Published:Updated:

10,000 ரூபாய் விலை உயர்ந்த பஜாஜ் டொமினார்!

இந்த ஆண்டில் இது இரண்டாவது விலை ஏற்றம்...

2019 பஜாஜ் டொமினார்
2019 பஜாஜ் டொமினார்

இந்த ஆண்டு தொடக்கத்தில் பஜாஜ் தனது டொமினார் 400 பைக்கின் ஃபேஸ்லிஃப்ட மாடலை விற்பனைக்கு கொண்டுவந்தது. முன்பைவிட அதிக பவர் மற்றும் வசதிகளுடன் வந்த இந்த பைக்கின் விலையை தற்போது 10,000 ரூபாய் வரை அதிகரித்துவிட்டது பஜாஜ் நிறுவனம்.

2019 பஜாஜ் டொமினார்
2019 பஜாஜ் டொமினார்

பஜாஜ் நிறுவனத்தின் விலை உயர்ந்த மாடலாக இருக்கும் டொமினாரின் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வந்த பிறகு முதல் முறை ரூ.6000 விலை கூடியது. தற்போது இரண்டாவது முறையாக விலை உயர்ந்துள்ளது. ரூ1.74 லட்ச ரூபாய்க்கு விற்பனைக்கு வந்த டொமினாரின் விலை இப்போது ரூ.1.90 லட்சம். இதன் ஆன்ரோடு விலை தற்போது ரூ.2.30 லட்சம்.

2019 டொமினார்
2019 டொமினார்

விலை உயர்ந்திருந்தாலும், டொமினாரின் இன்ஜின் பர்ஃபாமன்ஸ் மற்றும் வசதிகளை ஒப்பிட்டால் டொமினார், இன்னும் தன்னுடைய செக்மென்ட்டின் விலை குறைவான பைக்காகவே இருக்கிறது. 2019-ன் தொடக்கத்தில் இந்த பைக்கில் DOHC செட்டப், 5bhp கூடுதல் பவர், அப்சைடு டவுன் ஃபோர்க், ஜிக்ஸர் மற்றும் அப்பாச்சியை போல டபுள் பேரல் எக்ஸாஸ்ட், LCD டேங்க் டிஸ்ப்ளே, பயணங்கள் செல்வதற்கு உதவியாக சீட்டின் கீழே Bungee Loop Strap மாட்டுவதற்கான இடம் என சில முக்கியமான வசதிகள் கொடுக்கப்பட்டன.