Published:Updated:

வெளிநாட்டில் இருப்பவரின் பைக்கை, இங்கு விற்பனை செய்வது எப்படி? #DoubtOfCommonMan

Two Wheeler
News
Two Wheeler ( Hero Motocorp )

RC புக்கில் இருக்கும் இன்ஜின் எண், சேஸி எண், வாகன உரிமையாளரின் பெயர் மற்றும் முகவரி ஆகிய தகவல்கள் சரியாக இருக்கின்றனவா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்; பைக்கின் இன்ஷூரன்ஸ் காலாவதியாகாமல் அப்டேட்டாக இருப்பது அவசியம்!

Published:Updated:

வெளிநாட்டில் இருப்பவரின் பைக்கை, இங்கு விற்பனை செய்வது எப்படி? #DoubtOfCommonMan

RC புக்கில் இருக்கும் இன்ஜின் எண், சேஸி எண், வாகன உரிமையாளரின் பெயர் மற்றும் முகவரி ஆகிய தகவல்கள் சரியாக இருக்கின்றனவா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்; பைக்கின் இன்ஷூரன்ஸ் காலாவதியாகாமல் அப்டேட்டாக இருப்பது அவசியம்!

Two Wheeler
News
Two Wheeler ( Hero Motocorp )

விகடனின் #DoubtOfCommonMan பகுதிக்கு பி.தினேஷ் என்ற வாசகர் ஒரு கேள்வியை அனுப்பியிருந்தார். "என் சகோதரர் ஹாங்காங்கில் செட்டிலாகிவிட்டார். அவருடைய பைக்கை நான் பயன்படுத்துகிறேன். அதை இப்போது விற்க விரும்புகிறேன். அதற்கான நடைமுறைகள் என்ன?" என்பதுதான் அவரது கேள்வி.

இந்தக் கேள்வியை துறைசார் நிபுணர்கள் முன் வைத்தோம்.

Activa 5G
Activa 5G
Honda 2 Wheelers

"முதலில் ஃபார்ம் 28 (Non Objection Certificate), 29 மற்றும் 30 (Transfer of Ownership) ஆகியவற்றை, பைக்கைப் பதிவு செய்த RTO அலுவலகத்துக்குச் சென்று வாங்கிக்கொள்ளுங்கள். அதில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களைச் சரியாக நிரப்பி, கையொப்பமிட்டு அதே அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். இதில் பார்ம் 28 (NOC) என்பது, உரிமையாளர் அல்லாமல் வேறொருவர் பைக்கை விற்கும்போது அவசியமான ஆவணம்; நீங்கள் விற்பனை செய்யும் பைக்கை வாங்கியவர், வேறு ஊருக்கு அதை எடுத்துச் செல்ல வேண்டுமானாலும், இந்த ஆவணம் பயன்படும். பார்ம் 29-ல் நீங்கள் மட்டுமே கையெழுத்திட்டால் போதும்.

பார்ம் 30-ல் நீங்களும் பைக்கை வாங்கப்போகும் நபரும் கையெழுத்திட வேண்டும். மற்றபடி RC புக்கில் இருக்கும் இன்ஜின் எண், சேஸி எண், வாகன உரிமையாளரின் பெயர் மற்றும் முகவரி ஆகிய தகவல்கள் சரியாக இருக்கின்றனவா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். மேலும் பைக்கின் இன்ஷூரன்ஸ் காலாவதியாகாமல் அப்டேட்டாக இருப்பது அவசியம். தவிர பைக்கின் Pollution Under Control சான்றிதழ், Life Tax கட்டியதற்கான ரசீது, பைக் உரிமையாளரின் Address Proof மற்றும் Identity Proof போன்றவற்றை உடன் வைத்திருப்பது நல்லது. நீங்கள் ஒருவேளை பைக்கை விற்றுவிட்டால், இன்ஷூரன்ஸை பைக்கை வாங்கியவரின் பெயருக்கு மாற்ற இரு வாரங்கள் வரை ஆகலாம். விற்கப்பட்ட பைக்கின் இன்ஷூரன்ஸில் எந்தவிதமான இழப்பீடும் நீங்கள் பெறவில்லையெனில், காப்பீடு நிறுவனத்திடமிருந்து No Claim Bonus சான்றிதழை மறக்காமல் பெற்றுக் கொள்ளுங்கள்.

இது நீங்கள் புதிய வாகனம் வாங்கும்போது, அதற்கு இன்ஷூரன்ஸ் பெற (அதே காப்பீட்டு நிறுவனத்துக்குச் செல்லும்போது) பயனுள்ளதாக இருக்கும். உங்கள் சகோதரர் பைக்கை கடன்பெற்று வாங்கி, பின் அந்தக் கடனை அடைத்திருக்கிறார் என்றால், பார்ம் 35-ஐ வாங்கி பூர்த்திசெய்து கொடுத்து Hypothecation செய்துகொள்ள வேண்டும். பைக்கை விற்கும்போது, அதற்கான பணத்தை டி.டி/காசோலை வழியாகப் பெறுவது நலம். அதோடு பைக்கை விற்பனை செய்ததற்கான Sales Letter, பைக்கை வாங்கியவரிடம் அதை ஒப்படைத்ததற்கான Delivery Note ஆகியவற்றில் இடம், நாள், நேரம் ஆகியவற்றை நிரப்பி, இரண்டு பேரும் தவறாமல் கையொப்பமிடுவதும் அவசியம். தேவைபட்டால் அப்போது உடனிருப்பவரும் கையெழுத்திடலாம்.

இதுபோன்று உங்களுக்கு எழும் கேள்விகளை அனுப்ப, இங்கே கிளிக் செய்யுங்க!

#DoubtOfCommonMan
#DoubtOfCommonMan
Vikatan