Published:Updated:

மந்தநிலையிலும் விற்பனையில் கெத்து காட்டிய வாகனங்கள் இவைதான்!

கடந்த நவம்பர் மாதத்தில் சரிந்த வாகனங்களின் விற்பனை, இந்த நவம்பர் மாதம் வரை நீடிக்கிறது.

மந்தநிலை
மந்தநிலை

'கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக' ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் கூறுகிறது. இதன் விளைவாகப் பல சிறு நிறுவனங்கள் மூடப்பட்டும், சில நிறுவனங்கள் சில நாள் வேலையை நிறுத்திவைத்தும் வந்துள்ளன. தேர்தல் நேரம் என்பதால், எதிர்க்கட்சியும் ஆளுங்கட்சியும் மந்தநிலையை வைத்து விளையாடினார்கள்.

வாகன விற்பனை
வாகன விற்பனை

சமீபத்தில், மத்திய அரசு சார்பில் கார்ப்பரேட் வரியும் குறைக்கப்பட்டது. இதன் பின் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஓரளவுக்கு அமைதியாகிவிட்டன. இப்போது, மந்தநிலை என்ற வார்த்தை அரிதாகிவிட்டது.

இவ்வளவு பரபரப்புக்கும் இடையில், எங்களுக்கு மந்தநிலையே இல்லை என்ற அளவுக்கு ராக்கெட் போல பறந்திருக்கிறது சில வாகனங்களின் விற்பனை. அதிலும் டூ-வீலர்களை எடுத்துக்கொண்டால், ஒவ்வொரு மாதமும் லட்சங்களில் விற்பனையாகும் வாகனங்கள் சறுக்கியபோதும் சுஸூகி போன்ற சில வாகன உற்பத்தியாளர்கள் மட்டும் இரண்டு இலக்கில் லாபங்களைக் காட்டினார்கள். சில வாகனங்களின் விற்பனை 300 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருந்துள்ளது. ஒரு பாசஞ்சர் காரின் விற்பனை 647 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. மந்தநிலையும் அதிரடி காட்டிய அந்த வாகனங்கள் எவை என்று பார்ப்போம்.

மந்தநிலையிலும் விற்பனையில் கெத்து காட்டிய வாகனங்கள் இவைதான்!

(மேலுள்ளது 2018 - 19 மற்றும் 2019 - 20 ஆகிய நிதி ஆண்டுகளின் மார்ச் - ஆகஸ்ட் இடையேயான டேட்டா)

ஃபோர்டு ஃபிகோ, எண்டேவர், எர்ட்டிகா போன்ற மாடல்களில் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் ஜெனரேஷன் மாற்றம் நிகழ்ந்ததால் விற்பனை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஈக்கோ, CR-V, SR125, அவெஞ்சர், புல்லட் எலெக்ட்ரா போன்ற வாகனங்களில் அதிகப்படியான தள்ளுபடிக் கொடுக்கப்பட்டதால் இதன் விற்பனை அதிகரித்திருக்கலாம். ஆக்ஸஸ் மற்றம் என்டார்க் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வந்த நாளிலிருந்தே தொடர்ந்து ஏறுமுகத்தில்தான் இருக்கின்றன. மந்தநிலையிலும் இந்த வாகனங்களுக்கு குறிப்பிடும்படியான  டிமாண்டு இருந்துள்ளது இந்த வாகனங்களின் கமர்ஷியல் வெற்றியாகக்கூட இருக்கலாம். 

ஸ்விக்கி, ஜொமாட்டோ, வோகோ போன்ற ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் வளர்ச்சியால், பிளாட்டினாவின் விற்பனை உயர்ந்திருக்கலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.