Published:Updated:

ஒரு கார் எப்படித் தயாராகுது தெரியுமா... கோவையில் தெரிஞ்சிக்கலாம் வாங்க!

ரஞ்சித் ரூஸோ

வெள்ளைக் காகிதத்திலிருந்து ஒரு முழுமையான வாகனம் எப்படி உருவாகிறது என்ற கேள்வி உங்களுக்குள் இருந்தால் உடனே கோவைக்குக் கிளம்புங்கள்.

கார் டிசைன் - ஒரு நாள் பயிலரங்கம்
கார் டிசைன் - ஒரு நாள் பயிலரங்கம்

காற்றைத் தவிர எல்லாவற்றுக்குமே உருவம் உண்டு. உருவத்தை உருவாக்குகிறவன் படைப்பாளி என்றால், டிசைனர்களும் அப்படியே! ஒரு உளுந்துவடைக்கு நடுவே ஓட்டை இருக்க வேண்டும் என்பதைக் கண்டுபிடித்தவரைக்கூட படைப்பாளி என்று சொல்லலாம். இதற்கு அடிப்படை, க்ரியேட்டிவிட்டி. இந்த க்ரியேட்டிவிட்டி எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும்.

ஒரு காரை எப்படி டிசைன் செய்வது
ஒரு காரை எப்படி டிசைன் செய்வது

செல்போன், லேப்டாப், கண்ணாடி, வாட்ச், பர்ஸ், செருப்பு என்று பல பொருள்களை உருகி உருகிப் பயன்படுத்துகிறோம். ஆனால் இவை எங்கே, யாரால் டிசைன் செய்யப்படுகிறது, இதன் க்ரியேட்டிவிட்டி என்ன என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதிலும் ஆட்டோமொபைல் துறையின் ‘டிசைனிங்’ என்பது, க்ரியேட்டிவிட்டியின் உச்சம்.

ஒரு இனோவா காரையே எடுத்துக் கொள்வோம். மூக்கு நீளமாக, பின் பக்கம் ஃப்ளாட்டாக, கோபமான கிரில் கொண்ட இந்த காரை ஒரு முழுமையான வாகனமாக்க எப்படியெல்லாம் யோசித்திருப்பார்கள்?

ஒரு கார் எப்படித் தயாராகுது தெரியுமா... கோவையில் தெரிஞ்சிக்கலாம் வாங்க!

இதற்காக மாணவர்களுக்குப் பயிற்சி எடுக்கத் தயாராக இருக்கிறார், அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பாளர் சத்தியசீலன்.

சத்தியசீலன்
சத்தியசீலன்

அசோக் லேலாண்டின் லாரிகள், தோஸ்த் வேன் எனப் பல வாகனங்கள் இவரின் வடிவமைப்பில் வந்ததே! MIT உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் கல்விக்குழு உறுப்பினராக இருக்கும் சத்தியசீலன், கார் டிசைன் செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு ஓர் அற்புதமான அனுபவத்தைத் தர இருக்கிறார்.

ஆம்! கார் டிசைனின் அடிப்படை, அதன் கலைச் சொற்கள், பாடி ஸ்டைல்கள், ஸ்கெட்ச்கள், க்ளே மாடலிங் என்று ஏகப்பட்ட வரைபட உத்திகளோடு, 'இப்படித்தான் ஒரு கார் உருவாகுது' என்கிற ரகசியத்தை மாணவர்களோடு பகிர்ந்துகொள்ளத் தயாராக இருக்கிறார் சத்தியசீலன்.

விவரங்களுக்கு க்ளிக் செய்க...

ஒரு நாள்...ஒரு கார்... ஒரு கனவு
ஒரு நாள்...ஒரு கார்... ஒரு கனவு

2019, ஜூலை 27-ம் தேதி, கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறும் இந்த வகுப்பு மாணவர்களுக்கானது மட்டுமல்ல; டிசைனிங் துறையில், கிரியேட்டிவிட்டியில் ஆர்வமுள்ள எவருக்கும் இது ஒரு வரப்பிரசாதம்தான்.