Published:Updated:

முடிவுக்கு வந்தது, பஜாஜ் - டிவிஎஸ் ட்வின் ஸ்பார்க் பிரச்னை!

எந்த நிறுவனமும் ஒருவருக்கொருவர் எந்தவிதமான இழப்பீடு அல்லது அபராதத் தொகை எதுவும் செலுத்தத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TVS Flame 125
TVS Flame 125 ( Vikatan )

இந்தியாவில் டூ-வீலர்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் முன்னணி நிறுவனங்களான பஜாஜ் ஆட்டோ மற்றும் டிவிஎஸ் மோட்டார்ஸ் இடையே, கடந்த 12 ஆண்டுகளாக நீடித்துவந்த காப்புரிமை மீறல் விவகாரம், தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்த நிறுவனமும் ஒருவருக்கொருவர் எந்தவிதமான இழப்பீடு அல்லது அபராதத் தொகை எதுவும் செலுத்தத் தேவையில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இதன் வெளிப்பாடாக, மும்பை, சென்னை, இலங்கை, மெக்ஸிகோ ஆகிய நகரங்களின் உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த வழக்குகள் முடிவை எட்டிவிட்டன.

DTS-i Technology
DTS-i Technology
Bajaj Auto

கடந்த செப்டம்பர் 2007-ம் ஆண்டு, புனேவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம், தனது DTS-i (Digital Twin Spark Ignition) தொழில்நுட்பத்தை அப்படியே டிவிஎஸ் தனது Flame 125 பைக்கில் பயன்படுத்தியிருப்பதாகக் கூறி வழக்குத் தொடர்ந்தது. இந்தக் குற்றச்சாட்டை முழுமையாக மறுத்த டிவிஎஸ், CC-VTi எனப்படும் Controlled Combustion Variable Timing Intelligent தொழில்நுட்பம் தங்களுடையது என்றது. மேலும், பஜாஜின் மீது அவதூறு வழக்கை அந்த நிறுவனம் போட்டது தெரிந்ததே. இதற்கிடையே, சிங்கிள் ஸ்பார்க் ப்ளக் கொண்ட Flame SR 125 பைக்கையும் டிவிஎஸ் வெளியிட்டது. அதன் ரிவ்யூவைப் பார்க்கலாம்!

தற்போது, இருதரப்பும் சுமுகமாகப் பேசி, இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டனர்.