Published:Updated:

டெஸ்ட்டிங்கில் ராயல் என்ஃபீல்டின் BS-6 இன்டர்செப்டர் 650, கான்டினென்ட்டல் GT!

இதன் பவர் மற்றும் டார்க்கில் என்ன வித்தியாசம் இருக்கும் என்பது, இனிவரும் நாள்களில் அதிகாரபூர்வமாகத் தெரியவரும்.

RE 650 Twins
RE 650 Twins ( Royal Enfield India )

இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்ட்டல் GT 650... கடந்த ஆண்டு குழந்தைகள் தினத்தில் பெரியவர்களுக்கான பைக்காக அறிமுகமான இவை, ராயல் என்ஃபீல்டு வரலாற்றில் பல 'முதல்'களைச் சுமந்தன என்றால் மிகையில்லை. ரெட்ரோ டிசைன், ஸ்மூத்தான பேரலல் ட்வின் இன்ஜின், பவர்ஃபுல் பர்ஃபாமன்ஸுக்கு 4 வால்வ் சிஸ்டம், எடைக்குறைவான ஸ்லிப்பர் கிளட்ச், பாதுகாப்புக்கு டூயல் சேனல் ஏபிஎஸ், சிறப்பான ரோடு க்ரிப்புக்கு பைரலி டயர்கள் என பைக் ஆர்வலர்களின் நீண்ட கால எதிர்பார்ப்புக்கு அவை நியாயம் சேர்த்தன.

இதனுடன் 'இந்தியாவின் விலைகுறைவான 2 சிலிண்டர் இன்ஜின் கொண்ட பைக்' என்ற பெருமைக்குச் சொந்தக்காரராக, இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்ட்டல் GT 650 இருக்கின்றது. இதில் விலை குறைவான இன்டர்செப்டர் 650 ரிலாக்ஸ்டான ஓட்டுதலை விரும்புவோருக்கும், விலை அதிகமான கான்டினெட்டல் GT 650 ஸ்போர்ட்டி ரைடர்களுக்கும் பொசிஷன் செய்யப்பட்டன.

RE 650 Twins
RE 650 Twins
Royal Enfield Dealers

பைக்கில் வழங்கப்பட்டிருந்த பலவிதமான கலர் ஆப்ஷன்கள் (Standard, Custom, Special) மற்றும் ஆக்ஸசரீஸும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. என்றாலும், மக்களிடையே இன்டர்செப்டர் மற்றும் டூயல் டோன் கலர்களே (கறுப்பு நிற ரிம்மில் Stainless Steel Spokes) ஃபேவரைட்டாக இருக்கின்றன. இந்த 650சிசி பைக்குகள் விற்பனைக்கு வந்த முதல் 5 மாதத்தில், 5,168 பேரை சென்றடைந்திருக்கின்றன என்பது வரவேற்கத்தக்க அம்சமே!

இதனால் உற்சாகமடைந்த ராயல் என்ஃபீல்டு நிறுவனம், கடந்த ஜூன் மாதம் பிரான்ஸில் நடைபெற்ற எட்டாவது Wheels and Waves நிகழ்ச்சியில், இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்ட்டல் GT 650 ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு 6 Customised பைக்குகளைக் (BAAK Motocyclette, Nought Tea GT, Two Smoking Barrels, MJR Roach, Midas Royale, Malle Rally Royale, காட்சிக்கு வைத்தது. மேலும் தனது டீலர்களில் இந்த 650சிசி பைக்குகளுக்கு எனப் பிரத்யேகமான ஸோன்களை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.

தற்போதைய சூழலில், இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்ட்டல் GT 650 பைக்குகளுக்கு 2 - 3 மாத காலம் வெயிட்டிங் பீரியட் இருக்கிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நாடெங்கும் அமலுக்கு வரவிருக்கும் BS-6 மாசு விதிகளை மனதில்வைத்து, இந்த 650சிசி பைக்குகளை மேம்படுத்தும் பணிகளில் ராயல் என்ஃபீல்டு இறங்கியுள்ளது. அவை திண்டிவனம் - விழுப்புரம் நெடுஞ்சாலையில் டெஸ்ட்டிங்கில் இருந்தபோது படம்பிடித்திருக்கிறார், பாண்டிச்சேரியைச் சேர்ந்த மோட்டார் விகடன் வாசகர் எம்.அர்ஜுன்.

BS-6 RE 650 Twins
BS-6 RE 650 Twins
MV Reader

ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, பைக்கின் டிசைனில் எந்த மாற்றமும் தெரியவில்லை; ஆனால் எக்ஸாஸ்ட் பைப்பின் வடிவமைப்பில் மாறுதல் இருப்பது தெளிவாகிறது. இதன் பவர் மற்றும் டார்க்கில் என்ன வித்தியாசம் இருக்கும் என்பது, இனிவரும் நாள்களில் அதிகாரபூர்வமாகத் தெரியவரும்.

BS-6 RE 650 Twins
BS-6 RE 650 Twins
MV Reader

ஆனால் 'பைக்கில் வசதிகள் குறைவாக இருக்கிறது' என நிலவும் கருத்தை, இந்த மாடலில் அந்த நிறுவனம் சரிசெய்திருக்குமா என்பது சந்தேகமே! அசத்தலான விலையில் வெளியான இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்ட்டல் GT 650 பைக்குகளின் விலையை, வருகின்ற செப்டம்பர் 1, 2019 முதலாக 2% உயர்த்த இந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது. அதன்படி இன்டர்செப்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை 5,012 - 5,400 ரூபாய் வரை ஏற்றம் காணவிருக்கிறது; கான்டினென்ட்டல் GT 650 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை 5,312 - 5,700 ரூபாய் வரை அதிகரிக்க உள்ளது. இந்த விலை ஏற்றம், அந்த பைக்குகளின் விற்பனையைப் பாதிக்காது என்றே தோன்றுகிறது. இதே விலையில் (2.5-3 லட்ச ரூபாய்) கிடைக்கும் மற்ற பைக்குகளுடன் ஒப்பிடும்போது, இந்த 650சிசி பைக்ஸ் கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்கவையாக இருக்கின்றன என்பதே அதற்கான காரணம்.

Wheels & Waves 2019
Wheels & Waves 2019
Royal Enfield UK
Wheels & Waves 2019
Wheels & Waves 2019
Royal Enfield UK