Published:Updated:

பஜாஜின் BS-6 பல்ஸர் மற்றும் அவென்ஜர் பைக்குகளின் விலை என்ன தெரியுமா?

பல்ஸர் BS-6
பல்ஸர் BS-6 ( Bajaj Auto )

CT 100 மற்றும் பிளாட்டினாவின் BS-6 வெர்ஷன்களுக்குப் பிறகு, 18 ஆண்டுகளைத் தொட்டிருக்கும் பல்ஸர் பிராண்ட் மற்றும் பெருமைமிகு அவென்ஜர் பிராண்டின் மாடல்களை BS-6 விதிகளுக்கு பஜாஜ் அப்டேட் செய்திருப்பது உறுதியாகியுள்ளது.

ஏப்ரல் 1, 2020 முதலாக, நாடெங்கும் BS-6 மாசு விதிகள் அமலுக்கு வருவது தெரிந்ததே. இதனால் வாகனத் தயாரிப்பாளர்கள், ஒருபுறம் தமது தயாரிப்புகளை அதற்கேற்ப மேம்படுத்தும் பணிகளில் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள் என்றால், பெட்ரோலிய நிறுவனங்கள் இந்தியா முழுக்க BS-6 எரிபொருள் சிக்கலின்றி கிடைப்பதில் முழுமூச்சாக இறங்கியுள்ளார்கள். டூ-வீலர்களைப் பொறுத்தவரை ஹோண்டா, ஹீரோ, டிவிஎஸ், சுஸூகி, பியாஜியோ - ஏப்ரிலியா, யமஹா, ராயல் என்ஃபீல்டு, ஜாவா எனப் போட்டி நிறுவனங்கள் வரிசையாக தமது BS-6 மாடல்களை இறக்கிக்கொண்டிருக்கும் சூழலில், பஜாஜ் கொஞ்சம் அமைதி காத்தே வந்தது. CT 100 மற்றும் பிளாட்டினாவின் BS-6 வெர்ஷன்களுக்குப் பிறகு, 18 ஆண்டுகளைத் தொட்டிருக்கும் பல்ஸர் பிராண்ட் மற்றும் பெருமைமிகு அவென்ஜர் பிராண்டின் மாடல்களை BS-6 விதிகளுக்கு பஜாஜ் அப்டேட் செய்திருப்பது உறுதியாகியுள்ளது. இதில் எதிர்பார்த்தபடியே கார்புரேட்டருக்குப் பதிலாக ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் இடம்பிடித்திருப்பதுடன், எக்ஸாஸ்ட் அமைப்பிலும் கணிசமான மாறுதல் இருக்கிறது.

பல்ஸர் பைக்... பால்கனி காதலி... பழிக்குப்பழி வேட்டை - `பொல்லாதவன்' வாழ்ந்த கதை #12YearsOfPolladhavan

மற்றபடி வசதிகள், அளவுகள், மெக்கானிக்கலாக நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள் குறித்து எந்தவிதமான அதிகாரபூர்வமான அறிவிப்பும் பஜாஜிடமிருந்து வரவில்லை. இதில் சில மாடல்களின் பவர் விவரங்கள் வெளிவந்துள்ளன. டாப் செல்லிங் பல்ஸரான 150 சீரிஸ் 14bhp@8,500rpm பவர் - 1.32kgm@6,500rpm டார்க்கைத் தருகிறது. பல்ஸர் 180 Neon HF, முன்பைப் போலவே 17bhp@8,500rpm பவரை வெளிப்படுத்துகிறது. கார்புரேட்டருக்குப் பதிலாக Fi வந்துவிட்டதால், BS-6 RS200-க்குச் சமமாக NS200-ம் 24.5bhp@9,750rpm பவரைக் கொண்டுள்ளது செம! பஜாஜின் புதிய BS-6 மாடல்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் பின்வருமாறு,

பல்ஸர் 125 Neon (Drum/Disc) - 68,762 ரூபாய்/73,088 ரூபாய் (முன்பைவிட 5,178/6,502 ரூபாய் அதிகம்)

பல்ஸர் 150 Neon - 85,920 ரூபாய் (முன்பைவிட 10,000 ரூபாய் அதிகம்)

பல்ஸர் 150 Standard - 92,429 ரூபாய் (முன்பைவிட 12,000 ரூபாய் அதிகம்)

அவென்ஜர் BS-6
அவென்ஜர் BS-6
Bajaj Auto

பல்ஸர் 150 Twin Disc - 96,563 ரூபாய் (முன்பைவிட 12,000 ரூபாய் அதிகம்)

பல்ஸர் 180 Neon HF - 1.07 லட்ச ரூபாய் (முன்பைவிட 11,437 ரூபாய் அதிகம்)

பல்ஸர் 220F - 1,16,263 ரூபாய் (முன்பைவிட 8,000 ரூபாய் அதிகம்)

பல்ஸர் NS200 - 1.24 லட்ச ரூபாய் (முன்பைவிட 10,000 ரூபாய் அதிகம்)

பல்ஸர் RS200 - 1.43 லட்ச ரூபாய் (முன்பைவிட 3,000 ரூபாய் அதிகம்)

பஜாஜ் BS-6
பஜாஜ் BS-6
Autocar India

அவென்ஜர் 160 ஸ்ட்ரீட் - 89,536 ரூபாய் (முன்பைவிட 7,501 ரூபாய் அதிகம்)

அவென்ஜர் 220 ஸ்ட்ரீட்/க்ரூஸ் - 1.15 லட்ச ரூபாய் (முன்பைவிட 11,584 ரூபாய் அதிகம்)

பின் செல்ல