Published:Updated:

க்ரெட்டாவை ஓவர்டேக் செய்த செல்டோஸ் விற்பனை - பிரேக்டவுனில் டாடா ஹேரியர்!

ரஞ்சித் ரூஸோ

டாடாவைவிட குறைவாக நிஸான் 172 கிக்ஸ் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

கியா செல்ட்டோஸ்
கியா செல்ட்டோஸ் ( ஜெ.தி.துளசிதரன் )

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாப் 10 கார்களின் பட்டியலில், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து இடம்பெற்ற ஒரே மிட்-சைஸ் எஸ்யூவி ஹூண்டாய் க்ரெட்டா. ஆட்டோமொபைல் துறையின் மந்தநிலை மற்றும் புதிய கார்களின் வருகையால் க்ரெட்டாவின் விற்பனை ஆகஸ்ட் மாதம் 42 சதவிகிதம் வரை சரிந்துவிட்டது. ஆனால், இந்த வேளையில் க்ரெட்டாவை ஓவர்டேக் செய்து அதிகம் விற்பனையாகியுள்ளது கியாவின் செல்டோஸ்.

கியா செல்ட்டோஸ் - க்ரெட்டாவுக்கு  இன்னொரு போட்டி!
ஹூண்டாய் க்ரெட்டா
ஹூண்டாய் க்ரெட்டா

ஆகஸ்ட் மாதம் ஹூண்டாய் 6,001 க்ரெட்டா கார்களை விற்பனை செய்துள்ளது. கியா, 6,236 செல்ட்டோஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. செல்ட்டோஸூக்கு முன்பே விற்பனைக்கு வந்த கனெக்டட் காரான எம்ஜி ஹெக்டர் 2,018 யூனிட் கார்களை விற்பனை செய்துள்ளது. ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகைக்குப் பின்பு டஸ்ட்டரின் விற்பனை 58 சதவிகிதம் அதிகரித்து 967 கார்களை விற்பனையாகியுள்ளன. எதிர்பார்த்ததைவிட ஹேரியரின் விற்பனை ரொம்பவே குறைவு. வெறும் 635 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன.

Vikatan

ஸ்கார்ப்பியோவின் விற்பனை 21 சதவிகிதம் வரை குறைந்துவிட்டது. ஆனாலும், நல்ல எண்ணிக்கையிலேயே (2862 யூனிட்) ஸ்கார்ப்பியோ விற்பனை செய்துள்ளது மஹிந்திரா. நிஸான் கிக்ஸின் செல்ஃப் எடுக்கவில்லை. ஒரு மாதத்தில் வெறும் 172 கிக்ஸ் மட்டுமே விற்பனையாகியுள்ளன.

ரெனோ டஸ்ட்டர்
ரெனோ டஸ்ட்டர்

ஆட்டோமொபைல் துறையில் மந்தநிலை நிலவும்போதும் செல்ட்டோஸ் மற்றும் எம்ஜி கார்களின் விற்பனை நல்ல நிலையில் இருக்கின்றன. விலை குறைப்பு நடவடிக்கைகளும் உற்சாகமளிக்கும் தள்ளுபடிகளும், புதிய தொழில்நுட்பங்களோடு வரும் ஸ்டைலான கார்களும் இத்துறையை மீண்டும் உயிர்ப்பிக்கும் எனத் தெரிகிறது.