Published:Updated:

2.5 லட்சத்துக்கு 250 சிசி ஸ்க்ராம்ப்ளர் பைக்.... பெனெல்லியின் லியோன்சினோவில் என்ன ஸ்பெஷல்?

Leoncino 250
Leoncino 250 ( Benelli India )

டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்ட லியோன்சினோ 250-ல் இருப்பது, 25.8bhp@9,250rpm பவர் மற்றும் 2.1kgm@8,000rpm டார்க்கை வெளிப்படுத்தும் 249சிசி இன்ஜின்.

இந்தியாவில், பெனெல்லி நிறுவனத்தின் விலை குறைவான பைக்காக, `லியோன்சினோ 250' பைக்கை 2.5 லட்சம் ரூபாய்க்கு அறிமுகப்படுத்தியுள்ளது. நம் நாட்டில் இந்த நிறுவனம் ஏற்கெனவே ஒரு 250சிசி நேக்கட் ஸ்ட்ரீட் பைக்கை விற்பனை செய்தது நினைவிருக்கலாம் (TNT 25: 2018-ம் ஆண்டில் இதன் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டது). `லியோன்சினோ 250' பைக்கிற்கான புக்கிங் ஏற்கெனவே பெனெல்லியின் டீலர்களில் தொடங்கிவிட்டதால் (முன்பதிவு தொகை 6,000 ரூபாய்), நவம்பர் 2019 மாதத்தில் டெலிவரிகள் தொடங்கும் எனத் தகவல் வந்திருக்கிறது.

டிசைன் மற்றும் வசதிகள்

Leoncino 250 Headlight
Leoncino 250 Headlight
Benelli India

சரியாக, இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளிவந்த லியோன்சினோ 500 பைக்கைப் போலவே இது காட்சியளிக்கிறது. Oval வடிவ ஹெட்லைட் அதற்கான உதாரணம் என்றாலும், அது Full LED-க்கு மாறிவிட்டது. இதிலும் முன்பக்க மட்கார்டில் Lion cub Motif பொறிக்கப்பட்டிருப்பது நைஸ்.

பெட்ரோல் டேங்க்கின் அளவு ஏறக்குறைய ஒன்றுதான் (12.5 லிட்டர்) என்பதுடன், எக்ஸாஸ்ட் - சீட் - ரேடியேட்டர் - அலுமினிய அலாய் வீல் ஆகியவற்றின் தோற்றத்தில் சிறிய மாறுதல் தெரிகிறது. மற்றபடி Fluorescent கிராஃபிக்ஸ் - ஸ்டீல் ட்ரெல்லிஸ் ஃப்ரேம் - ஸ்விங்ஆர்ம் - 41மிமீ USD & மோனோஷாக் சஸ்பென்ஷன் - செவ்வக வடிவிலான டிஜிட்டல் மீட்டர் எனக் கணிசமான வித்தியாசம் இருக்கிறது. மேலும், 500சிசி மாடலின் முன்பக்கத்தில் இரட்டை 320மிமீ Ventillated டிஸ்க் பிரேக்ஸ் - ரேடியல் Calipers மற்றும் பின்பக்கத்தில் 260மிமீ டிஸ்க் பிரேக் இருந்த நிலையில், 250சிசி மாடலின் முன்னால் இருப்பதோ ஒற்றை 280மிமீ Petal டிஸ்க் பிரேக் - வழக்கமான Axial Caliper மற்றும் பின்னால் 240மிமீ டிஸ்க் பிரேக்தான்!

பைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முழுமையான கையேடு

ரைடர் எர்கனாமிக்ஸ்

Leoncino 250 Cockpit
Leoncino 250 Cockpit
Benelli India

சிறிய இன்ஜினுக்கு ஈடுகொடுக்கும் விதமாக, அளவில் சிறிய ரேடியல் டயர்கள் (முன்: 110/70-R17, பின்: 150/60-R17) பொருத்தப்பட்டுள்ளது. Metzeler Sportec M5 சீரிஸைச் சேர்ந்த இவை, சிறப்பான ரோடு க்ரிப்புக்குப் பெயர் பெற்றவை; லியோன்சினோ 500-ல் தடிமனான 50மிமீ USD - Rebound அட்ஜெஸ்ட்மென்ட் கொண்ட மோனோஷாக் மற்றும் அகலமான 17 இன்ச் டியூப்லெஸ் டயர்கள் (முன்: 120/70-17, பின்: 160/60-17) இருந்தது குறிப்பிடத்தக்கது. 785மிமீ சீட் உயரம் - 145மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் - 2,160மிமீ நீளம் - 1,460மிமீ வீல்பேஸ் கொண்ட லியோன்சினோ 500 உடன் ஒப்பிடும்போது, 810மிமீ சீட் உயரம் - 170மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் - 2,030மிமீ நீளம் - 1,380மிமீ வீல்பேஸ் கொண்ட லியோன்சினோ 250 - புதிய ரைடர்கள் ஓட்டுவதற்கு ஏதுவான பைக்காக இருக்கும் எனத் தோன்றுகிறது. இவற்றிடையே அகலத்திலும் எடையிலும் வித்தியாசம் இருக்கிறது.

இன்ஜின் மற்றும் விலை

டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்ட லியோன்சினோ 250-ல் இருப்பது, 25.8bhp@9,250rpm பவர் மற்றும் 2.1kgm@8,000rpm டார்க்கை வெளிப்படுத்தும் 249சிசி இன்ஜின். இந்த சிங்கிள் சிலிண்டர் - லிக்விட் கூல்டு இன்ஜின், DOHC - 4 வால்வ் - Fi அமைப்பைக் கொண்டிருக்கிறது. மேலும், 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது TNT 25 பைக்கில் இருந்ததுதான் என்றாலும், அதைவிட அதிக பவர் மற்றும் குறைவான டார்க்கைக் கொண்டிருக்கிறது. கேடிஎம் டியூக் 390 மற்றும் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 ஆகிய திறன்மிக்க பைக்குகளுடன் விலை விஷயத்தில் போட்டிபோடும் லியோன்சினோ 250, கொஞ்சம் அதிக விலையைக் கொண்டிருக்கிறதோ என்றே தோன்றுகிறது.

Leoncino 250 Engine
Leoncino 250 Engine
Benelli India

ஆனால், இந்த விலையில் வேறு எந்த ஸ்க்ராம்ப்ளர் பைக்குகளும் கிடையாது என்பது, இந்த பெனெல்லி பைக்குக்கான மிகப்பெரிய ப்ளஸ். கிட்டத்தட்ட லியோன்சினோ 250-ன் அதே மெக்கானிக்கல் பாகங்களைக் கொண்டிருக்கும் TRK 251 பைக்கை, நம் நாட்டில் பெனெல்லி விற்பனைக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியம் இருக்கிறது.

கார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு
லியோன்சினோ 250
லியோன்சினோ 250
Benelli India

ஆனால், ராயல் என்ஃபீல்டின் கிளாஸிக்குக்குப் போட்டியாக, இம்பீரியல் 400 பைக்கை அடுத்தபடியாக அந்த நிறுவனம் வெளியிடும் முடிவில் இருக்கிறது. அதற்கேற்ப இந்த ரெட்ரோ பைக்கின் புக்கிங் டீலர்களில் தொடங்கப்பட்டுவிட்டது (4,000 ரூபாய்). இந்த மாதத்தின் இறுதியில் இம்பீரியல் 400 பைக்கின் டெலிவரிகள் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு