Published:Updated:

90th Anniversary - லிமிடெட் எடிஷன் பைக்கை வெளியிட்டது ஜாவா!

‘90th Anniversary Edition’ எனப் பெயரிடப்பட்டுள்ள இது, டூயல் சேனல் ஏபிஎஸ் உடனான ஜாவா பைக்கை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது.

90th Anniversary Edition
90th Anniversary Edition ( Jawa India )

ஜாவா பிராண்ட் அறிமுகமாகி 90 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதமாக, ஒரு லிமிடெட் எடிஷன் பைக்கை அந்த நிறுவனம் களமிறக்கியுள்ளது. ‘90th Anniversary Edition’ எனப் பெயரிடப்பட்டுள்ள இது, டூயல் சேனல் ஏபிஎஸ் உடனான ஜாவா பைக்கை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது. பெயருக்கேற்றபடி 90 பைக்குகள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கமான மாடலின் விலையிலேயே லிமிடெட் எடிஷனும் வந்திருப்பது கவனிக்கத்தக்கது.

90th Anniversary Edition ஜாவா
90th Anniversary Edition ஜாவா
Jawa India

நாடெங்கும் நூற்றுக்கும் அதிகமாக உள்ள ஜாவா டீலர்களுக்கு இந்த பைக்குகள் ஏற்கெனவே சென்றடைந்துவிட்டதாகத் தகவல் வந்திருக்கிறது (அக்டோபர் 15, 2019). எனவே, ஏற்கெனவே ஜாவா பைக்கை புக் செய்திருப்பவர்கள் அல்லது அக்டோபர் 22,2019 -க்குள்ளாக ஜாவாவை புக்கிங் செய்பவர்கள், Lucky Draw-வில் பங்குபெற தகுதிபெறுவார்கள். இதில் வெற்றிபெறுபவர்கள், உடனடியாக லிமிடெட் எடிஷன் பைக்கைப் பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை பழைய பைக்கை அங்கேயே எக்ஸ்சேஞ்ச் செய்ய விரும்பினால், Mahindra First Choice Wheels வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது ப்ளஸ். பலவகை ஃபைனான்ஸ் வசதியும் வழங்கப்படுகிறது.

1929-ம் ஆண்டில் வெளிவந்த ஜாவா 500 OHV பைக்கை போற்றும் வகையில், Red-Ivory கலர் காம்பினேஷனில் இந்த ‘90th Anniversary Edition’ மாடல் வந்திருக்கிறது. இந்த பைக்குகளில், தனிப்பட்ட முறையிலான நம்பர் இருக்கும் என்பதுடன், ‘90th Anniversary Edition’ லோகோ பெட்ரோல் டேங்க்கிலும் இடம்பெற்றிருக்கும். மற்றபடி இந்த பைக்கில் இருக்கும் 293சிசி, DOHC, 4 வால்வ், லிக்விட் கூல்டு, Fi இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி, வழக்கமான ஜாவா போலவே 27bhp பவர் மற்றும் 2.8kgm டார்க்கையே வெளிப்படுத்துகிறது. இதன் சென்னை ஆன்ரோடு விலை - 2,05,000 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

90th Anniversary Edition
90th Anniversary Edition
Jawa India

இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஜாவா நிறுவனம் தனது வலைதளத்தில் ‘Delivery Estimator’ வசதியைச் சேர்த்திருந்தது தெரிந்ததே. இதனால் கடந்த டிசம்பர் 25, 2018-ம் தேதிக்கு முன்பு பைக்கை புக் செய்தவர்கள், தமது டெலிவரி தேதியைத் தெரிந்துகொள்வதற்கு இது பயனுள்ளதாக இருக்கும். இப்படி வெயிட்டிங் பீரியட் அதிகமாக இருப்பதால், பீதாம்பூரில் அமைந்திருக்கும் தனது பைக் தொழிற்சாலையின் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில் ஜாவா தற்போது ஈடுபட்டிருக்கிறது. ஆனால், Perak பற்றி எந்த அதிகாரபூர்வமான அறிவிப்பும் இதுவரை வரவில்லை!