Published:Updated:

ஆஸ்திரேலியா கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் வாங்கிய செல்ட்டோஸ்!

சமீபத்திய ஆஸ்திரேலியா Ncap டெஸ்ட்டில் 5 ஸ்டார் வாங்கியுள்ளது கியா செல்ட்டோஸ். இந்திய காரும் அதே அளவு பாதுகாப்பில் இருக்கிறதா?

ANCAP கிராஷ் டெஸ்ட்
ANCAP கிராஷ் டெஸ்ட்

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வந்த செல்ட்டோஸ் கியா நிறுவனத்துக்கு மிகவும் முக்கியமான காராகப் பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே டாப் 10 விற்பனை பட்டியலில் வந்துவிட்ட இந்தக் கார் இப்போது பாதுகாப்பான கார்கள் பட்டியலிலும் இணைந்துவிட்டது.

வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் விற்பனையாகும் இந்தக் கார் ஆஸ்திரேலியா NCAP கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் வாங்கி பாதுகாப்பான கார் என நிரூபித்துள்ளது. கியாவின் சிறிய எஸ்யூவியான இதில் அனைத்து வேரியன்ட்டிலும் 6 ஏர்பேக், ஏபிஎஸ், தானியங்கி அவசரக்கால பிரேக், லேன் கீப் அசிஸ்ட், லேன் வார்னிங், டயர்பிரஷர் மானிட்டர் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன. விலை உயர்ந்த வேரியன்ட்டுகளில் HUD டிஸ்ப்ளேகூட இருக்கின்றன.

கியா செல்ட்டோஸ்
கியா செல்ட்டோஸ்
NCAP

அனைத்து செல்ட்டோஸ்க்கு இந்தப் பாதுகாப்பு அம்சங்கள் பெரியவர்கள் பாதுகாப்பில் 85 சதவிகிதமும், குழந்தைகள் பாதுகாப்பில் 83 சதவிகிதமும், பெடஸ்ட்ரியன் பாதுகாப்பில் 61 சதவிகிதமும் பெற்றுள்ளது. சாலையில் பாதுகாப்பாகப் பயணிக்க ஓட்டுநருக்கு உதவும் வசதிகளைக் கொடுத்ததற்காக இந்தக் கார் 70 சதவிகிதம் பாதுகாப்பானது என்று மதிப்பிட்டுள்ளார்கள்.

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் செய்யப்பட்ட கார் கொரியாவில் இருந்து ஏற்றுமதியாகும் கார். இந்தியாவில் உற்பத்தியாகும் காரில் ரேடார் பயன்படுத்தும் வசதிகளான ஆட்டோமேட்டிக் பிரேக் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் போன்றவை கிடையாது. அதுமட்டுமல்ல, இந்தியாவில் விலை குறைவான வேரியன்ட்டில் இரண்டு ஏர்பேக், ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் பிரேக் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார் மட்டுமே ஸ்டாண்டர்டு வசதி.

கியா செல்ட்டோஸ்
கியா செல்ட்டோஸ்

குளோபல் NCAP கிராஷ் டெஸ்ட்டைவிட ஆஸ்திரேலியாவின் கிராஷ் டெஸ்ட் கடினமானது என்பார்கள். குறைவான பாதுகாப்பு வசதிகள் இருந்தாலும் திடமான பாடி கட்டுமானம் இருப்பதால் கியா செல்ட்டோஸ் GNCAP டெஸ்ட்டிலும் 5 ஸ்டார் வாங்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

இந்தியாவில் விற்பனையாகும் செல்ட்டோஸ் இரண்டு பெட்ரோல், ஒரு டீசல் என மூன்று இன்ஜின் ஆப்ஷன்களில் வருகிறது. ஆஸ்திரேலியாவில் இந்தக் கார் 150bhp பவர் தரும் 2.0 லிட்டர் பெட்ரோல் அல்லது 177bhp பவர் தரும் 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ற இரண்டு ஆப்ஷன்களில் மட்டுமே வருகிறது.