Published:Updated:

டிசையர், அமேஸ் மாடல்களுக்கு போட்டியாக ஹூண்டாயின் புது காம்பாக்ட் செடான் AURA!

எக்ஸ்சென்ட் மாடலின் அப்டேட்டாக, கிராண்டு i10 நியாஸை அடிப்படையாகக் கொண்டு வரப்போகிறது AURA.

ஹூண்டாய் AURA
ஹூண்டாய் AURA ( Autocar India )

ஹூண்டாயின் புதிய காம்பாக்ட் செடான் மாடல் விற்பனைக்கு வரவுள்ளது. ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் எக்ஸ்சென்ட்டின், அப்டேட்டட் மாடலாக விற்பனைக்கு வரவிருக்கிறது. இதற்கு ஹூண்டாய், AURA எனப் பெயர் வைத்துள்ளது.

Hyundai Aura
Hyundai Aura
Autocar India

பெயரைத் தவிர ஹூண்டாய் நிறுவனம் வேறு எந்தத் தகவலும் சொல்லவில்லை. இந்தப் புதிய காம்பாக்ட் செடான் மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், ஃபோர்டு ஆஸ்பயர் மற்றும் டாடா டிகார் மாடல்களுக்குப் போட்டியாக வரப்போகிறது. நமக்குக் கிடைத்த ஸ்பை படங்களை வைத்துப் பார்க்கும்போது இது கிராண்டு i10 நியாஸ் காரை அடிப்படையாகக் கொண்டதாக  இருக்கும் என்று தெரிகிறது. முன்பக்க க்ரில், புரொஜக்டர் ஹெட்லைட், பூமராங் வடிவ LED DRL என நியாஸ் அம்சங்கள் அனைத்தும் இதில் உள்ளன.   

ஹூண்டாய் காம்பாக்ட் செடான்
ஹூண்டாய் காம்பாக்ட் செடான்
Autocar India

நியாஸில் பின்பக்க நம்பர் பிளேட் பூட் லிட்டில் இருக்கும். இதில் கொஞ்சம் கீழே இறக்கி பம்பரில் பொருத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல LED டெயில்லைட் மற்றும் டெயில் பகுதியில் LED ஸ்ட்ரைப் கொடுத்துள்ளார்கள். இந்த செக்மென்ட்டில் முதல் முறையாகக் கொடுக்கப்படும் வசதி இது. செம ஸ்டைலிஷ் வசதியும்கூட.

ஹூண்டாய் AURA-வின் இன்டீரியரும் நியாஸை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கலாம். இதனால், AURA-வில் 8 இன்ச் டச் ஸ்கிரீன், ஸ்மார்ஃபோன் கனெக்ட்டிவிட்டி, குவிக் சார்ஜிங் வசதி/ஒயர்லெஸ் சார்ஜிங், வாய்ஸ் அசிஸ்டென்ட் போன்ற வசதிகள் வரும். வென்யூவில் கொடுக்கப்பட்ட கனெக்டட் கார் வசதியான ப்ளூலிங்க், இதில் வருமா என்பது இன்னும் உறுதியாகவில்லை. பின் சீட் பயணிகளுக்கு இந்த காரில் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வசதிகள் நியாஸில் இல்லை. 

Hyundai Aura
Hyundai Aura
Autocar India

இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸை பொருத்தவரை நியாஸில் இருக்கும் 1.2  லிட்டர் Kappa பிஎஸ்-6 பெட்ரோல் இன்ஜின் மற்றும் U2 1.2 லிட்டர் டீசல் இன்ஜின் இதில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் இந்தியாவின் முதல் 1-1.5 லிட்டர் பிஎஸ்-6 டீசல் இன்ஜினோடு வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. மேனுவல் கியர்பாக்ஸ் உடன், AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன் இதில் இருக்கும். AURA இன்னும் இரண்டு மாதங்களில் விற்பனைக்கு வந்துவிடும் எனத் தெரிகிறது.