Published:Updated:

2020 ஹீரோ HF டீலக்ஸ் - நாட்டின் முதல் 100சிசி BS-6 பைக் இதுதான்!

எதிர்பார்த்தபடியே HF டீலக்ஸின் கிராஃபிக்ஸில் மாறுதல் தெரிந்தாலும், டிசைனிலும் வசதிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

HF டீலக்ஸ் BS-6
HF டீலக்ஸ் BS-6 ( Hero Motocorp )

ஹோண்டாவுக்கு ஆக்டிவா மற்றும் ஷைன் எப்படியோ, ஹீரோவுக்கு ஸ்ப்ளெண்டர் மற்றும் HF டீலக்ஸ் அப்படி. தனது டாப் செல்லிங் மாடல்களின் BS-6 வெர்ஷன்களை ஹோண்டா ஏற்கெனவே விற்பனைக்குக் கொண்டுவந்துவிட்டது தெரிந்ததே (SP 125 - ஷைனின் ப்ரீமியம் வெர்ஷன்); தன் பங்குக்கு BS-6 ஸ்ப்ளெண்டரை (i Smart 110) ஏற்கெனவே அறிமுகப்படுத்திவிட்ட நிலையில், தற்போது HF டீலக்ஸின் BS-6 வெர்ஷனை ஹீரோ களமிறக்கிவிட்டது (ஏற்கெனவே 2 மில்லியனுக்கும் அதிகமான பைக்குகள் விற்பனையாகிவிட்டன)! ஸ்டாண்டர்டு மற்றும் i3S என இரு வேரியன்ட்களில் இந்தக் கம்யூட்டர் வந்திருப்பதுடன், அவற்றின் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே 55,925 ரூபாய் மற்றும் 57,250 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளன. `நாட்டின் முதல் 100சிசி BS-6 பைக்' என்ற பெருமையைக் கொண்ட இதில் என்ன மாற்றங்கள் உள்ளன?

HF Deluxe BS-6
HF Deluxe BS-6
Hero Motocorp

Black with Red, Black with Purple, Black with Grey ஆகிய வழக்கமான கலர் ஆப்ஷன்களுடன், Techno Blue & Heavy Grey with Green எனும் இரு புதிய நிறங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எதிர்பார்த்தபடியே HF டீலக்ஸின் கிராஃபிக்ஸில் (3D லோகோ) மாறுதல் தெரிந்தாலும், டிசைனிலும் வசதிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பைக்கின் High Tensile ஸ்டீல் ஃபிரேமில், 165 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 1,235 மிமீ வீல்பேஸ் ஆகியவை அப்படியே தொடர்கின்றன. இதன் எடை, நீளம், உயரம், அகலம் போன்ற விவரங்களை ஹீரோ வெளியிடவில்லை. முந்தைய BS-4 மாடலைவிட BS-6 வெர்ஷன் 7,350 ரூபாய் அதிக விலையில் வந்திருக்கிறது. ஜனவரி 2020 முதலாக ஹீரோவின் டீலர்களில் புதிய HF டீலக்ஸ் கிடைக்கப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

HF டீலக்ஸ் BS-6 மாடலில் பொருத்தப்பட்டுள்ள 100சிசி இன்ஜின் - 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி, கார்புரேட்டருக்குப் பதிலாக 10 சென்ஸார்களை உள்ளடக்கிய XSens தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது (ஃப்யூல் இன்ஜெக்‌ஷன்). இது 0.3bhp குறைவான பவரை வெளிப்படுத்தினாலும் (7.94bhp@8000rpm), டார்க்கில் நோ சேஞ்ச். ஆனால், அது வெளியாகும் ஆர்பிஎம் மாறியிருக்கிறது (0.8kgm@6000rpm).

HF Deluxe BS-4
HF Deluxe BS-4
Hero Motocorp

முன்பைவிட 6% சிறப்பான ஆக்ஸிலரேஷன் மற்றும் 9% அதிக மைலேஜ் ஆகியவற்றைத் தரும் என்கிறது ஹீரோ. மேலும் கார்புரேட்டருடன் ஒப்பிடும்போது, Cold Start - த்ராட்டில் ரெஸ்பான்ஸ் - பராமரிப்பு விஷயத்தில் P-Fi சிஸ்டம் கையைக் கடிக்காது எனலாம். மற்றபடி IBS உடனான டிரம் பிரேக்ஸ், அலாய் வீல்கள், செல்ஃப் ஸ்டார்ட், டெலிஸ்கோபிக் - ட்வின் ஷாக்ஸ் எனும் டெக்னிக்கல் அம்சங்கள் அப்படியே தொடர்கின்றன.