Published:Updated:

ஹூண்டாயின் புதிய கிராண்ட் i10 நியோஸ்...ஸ்விஃப்ட்டுக்குப் போட்டி?!

வாடிக்கையாளர்களுக்கு இடவசதி, சிறப்பம்சங்கள், பர்ஃபாமன்ஸ் ஆகியவை அதிகமாகக் கிடைக்கும் என்பதைப் பறைசாற்றும் விதமாகவே நியோஸ் எனும் அடைமொழி சேர்க்கப்பட்டிருக்கிறது.

புத்தம் புதிய கிராண்ட் i10 காருக்கான காத்திருப்பு, ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது எனலாம். வரும் ஆகஸ்ட் 20–ம் தேதி உலகளவில் அறிமுகமாக இருக்கும் இந்த ஹேட்ச்பேக், இந்தியாவில் அன்றே விற்பனைக்கு வருகிறது. இந்த நிலையில் மூன்றாம் தலைமுறை i10 மாடலாக, கிராண்ட் i10 நியோஸ் (Nios) காரின் படங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது ஹூண்டாய். `நியோஸ் என்றால் அதிகம்’ என அந்த நிறுவனம் விளக்கம் அளித்திருக்கிறது.

Grand i10 Nios Side
Grand i10 Nios Side
Hyundai Motor India

வாடிக்கையாளர்களுக்கு இடவசதி, சிறப்பம்சங்கள், பர்ஃபாமன்ஸ் ஆகியவை அதிகமாகக் கிடைக்கும் என்பதைப் பறைசாற்றும் விதமாகவே நியோஸ் எனும் அடைமொழி சேர்க்கப்பட்டிருக்கிறது. புதிய மாடல் களமிறங்கினாலும், தற்போது விற்பனையில் இருக்கும் கிராண்ட் i10 காரும் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் எனத் தகவல் வந்திருக்கிறது. மேலும், ஹூண்டாயின் டீலர்களில் 11 ஆயிரம் ரூபாயைச் செலுத்தி, காரை ஆகஸ்ட் 7–ம் தேதியில் இருந்து புக் செய்யலாம். இந்த மாதத்தின் இறுதியில் டெலிவரி தொடங்கலாம். ஸ்விஃப்ட் மற்றும் ஃபீகோவுக்குப் போட்டியாக வந்திருக்கும் இதில் என்ன ஸ்பெஷல்?

டிசைன் மற்றும் கேபின்

காரின் முன்பக்கத்தில் சான்ட்ரோவின் வாசம் அடித்தாலும், புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் மற்றும் ஹூண்டாயின் பிரத்யேகமான ‘Cascading Grille' ஃப்ரெஷ்ஷாக உள்ளன. அந்தப் பெரிய கிரில்லின் இருபுறமும், LED DRL இடம்பெற்றிருப்பது செம டச். பக்கவாட்டில் Window Line டெயில்கேட் நோக்கி உயர்ந்துகொண்டே செல்வதுடன், க்ரோம் வேலைப்பாடுடன் கூடிய கதவு கைப்பிடிகள் நல்ல மேட்ச். Shark Fin Antenna, டூயல் டோன் அலாய் வீல்கள், இண்டிகேட்டருடன் கூடிய மிரர்கள், க்யூட்டான பனி விளக்குகள், ரிவர்ஸ் கேமரா ஆகியவை, கிராண்ட் i10 நியோஸின் ஸ்மார்ட்டான டிசைனுக்குத் துணைநிற்கின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, தற்போதைய மாடலை நினைவுபடுத்துபடியான Profile இருந்தாலும், புதிய மாடல் கொஞ்சம் பெரிதாகி இருக்குமோ எனத் தோன்றுகிறது; கேபின் இடவசதியும் இதனால் முன்னேறியிருக்கலாம்.

Grand i10 Nios Cabin
Grand i10 Nios Cabin
Hyundai Motor India

Ivory - Grey நிறத்தில் உள்ள கேபின், புதிய டேஷ்போர்டைப் பெற்றிருக்கிறது. அதில் 8 இன்ச் டச் ஸ்க்ரீன், சென்டர் கன்சோலில் பிரதான இடத்தைப் பிடித்திருக்கிறது. அதைச் சுற்றி பட்டன்கள் மற்றும் டயல்கள் இருந்தாலும், பார்வைக்கு அழகாகவே உள்ளன. டேஷ்போர்டு மற்றும் கதவு பேடுகளில் உள்ள Textured ஃபினிஷ் வெரி நைஸ். வென்யூவில் இருக்கும் அதே ஸ்டீயரிங் வீல், டச் ஸ்க்ரீன், ஏசி வென்ட் ஆகியவை இங்கும் Cut Copy Paste செய்திருக்கிறது ஹூண்டாய். எனவே கிராண்ட் i10 நியோஸ் காரில் ப்ளூலிங்க் கனெக்ட்டிவிட்டி இருப்பதற்கான சாத்தியம் அதிகம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டோர் பாக்கெட்ஸ் பெரிதாக இருப்பதுடன், க்ளோவ் பாக்ஸுக்கு மேலே பொருள்களை வைக்க இடம், முன்பக்க சீட்களுக்கு இடையே கப் ஹோல்டர், கியர் லீவருக்கு அருகே மொபைல் வைக்க இடம் என கேபினில் அதிக ஸ்டோரேஜ் ஸ்பேஸ் இருப்பது வரவேற்கத்தக்கது. பின்பக்க சீட்டின் படங்கள் கிடைக்கவில்லை என்றாலும், முன்பைவிட அதிக லெக்ரூம் மற்றும் ஹெட்ரூம் இருக்கலாம். கன்ட்ரோல்கள் & மெட்டல் வேலைப்பாடுடன் கூடிய ஸ்டீயரிங் வீல், எலெக்ட்ரிக் மிரர்கள், வயர்லெஸ் சார்ஜிங், அனலாக் டிஜிட்டல் மீட்டர், கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, 2 காற்றுப்பைகள் என அதிக சிறப்பம்சங்கள் உள்ளன.

இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன் மற்றும் வேரியன்ட்கள்

Grand i10 Nios Decal
Grand i10 Nios Decal
Hyundai Motor India

தற்போதைய மாடலில் இருக்கும் 1.2 லிட்டர் Kappa Dual VTVT மற்றும் 1.2 லிட்டர் U2 CRDi ஆகிய 4 சிலிண்டர் பெட்ரோல்/டீசல் இன்ஜின் ஆப்ஷன்களே, கிராண்ட் i10 நியோஸில் தொடர்கின்றன. இதில் 5 ஸ்பீடு மேனுவல் ஸ்டாண்டர்டாக இருந்தாலும், சான்ட்ரோவைத் தொடர்ந்து AMT ஆப்ஷன் இங்கும் வழங்கப்படலாம். ஆனால், அதன் விலையைக் கட்டுக்குள் வைக்க, டாப் வேரியன்ட்களில் AMT இடம்பெறாமல் போகலாம். எப்படி கிராண்ட் i10 காரிலிருந்து எக்ஸென்ட் உருவானதோ, அதேபோல கிராண்ட் i10 நியோஸிலிருந்து ஒரு காம்பேக்ட் செடானும் வரும். ஆனால், அதுவும் இந்த ஹேட்ச்பேக்கைப் போலவே வேறு பெயரில் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. இது அடுத்த ஆண்டில்தான் விற்பனைக்கு வரும்.

10 வேரியன்ட்களில் வரப்போகும் கிராண்ட் i10 நியோஸின் பெட்ரோல் மாடலின் ஆரம்ப Era வேரியன்ட், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே வரும். இதுவே Magna மற்றும் Sportz ஆகிய மிட் வேரியன்ட்களில், AMT ஆப்ஷன் வழங்கப்படும். மேலும் Sportz வேரியன்ட்டில் டூயல் டோன் Paint Scheme இருக்கிறது. டாப் வேரியன்ட்டான Asta-வில், எதிர்பார்த்தபடியே அதிக வசதிகளைக் கொண்டிருக்கும். எனினும் அதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே இருக்கும். டீசல் மாடலின் ஆரம்ப வேரியன்ட்டான Magna-வில், 5 ஸ்பீடு மேனுவல் மட்டுமே. ஹூண்டாயின் முதல் டீசல் - AMT கூட்டணி, Sportz வேரியன்ட்டில் வரும் என்பதுடன், இதில் மேனுவல் கியர்பாக்ஸ் கிடையாது. தவிர பெட்ரோல் மாடல் போலவே, டீசல் மாடலின் டாப் வேரியன்ட்டான Asta, மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே கிடைக்கும். எனவே டீசல் ஆட்டோமேட்டிக் வேண்டும் என்றால், Sportz வேரியன்ட்டை வாங்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

Grand i10 Nios TailGate
Grand i10 Nios TailGate
Hyundai Motor India
Grand i10 Nios Taillight
Grand i10 Nios Taillight
Hyundai Motor India

AIS-145 மற்றும் க்ராஷ் டெஸ்ட் விதிகளுக்கேற்ப காரின் கட்டுமானம் அமைந்திருக்கும் என்பதுடன், பாதுகாப்பு வசதிகள் (2 காற்றுப்பைகள், ஏபிஎஸ், சீட் பெல்ட் ரிமைண்டர், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஸ்பீடு வார்னிங் சிஸ்டம்) அனைத்து வேரியன்ட்டிலும் இருக்கலாம். ஒரு லட்ச ரூபாய் வரையிலான ஆஃபரில் கிடைக்கும் தற்போதைய மாடலைவிட அதிகமான விலையில்தான் கிராண்ட் i10 நியோஸ் களமிறங்கும் என்றாலும், அதிக வசதிகள் மற்றும் ஸ்டைலான டிசைனால் அதை ஹூண்டாய் நியாயப்படுத்தும் என்றே தோன்றுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு