வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளைத் திறம்பட பூர்த்திசெய்யும் 'மாடுலர்' எனும் வாகனத் தளத்தை அசோக் லேலாண்டு அறிமுகப்படுத்த உள்ளது. இதில் சேஸி, இன்ஜின், கியர்பாக்ஸ், ஏர் இன்டேக், கேபின், பாடி, சஸ்பென்ஷன் வரை ஏகப்பட்ட செட்-அப்களை உங்கள் வசதிக்கு ஏற்றாற்போல் தேர்வு செய்துகொள்ளலாம்.

அசோக் லேலாண்டு BS-6
அசோக் லேலாண்டு BS-6
அசோக் லேலாண்டு BS-6
அசோக் லேலாண்டு BS-6

அசோக் லேலாண்டின் புதிய முயற்சி வெற்றி பெறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.