Published:Updated:

சத்தமே இல்லாமல் சந்தைக்கு வந்த கியா செல்ட்டோஸின் டாப் வேரியன்ட் - என்ன ஸ்பெஷல்?

ரஞ்சித் ரூஸோ

GT லைனில் இப்போது டீசல் ஆட்டோமேடிக் வேரியன்ட்டைக் கொடுத்துள்ளது கியா.

கியா செல்ட்டோஸ் (Seltos)
கியா செல்ட்டோஸ் (Seltos) ( Kia Motors )

கியா மோட்டார்ஸ் இந்தியா, சத்தமே இல்லாமல் செல்ட்டோஸின் இரண்டு புதிய வேரியன்ட்டுகளை விற்பனைக்குக் கொண்டுவந்துவிட்டது. ஏற்கெனவே 16 வேரியன்ட்கள் இருந்த நிலையில், இந்த இரண்டு வேரியன்ட்டுகளையும் சேர்த்து இப்போது மொத்தம் 18 வேரியன்ட்டாக செல்ட்டோஸ் விற்பனையாகும்.

செல்ட்டோஸ் GTX+ சில்வர்
செல்ட்டோஸ் GTX+ சில்வர்
autocarindia

ஸ்போர்ட்டியான GT லைன், வசதிகள் அதிகமான HT லைன் என இரண்டு பிரிவாக விற்பனையில் இருக்கும் செல்ட்டோஸின் GT லைனில், பெட்ரோல் இன்ஜின் இல்லை என்ற குறையை புது GTX+ வேரியன்ட் மூலம் தீர்த்துவிட்டது கியா.

இந்த வேரியன்ட்டில், 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் + 7 ஸ்பீடு டூயல் க்ளட்ச் கியர்பாக்ஸ் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் + 6 ஸ்பீடு டார்க் கன்வர்டர் கியர் பாக்ஸ் என இரண்டு ஆப்ஷன்கள் உண்டு. பெட்ரோல் இன்ஜின் வேரியன்ட் ரூ.16.99 லட்சம் எனும் எக்ஸ்ஷோரூம் விலைக்கும், டீசல் வேரியன்ட் ரூ.15.99 லட்சம் எனும் எக்ஸ்ஷோரூம் விலைக்கும் விற்பனைக்கு வந்துள்ளன. புதிய GTX+ பெட்ரோல் மற்றும் டீசல் வேரியன்ட்கள், இதுவரை டாப் வேரியன்ட்டாக இருக்கும் GTX பெட்ரோல் DCT மற்றும் HTX+ AT வேரியன்ட்டுகளை விட ரூ.1 லட்சம் விலை அதிகம். 

இந்த 1 லட்ச ரூபாய் கூடுதல் விலைக்கு சன்ரூஃப், வென்ட்டிலேட்டட் சீட், போஸ் சவுண்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, முன்பக்க பார்க்கிங் சென்சார், மற்றும் லெதர் போன்ற சீட்டுகள் வருகின்றன. 6 காற்றுப்பைகள், மழையில் ஆட்டோமேடிக்காக வேலைசெய்யும் வைப்பர்கள், 8.0 இன்ச் ஹெட்ஸ் அப் டிஸ்பிளே போன்ற வசதிகள் ஸ்டாண்டர்டாக வருகின்றன. இதுவரை டர்போ பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸில் மட்டுமே வந்துகொண்டிருந்த டாப் வேரியன்ட் இப்போது ஆட்டோமேடிக் கியர்பாக்ஸிலும் வருகிறது. இந்த கார்களுக்கான முன்பதிவுகள் ஏற்கெனவே தொடங்கிவிட்ட நிலையில், கார்கள் அடுத்த மாதம் முதல் டெலிவரி செய்யப்படலாம்.