Election bannerElection banner
Published:Updated:

`இந்தியாவின் முதல் BS-6 பைக்' - ஹீரோ ஸ்ப்ளெண்டர் i-Smart-ல் என்ன ஸ்பெஷல்?

ஸ்ப்ளெண்டர் i-Smart BS-6
ஸ்ப்ளெண்டர் i-Smart BS-6 ( Hero Motocorp )

BS-4 மாடலில் 109.15 சிசி கார்புரேட்டட் இன்ஜின் இருந்த நிலையில், BS-6 இன்ஜினில் 113.2 சிசி ஃப்யூல் இன்ஜெக்‌டட் இன்ஜின் இருக்கிறது.

64,900 ரூபாய் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையில், ஸ்ப்ளெண்டர் i-Smart 110சிசி பைக்கின் BS-6 வெர்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது ஹீரோ. ஏப்ரல் 1, 2020 முதல் நாடெங்கும் BS-6 விதிகள் அமலுக்கு வரும் நிலையில், `இந்தியாவின் முதல் BS-6 பைக்' என்ற பெருமையை இது பெற்றிருக்கிறது. ஏனெனில், இந்தியாவின் முதல் BS-6 ஸ்கூட்டராக, ஹோண்டாவின் ஆக்டிவா 125 வெளிவந்திருப்பது தெரிந்ததே. தற்போது விற்பனையில் இருக்கும் BS-4 ஸ்ப்ளெண்டரைவிடப் புதிய மாடல் 7,470 ரூபாய் அதிக விலையில் களமிறங்கியிருக்கிறது. புதிய இன்ஜின், புதிய ஃப்ரேம் எனக் கணிசமான மாற்றங்களுடன் வந்திருக்கும் புதிய மாடலில் என்ன ஸ்பெஷல்?

டிசைன் மற்றும் வசதிகள்

டிசைன் அளவில் பைக்கில் பெரிய மாற்றங்கள் தெரியவில்லை. டூயல் டோன் கலர் & கிராஃபிக்ஸ், வீல் ஸ்ட்ரிப் ஆகியவை ஏற்கெனவே இருந்ததுதான் என்றாலும், கலர் காம்பினேஷன் மற்றும் லோகோவின் பொசிஷன் ஆகியவற்றில் மாற்றம் தெரிகிறது. இண்டிகேட்டர்கள் - எக்ஸாஸ்ட் பைப் - சில பாடி பேனல்கள் ஆகியவை புதிதாகக் காட்சியளிப்பதுடன், முன்பக்கத்தில் 240மி.மீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. முன்பக்கத்தில் இருந்த Reflector மட்கார்டில் இருந்து, டிஸ்க் பிரேக் அருகே ஷிஃப்ட் ஆகிவிட்டது; அதேபோல, பின்பக்கத்தில் டெயில் லைட்டுக்கு அடியே இருந்த Reflector, பின் மட்கார்டின் அடிப்பகுதிக்குச் சென்றுவிட்டது.

Splendor BS-6 i-Smart
Splendor BS-6 i-Smart
Hero Motocorp

ஹெட்லைட் முன்பைவிட அதிக வெளிச்சத்தை உமிழும் என ஹீரோ தெரிவித்துள்ளது. அநேகமாக 35/35W பல்புக்குப் பதிலாக, 60/55W பல்ப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அனலாக் - டிஜிட்டல் மீட்டர், 18 இன்ச் 80/100 டியூப்லெஸ் டயர்கள், ஸ்ப்ளிட் கிராப் ரெயில், i3S சிஸ்டம், 3Ah MF பேட்டரி போன்ற வசதிகள் தொடர்கின்றன.

BS-4 மாடலில் Tubular Double Cradle சேஸி இருந்த நிலையில், BS-6 மாடலில் புதிய Diamond சேஸி பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன் முன்பைவிட 15மிமீ அதிக சஸ்பென்ஷன் டிராவலுடன் (120மிமீ) கூடிய முன்பக்க 30மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் இடம்பெற்றுள்ளதால், புதிய ஸ்ப்ளெண்டர் i-Smart பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸ் முன்பைவிட 15மிமீ அதிகரித்திருக்கிறது (180மிமீ). இதனால் நம் ஊரின் கரடுமுரடானச் சாலைகளைச் சிறப்பாக இந்த பைக் சமாளிக்கும் என ஹீரோ கூறியுள்ளது.

Splendor BS-6 i-Smart
Splendor BS-6 i-Smart
Hero Motocorp

புதிய சேஸி காரணமாக, 33மிமீ அதிக நீளம் (2,048மிமீ) - 55மிமீ அதிக உயரம் (1,110மிமீ) - 36மிமீ அதிக வீல்பேஸ் (1,281மிமீ) என பைக்கின் அளவுகளில் மாற்றம் தெரிந்தாலும், 116 கிலோ எடை - சீட் உயரம் (799மிமீ) - பின்பக்க ட்வின் ஷாக் அப்சார்பர் ஆகிய டெக்னிக்கல் விவரங்கள் அப்படியே இருப்பது பெரிய ப்ளஸ். பெட்ரோல் டேங்க்கின் அளவு, 8.5 லிட்டரில் இருந்து 9.5 லிட்டராக அதிகரித்துள்ளது. 3 டூயல் டோன் கலர்களில் இது கிடைக்கிறது (நீலம், சிவப்பு, கறுப்பு).

BS-6 இன்ஜினில் என்ன மாற்றம் நிகழ்ந்திருக்கிறது?

Splendor BS-6 i-Smart
Splendor BS-6 i-Smart
Hero Motocorp

BS-4 மாடலில் 109.15சிசி கார்புரேட்டட் இன்ஜின் இருந்த நிலையில், BS-6 இன்ஜினில் 113.2சிசி ஃப்யூல் இன்ஜெக்‌டட் இன்ஜின் இருக்கிறது. இந்த Long Stroke இன்ஜினில் 4சிசி அதிகரித்திருந்தாலும் (50மிமீ Bore X 57.8மிமீ Stroke), 0.4 பவர் குறைந்திருப்பது பெரிய முரண் (9bhp பவர்@7,500rpm). ஆனால் முன்பைவிட 10% கூடுதல் டார்க் அந்தக் குறைபாட்டைச் சரிசெய்யும் எனத் தெரிகிறது (0.99kgm@5,500rpm). ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டத்தை, 6 சென்சார்கள் வாயிலாக ECU கட்டுப்படுத்துகிறது. எனவே, முன்பைவிட 45% குறைவான Carbon Monoxide (0.769g/km), 88% குறைவான NOx (0.046g/km), 80% குறைவான Sulphur வெளியிடு எனச் சுற்றுப்புறச் சூழலுக்குக் குறைவான மாசை இன்ஜின் வெளியிடுவது வரவேற்கத்தக்க அம்சம். ஆனால் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ், 2 வால்வ், ஏர் கூலிங், SOHC என இன்ஜினின் செட்-அப் அதேதான். ஆயில் ஃபில்டர் புதிது.

6 Sensors
6 Sensors
Hero Motocorp
2 யூனிட் மின்சாரத்தில் 110 கி.மீ வரை பயணம்... ஹீரோ எலெக்ட்ரிக்கின் புது மாடல் ஸ்கூட்டர்கள்!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு