Published:Updated:

டீசலுக்கு No சொல்லும் ஹூண்டாய்...! - Nios வருகையால் விலை குறைகிறது கிராண்ட் i10

ரஞ்சித் ரூஸோ

இனி கிராண்ட் i10-ல் வெறும் பெட்ரோல் வேரியன்ட் மட்டுமே விற்பனையில் இருக்குமாம்.

Grand i10 Nios
Grand i10 Nios ( Hyundai Motor India )

கிராண்ட் i10 Nios கார்கள் விற்பனைக்கு வரவுள்ள நிலையில், பழைய கிராண்ட் i10 காரும் விற்பனையில் இருக்கும் என சில ஹூண்டாய் டீலர்களிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது. ஆனால், வெறும் பெட்ரோல் மாடல்கள் மட்டும்தான் இருக்கும் என்கிறார்கள் அவர்கள்.

Grand i10
Grand i10

தற்போது விற்பனையில் இருக்கும் 2-ம் தலைமுறை கிராண்ட் i10, சான்ட்ரோ மற்றும் புதிய i10 நியோஸ் கார்களுக்கு இடையே பொசிஷன் செய்யப்படவுள்ளது. விலை அதிகமான ஆஸ்ட்டா மற்றும் விலை குறைவான இரா வேரியன்ட்கள் இனி கிடையாது. வெறும் மேக்னா, ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் டூயல் டோன் மட்டுமே விற்பனைக்கு இருக்குமாம். i10 நியோஸ் காரில் டீசல் வருவதால், தற்போது இருக்கும் கிராண்ட் i10-ல் டீசல் மாடல் நிறுத்தப்படுகிறது. டீசல் இன்ஜினோடு சேர்த்து ஆட்டோமேடிக் கியர்பாக்ஸும் நிறுத்தப்படவுள்ளதாம்.

கிராண்ட் i10-ல் ஆட்டோமேட்டிக் தேவை என்பவர்கள், i10 நியோஸில் வரவிருக்கும் 5 ஸ்பீடு AMT அல்லது சான்ட்ரோவில் வரும் 4 ஸ்பீடு டார்க் கன்வர்ட்டர் ஏதோ ஒன்றைத்தான் இதில் தேர்ந்தெடுக்க வேண்டும். வசதிகளைப் பொறுத்தவரை கிராண்ட் i10 மேக்னா வேரியன்ட்டில் சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், பவர் விண்டோஸ், இரண்டு ஏர்பேக், ஏபிஎஸ், வீல் கவர், சாதாரண டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரியர் ஏசி வென்ட் மட்டுமே வருகின்றன. ஸ்போர்ட்ஸ் வேரியன்ட்டில் கூடுதலாக ஆப்பிள் கார்பிளே, ஆண்டிராய்டு ஆட்டோ, 7 இன்ச் டச் ஸ்கிரீன், LED DRL, எலெக்ட்ரிக் அட்ஜஸ்டபிள் மிரர், பின்பக்க ஏசி, பார்க்கிங் சென்சார் மற்றும் கேமரா, ABS-EBD மற்றும் டூயல் ஏர்பேக் வருகின்றன. 

கிராண்ட் i10 Nios
கிராண்ட் i10 Nios
ஹூண்டாய்
ஹூண்டாயின் புதிய கிராண்ட் i10 நியோஸ்...ஸ்விஃப்ட்டுக்குப் போட்டி?!

தற்போது கிராண்ட் i10-ன் மேக்னா வேரியன்ட் ரூ.6.83 லட்சத்துக்கும் ஸ்போர்ட்ஸ் வேரியன்ட் 7.17 லட்சம் ரூபாய்க்கும் கிடைக்கின்றன. டூயல் டோன் நிறம் தேவை என்றால் ரூ.23,000 கூடுதலாகச் செலவழிக்க வேண்டும். i10 நியோஸ் விற்பனைக்கு வரும் நிலையில், தற்போது இருக்கும் கிராண்ட் i10-ன் விலை ரூ.20,000 வரை குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.