Published:Updated:

சாதாரண பெட்ரோல் / டீசல், ப்ரீமியம் பெட்ரோல் / டீசல்... எது சிறந்தது?

பெட்ரோல்
பெட்ரோல்

வழக்கமான ‘Unleaded’ பெட்ரோல் மற்றும் ‘Low Sulphur’ டீசலைவிட, சுமார் 3 ரூபாய் அதிக விலையில் கிடைக்கக்கூடிய ப்ரீமியம் பெட்ரோல் மற்றும் டீசலில், அடிட்டீவ்ஸ் எனப்படும் ரசாயனம் கலக்கப்படுகிறது.

- ஜி.ஆர்.சோழன், ராணிப்பேட்டை.

மத்திய அரசாங்கம் 2023 முதலாக எலெக்ட்ரிக் 3 வீலர்கள் (ஆட்டோ), 2025 முதலாக எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் (150 சிசிக்கு உட்பட்டவை), 2030-ல் எலெக்ட்ரிக் கார்கள் என்ற நீண்ட காலத் திட்டத்தின்படி இயங்கி வருகிறது. இதன் வெளிப்பாடாகவே ரிவோல்ட், ஏத்தர், ஒகினாவா, ஹூண்டாய் கோனா, டாடா டிகோர் EV, மஹிந்திரா வெரிட்டோ EV என வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ச்சியாக எலெக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தி வருகின்றன.

இதில் எது உங்கள் தேவை மற்றும் பட்ஜெட்டுக்கு உகந்தபடி வருகிறதோ, அதை நீங்கள் தாராளமாகத் தேர்வு செய்யலாம். ஆனால் அதன் சர்வீஸ் சென்டர்கள், சார்ஜிங் ஸ்டேஷன்கள் ஆகியவை, வழக்கமான வாகனங்களுடன் ஒப்பிடும்போது (பெட்ரோல்/டீசல் பங்க் மற்றும் சர்வீஸ் சென்டர்கள்) அதிக எண்ணிக்கையில் இல்லை என்பதை நினைவில் கொள்ளவும்.

> சாதாரண பெட்ரோல்/டீசல், ப்ரீமியம் பெட்ரோல்/டீசல்... இவற்றில் எது சிறந்தது?

- சம்பத், தூத்துக்குடி.

வழக்கமான ‘Unleaded’ பெட்ரோல் மற்றும் ‘Low Sulphur’ டீசலைவிட, சுமார் 3 ரூபாய் அதிக விலையில் கிடைக்கக்கூடிய ப்ரீமியம் பெட்ரோல் மற்றும் டீசலில், அடிட்டீவ்ஸ் எனப்படும் ரசாயனம் கலக்கப்படுகிறது. இது இன்ஜின் இயங்கும்போது உள்ளே ஏற்படும் உராய்வைக் கட்டுப்படுத்துவதுடன், வால்வுகள் - கம்பஷன் சேம்பர் - ஃப்யூல் இன்ஜெக்டரில் ஏற்பட்டுள்ள Carbon Deposit-களைச் சுத்தப்படுத்திவிடும்.

இன்ஜின் Head - சிலிண்டர் Area, அதனைச் சுற்றியுள்ள இதர பாகங்களில் படிந்திருக்கும் Deposit-களை நீக்குவதுதான் கார்பன் க்ளீனிங். இந்தியாவில் இது இன்னும் பரவலாக அறியப்படவில்லை.

எனவே இன்ஜின் சீராக இயங்கவும், தொடர்ச்சியாக நல்ல பிக்-அப் கிடைக்கவும் வழிவகுக்கிறது. இதனால் முன்பைவிட சற்று அதிக மைலேஜையும், குறைவான புகையையும் இன்ஜின் வெளிப்படுத்தும். இந்தியன் ஆயில் - எக்ஸ்ட்ரா ப்ரீமியம்/எக்ஸ்ட்ரா மைல், பாரத் பெட்ரோலியம் - ஸ்பீடு/ஹை ஸ்பீடு, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் - பவர்/டர்போஜெட், ஷெல் - வி-பவர் பெட்ரோல்/டீசல் எனவும் அழைக்கப்படுகின்றன.

> குறைவான பராமரிப்புச் செலவுகள் - போதுமான வசதிகள் - அதிக மைலேஜ் தரக்கூடிய பைக் வாங்க ஆசைப்படுகிறேன். எனக்கு ஹீரோவின் கிளாமர் பைக் (பழைய லுக்கில் இருப்பது) பிடித்திருக்கிறது. எனது தேர்வு சரியா?

- சதீஷ், சென்னை.

‘சூப்பர் ஸ்ப்ளெண்டர் பார்க்க மிகவும் கம்யூட்டர் பைக் போலக் காட்சியளிக்கிறது’ எனப் பேச்சு எழுந்ததால், அதன் மாடர்ன் வெர்ஷனாக ஹீரோ கொண்டு வந்ததுதான் கிளாமர். பெயருக்கேற்றபடி பைக் ஸ்டைலாக இருந்தாலும், டெக்னிக்கலாக இது சூப்பர் ஸ்ப்ளெண்டர்தான். எனவே, வசதிகள் மனநிறைவைத் தந்தாலும், பர்ஃபாமன்ஸ் விஷயத்தில் இது ஓகே ரகம்தான்.

மைலேஜ் மற்றும் பராமரிப்புச் செலவுகள் விஷயத்தில் பைக் பெரிதாகக் கையைக் கடிக்காது. ஆனால் இதன் விற்பனை நிறுத்தப்பட்டு, தற்போது ஹீரோவின் சொந்த Semi Vertical 125சிசி இன்ஜினுடனே கிளாமர் கிடைக்கிறது. எனவே, இந்த பைக்கை நீங்கள் டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்துவிட்டு முடிவெடுங்கள். ஷைன் 125 SP அல்லது டிஸ்கவர் 125 ஆகிய பைக்குகளையும் நீங்கள் பரிசீலிக்கலாம்.

சாதாரண பெட்ரோல் / டீசல், ப்ரீமியம் பெட்ரோல் / டீசல்... எது சிறந்தது?

> நான் மிட்சுபிஷி லேன்ஸர் டீசல் காரை வைத்திருக்கிறேன். அது 1,20,000 கிமீ ஓடியிருக்கிறது. நான் தற்போது காரின் இன்ஜினுக்கு கார்பன் க்ளீனிங் மற்றும் சிந்தடிக் ஆயில் ஆகியவற்றைப் பயன்படுத்தும் முடிவில் இருக்கிறேன். எனது காருக்கு சிந்தடிக் ஆயில் ஊற்றினால், 10,000 கிமீ வரை ஆயில் மாற்ற வேண்டியதில்லை என நண்பர் கூறுகிறார். இது உண்மையா?.

- ஜெயஷண்முகன், ஈரோடு.

இன்ஜின் Head - சிலிண்டர் Area, அதனைச் சுற்றியுள்ள இதர பாகங்களில் படிந்திருக்கும் Deposit-களை நீக்குவதுதான் கார்பன் க்ளீனிங். இந்தியாவில் இது இன்னும் பரவலாக அறியப்படவில்லை. எனவே, அனுபவம் வாய்ந்த டெக்னீஷியன்கள்தான் இதில் கை வைக்க வேண்டும். இழந்த ஆற்றலை இன்ஜின் மீண்டும் பெறுவதுடன், அது முன்பைவிட அதிக மைலேஜையும் - குறைந்த காற்று மாசையும் தரும். இதனால் இன்ஜின் பாகங்களின் ஆயுளும் கூடும் என்பது ப்ளஸ். உங்கள் இன்ஜின் அதிக கி.மீ ஓடியிருப்பதுடன், பழைய வகை இன்ஜினாக இருப்பதாலும், சிந்தடிக் ஆயில் பயன்படுத்துவது நல்ல முடிவாக இருக்காது.

இது Base ஆயிலுடன் அதிகமான ரசாயனங்கள் கலந்து செய்யப்பட்டது என்பதால், அது வழக்கமான ஆயில்களைவிட அதிக ஆயுளைக் கொண்டிருக்கிறது. ஆனால், இன்ஜினுக்குள்ளே இருக்கும் Deposit-களுடன் இணைபுரிவதற்கான சாத்தியம் இருக்கிறது.

எனவே, அதற்குப் பதிலாக, ஆயில் மாற்றுவதற்கு முன்பு அதில் Engine Oil Flush-ஐ ஊற்றிவிடவும். பிறகு 5-10 நிமிடங்கள் வரை இன்ஜினை ஐடிலிங்கில் ஓட விடவும். பிறகு ஆயிலை இறக்கிவிட்டு, புதிய மினரல் ஆயிலுடன் ஆயில் அடீட்டிவ்ஸைச் சேர்த்துவிடவும். ஒருவேளை செமி சிந்தடிக் ஆயில் ஊற்றினால், ஆயில் அடீட்டிவ்ஸைப் பயன்படுத்தக்கூடாது.

இந்த கார்பன் க்ளீனிங் - Engine Oil Flush - Engine Oil Additives ஆகியவற்றை, ஒருசேர செய்துவிட வேண்டாம். கார்பன் க்ளீனிங்கைவிட, Engine Oil Flush & Engine Oil Additives-ன் விலை குறைவு என்பதால், முதலில் நீங்கள் இதையே பயன்படுத்திப் பார்க்கலாம். அது உங்களுக்குத் திருப்தி தராத பட்சத்தில், கார்பன் க்ளீனிங்கைச் செய்யலாம்; ப்ரீமியம் எரிபொருள்களையும் பரிசீலிக்கலாம்.

- முந்தைய இதழ்களின் மோட்டார் கிளினிக் பகுதியில் இடம்பெற்ற கேள்வி - பதில்கள் இவை. ஜனவரி 2020 மோட்டார் விகடன் இதழின் பகுதிக்கு > மோட்டார் கிளினிக் கேள்வி-பதில் https://www.vikatan.com/news/general-news/motor-clinic-question-and-answer

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு