Published:Updated:

எட்டாம் தலைமுறை ஆடி A6 காரில் அப்படி என்ன ஸ்பெஷல்?

பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், ஜாகுவார் XF, லெக்ஸஸ் ES 300h, மெர்சிடீஸ் பென்ஸ் E-க்ளாஸ், வால்வோ S90 ஆகிய லக்ஸூரி செடான்களுடன் போட்டிபோடுகிறது, ஆடி A6.

ஓர் ஆண்டு, 11 மாதங்கள்... ஜெர்மனியைச் சேர்ந்த ஆடி நிறுவனம், இந்தியாவில் கடைசியாக காரை அறிமுகப்படுத்தி (Q5 - P/D) ஆகியுள்ள நாள்கள்!

இதனுடன் நீண்ட நாள்களாகவே, `அப்போ வரும்... இப்போ வரும்' என புதிய A6 லக்ஸூரி செடானின் வருகை இழுபறியில் இருந்தது. ஏழாம் தலைமுறை மாடல் நம் நாட்டுக்கு வந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், எட்டாவது தலைமுறை மாடலை 66-71 லட்ச ரூபாய்க்கு (சென்னை ஆன்-ரோடு விலை) அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆடி. Premium Plus, Technology என இரு வேரியன்ட்களில் வந்திருக்கும் A6-ஐ, 2.0 லிட்டர் BS-6 பெட்ரோல் இன்ஜினுடன் (45TFSI) மட்டுமே வாங்க முடியும்.

இந்தியாவில், `ஆடி' விற்பனை செய்யும் கார்களில் 65% டீசல் மாடல்களே என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, 2020-க்குள்ளாக A8, Q8, Q3, Q7 ஆகிய கார்களின் லேட்டஸ்ட் வெர்ஷன்கள் இங்கே டயர் பதிக்கும்.

டிசைன் மற்றும் அளவுகள் 

Audi A6
Audi A6
Autocar India

ஆடியின் லேட்டஸ்ட் டிசைன் கோட்பாடுகளைக் கொண்டிருக்கும் A6, முன்னே RS5 காரையும் பின்னே A8 காரையும் நினைவுபடுத்துகிறது. ஷார்ப்பாகவும் ஸ்போர்ட்டியாகவும் காட்சியளிக்கும் இந்த லக்ஸூரி செடான், முன்பக்கத்தில் பெரிய க்ரோம் க்ரில் - LED DRL உடனான LED ஹெட்லைட்ஸைக் கொண்டுள்ளது. பின்பக்கத்தில் உள்ள LED டெயில் லைட்டுகளை, மெலிதான க்ரோம் பட்டை ஒன்றிணைக்கிறது. காரின் பக்கவாட்டுப் பகுதி முந்தைய மாடலைப் போலவே இருந்தாலும், 18 இன்ச் அலாய் வீல்கள் புதிது. அதேபோல, புதிய A6, முன்பைவிட அளவில் வளர்ந்திருக்கிறது (4,939மி.மீ நீளம், 1886மி.மீ அகலம், 1,457மி.மீ உயரம், 2,924மி.மீ வீல்பேஸ்). போட்டி கார்களுக்குச் சமமான இடவசதி இதனால் கிடைக்கும் என நம்பலாம். Ibis White, Firmament Blue, Myth Black, Seville Red, Vesuvious Grey எனும் 5 மெட்டாலிக் கலர்களில் இந்த லக்ஸூரி செடான் வருகிறது.

கேபின் மற்றும் வசதிகள் 

A6 Luxury Sedan
A6 Luxury Sedan
Audi India

காரின் வெளிப்புறம் போலவே, உட்புறத்திலும் அதிக மாற்றங்களைப் பார்க்க முடிகிறது. ஆடியின் சமீபத்திய மாடல்களைப் போலவே, புதிய A6-ன் கேபின் வடிவமைப்பு அமைந்திருக்கிறது. விலை அதிகமான Technology வேரியன்ட்டில் இரட்டை 8.6 இன்ச் டச் ஸ்க்ரீன் உடனான MMI சிஸ்டம் (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட், மற்றொன்று காரின் கன்ட்ரோல்கள்), Virtual Cockpit டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், Bang & Olufsen 3D ஆடியோ சிஸ்டம், 4 ஸோன் கிளைமேட் கன்ட்ரோல், Hands Free பார்க்கிங் வசதி போன்ற அம்சங்கள் இருக்கின்றன. Memory உடனான Powered சீட்டுகள், பனரோமிக் சன்ரூஃப், டூயல் ஸோன் கிளைமேட் கன்ட்ரோல், லெதர் அப்ஹோல்சரி, Lane Departure Warning ஆகிய வசதிகள் Premium Plus வேரியன்ட்டில் உள்ளன. வெளிநாடுகளில் இருக்கும் மாடலில், 37 Driving Assistance-களை உள்ளடக்கிய Autonomous Driving சிஸ்டம் இருக்கிறது. பழைய மாடலைவிட சுமார் 10-20% அதிக விலையில், புதிய ஆடி A6 களமிறங்கியிருக்கிறது.

A6 Luxury Sedan
A6 Luxury Sedan
Audi India

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்ஜின் பர்ஃபாமென்ஸ்

A6 Luxury Sedan
A6 Luxury Sedan
Audi India

245bhp பவர் மற்றும் 37kgm டார்க்கை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் (45 TFSI) - 7 ஸ்பீடு டூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூட்டணியைக் கொண்டிருக்கிறது. இது, காரை வெறும் 6.8 விநாடிகளிலேயே 0 - 100கி.மீ வேகத்தை எட்டிவிட உதவுகிறது. போட்டி கார்களுக்கு இணையான பவர் கிடைத்திருப்பது பெரிய ப்ளஸ். பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், ஜாகுவார் XF, லெக்ஸஸ் ES 300h, மெர்சிடீஸ் பென்ஸ் E-க்ளாஸ், வால்வோ S90 ஆகிய லக்ஸூரி செடான்களுடன் போட்டிபோடுகிறது, ஆடி A6. ஆனால், முந்தைய மாடல் டீசல் இன்ஜினைக் கொண்டிருந்த சூழலில், அது இங்கே மிஸ்ஸிங் என்பது மைனஸ். தவிர, சர்வதேச மாடலில் 204bhp பவர் மற்றும் 40kgm டார்க்கை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் BS-6 டீசல் இன்ஜின் வழங்கப்பட்டிருப்பதை இங்கே சொல்லியாக வேண்டும்; அதற்கான தீர்வாக, முன்பைவிட பவர்ஃபுல் பெட்ரோல் இன்ஜினை இதில் பொருத்தியிருக்கிறது ஆடி (பழைய A6 - 1.8 லிட்டர் 35 TFSI டர்போ பெட்ரோல் இன்ஜின்: 190bhp பவர் & 32kgm டார்க்). பின்னர், ஹைபிரிட்/எலெக்ட்ரிக் வெர்ஷன் வருவதற்கு வாய்ப்புள்ளது.

Engine Options
Engine Options
Autocar India
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு