Published:Updated:

7000 கோடி முதலீட்டில் இந்தியாவுக்கு வரும் சீனாவின் ' கிரேட் வால்'

எஸ்யூவி மற்றும் பிக்அப் டிரக் தயாரிப்பில் சீனாவின் முக்கியமான நிறுவனமாக இருக்கும் கிரேட் வால் மோட்டார்ஸ் கம்பெனியின் இந்திய முதலீடு பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Great Wall/கிரேட் வால்
Great Wall/கிரேட் வால்

சீனாவில் எஸ்யூவி மற்றும் பிக்அப் டிரக் தயாரிப்புகளுக்குப் பெயர் பெற்ற `கிரேட் வால் மோட்டார்ஸ்' நிறுவனம், இந்தியாவில் தனது தொழிற்சாலையைத் தொடங்க 7000 கோடி ரூபாய்வரை முதலீடு செய்யப்போவதாகத் தகவல் வெளிவந்துள்ளது. இந்தியாவில் புதிய தொழிற்சாலை அமைக்கும் திட்டம் வைத்திருந்த இந்நிறுவனம் அதற்காக Haval Motor India என்ற துணை நிறுவனம் ஒன்றைத் தொடங்கியது.

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள Haval எஸ்யூவி
இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள Haval எஸ்யூவி

இந்தத் துணை நிறுவனம், இவ்வருடம் அக்டோபர் மாதத்துக்கு முன்பே தொடங்கப்பட்டதால் கடந்த மாதம் மத்திய அரசு அறிவித்த புதிய நிறுவனங்களுக்கான 15 சதவிகித கார்ப்ரேட் வரி குறைப்புச் சலுகை கிடைக்கவில்லை. இதனால், வேறு பெயரில் இன்னொரு புதிய துணை நிறுவனம் தொடங்க கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனத்தினர் திட்டமிட்டுள்ளார்கள். புதிய துணை நிறுவனத்தின் கீழ் தொழிற்சாலையை உருவாக்கும் திட்டம் வைத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

தொழிற்சாலை அமைக்கத் தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா,  குஜராத் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இடம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் தொழிற்சாலை அமைய அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. மாநில சலுகைகளுக்காக மகாராஷ்டிரா அரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப்போகிறார்கள் கிரேட் வால் மோட்டார்ஸ் நிர்வாகிகள்.  

`90 நிமிடங்கள்; விடுமுறையில் 3 மணிநேரம்!' - வீடியோ கேம்களுக்கு சீனா கட்டுப்பாடு

தற்போது பிரதமர் மோடியைச் சந்திக்க டிசம்பர் முதல் வாரத்தில் நேரம் ஒதுக்கச்சொல்லி பிரதமர் அலுவலகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார்கள். பிரதமரைச் சந்தித்த பின் இந்நிறுவனம் தங்களுடைய முதலீடுகளைப் பற்றி அறிவிப்புகளை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் Haval எனும் எஸ்யூவி தற்போது நம் நாட்டில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. வரும் ஆட்டோ எக்ஸ்போவில் இந்நிறுவனம் Haval எஸ்யூவியை காட்சிப்படுத்துவார்கள் எனத் தெரிகிறது.