Published:Updated:

250, 390, 790... கேடிஎம்-மின் அட்வென்ச்சர் மும்மூர்த்திகள்!

அட்வென்ச்சர் பைக்
அட்வென்ச்சர் பைக் ( KTM India )

தற்போது ADV ஆர்வலர்களின் நீண்ட காலக் காத்திருப்பின் பலனாக, புத்தாண்டு பரிசாக 390 அட்வென்ச்சர் பைக்கை அந்த நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வரவிருக்கிறது.

கவாஸாகி Enduro 100, பிஎம்டபிள்யூ F650 Funduro, ஹீரோ இம்பல்ஸ், ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் என விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் Mass Market அட்வென்ச்சர் பைக்ஸ் இந்தியாவில் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. என்றாலும், அந்த ADV பைக்குகளின் எண்ணிக்கை போலவே, இந்தியாவில் அதற்கான ரசிகர் வட்டமும் நாளடைவில் வளர்ந்திருக்கிறது என்பதே உண்மை. இதனாலேயே அறிமுகமான புதிதில் பல்வேறு குறைபாடுகளுடன் இருந்த ஹிமாலயனை, BS-4 அவதாரத்தில் ஃப்யூல் இன்ஜெக்‌ஷனுடன் ராயல் என்ஃபீல்டு முழுக்க மாற்றியமைத்ததைப் பார்க்கமுடிந்தது. மேலும், இம்பல்ஸ் பைக்கின் பவர் போதவில்லை (150சிசி இன்ஜின்) என்பதற்காக, அதில் கரிஸ்மாவின் 220சிசி இன்ஜினைப் பொருத்தியவர்கள் ஏராளம்!

390 Adventure
390 Adventure
Autocar India

இதனாலேயே எக்ஸ்-பல்ஸ் என்ற பெயரில் 200சிசி இன்ஜினுடன் கூடிய ADV பைக்கை ஹீரோ அறிமுகப்படுத்தியது தெரிந்ததே. இந்தச் சூழலில்தான் டியூக் 390 நம் நாட்டில் வந்தபோது, அதை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட அட்வென்ச்சர் பைக்கைக் கேடிஎம் களமிறக்கப்போவதாகப் பேச்சுகள் எழுந்தன. தற்போது ADV ஆர்வலர்களின் நீண்ட காலக் காத்திருப்பின் பலனாக, புத்தாண்டு பரிசாக 390 அட்வென்ச்சர் பைக்கை அந்த நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வரவிருக்கிறது. இதனுடன் அந்த பைக்கின் 250சிசி மற்றும் 790சிசி வெர்ஷன்களும் பின்னாளில் வெளிவரும் எனத் தகவல் வந்திருக்கிறது!

390 அட்வென்ச்சர்

390 Adventure
390 Adventure
Autocar India

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் EICMA 2019-ல் காட்சிப்படுத்தப்பட்ட இந்த ADV பைக், அடுத்தபடியாக IBW 2019-லும் காட்சிக்கு வைக்கப்பட்டது. உத்தேசமாக 3-3.2 லட்ச ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலையில் இது இங்கே கிடைக்கலாம். டியூக் 390 போலவே, இதிலும் 44bhp@9,000rpm மற்றும் 3.7kgm@7,000rpm டார்க்கைத் தரும் 373.2சிசி இன்ஜினே தொடர்கிறது. ஆனால் இது BS-6 அவதாரத்தில், பவர்/டார்க்கில் எந்த மாறுதலும் இல்லாமல் வந்திருப்பது ப்ளஸ். நேக்கட் ஸ்ட்ரீட் பைக்குடன் ஒப்பிடும்போது, அட்வென்ச்சர் பைக்கின் செயின் ஸ்ப்ராக்கெட் - கியர் ரேஷியோ - இன்ஜின் டியூனிங் ஆகியவற்றில் எந்த வித்தியாசமும் இல்லை. மற்றபடி Switchable டிராக்‌ஷன் கன்ட்ரோல், Bi-Directional Quickshifter ஆகிய வசதிகள் வழங்கப்பட்டிருப்பது செம!

ஸ்போக் வீல்களில் Metzeler Tourance டியூப்லெஸ் டயர்கள் (முன்: 100/90-19, பின்: 130/80-17) பொருத்தப்பட்டுள்ளன. சஸ்பென்ஷனைப் பொறுத்தவரை 43மிமீ USD - மோனோஷாக் இருந்தாலும், பின்பக்க சஸ்பென்ஷனுக்கு மட்டுமே PreLoad - Rebound அட்ஜஸ்ட்மென்ட் இருக்கிறது (177மிமீ டிராவல்).

ஆனால் சர்வதேச மாடலைப் போலவே, முன்பக்க சஸ்பென்ஷனுக்கு Compression - Rebound அட்ஜஸ்ட்மென்ட் இல்லாதது நெருடல் (170மிமீ டிராவல்). இதில் Continental TKC 70 டயர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. டியூக் 390-ன் சஸ்பென்ஷன் டிராவல், முறையே 142மிமீ/150மிமீ என்றளவில் உள்ளது. சஸ்பென்ஷன் தவிர Steering Head Angle மற்றும் Trail ஆகியவற்றிலும் மாற்றம் தெரிகிறது.

390 Adventure
390 Adventure
KTM India

டியூக் 390-ல் இவை 65 டிகிரி மற்றும் 95மிமீ என்றளவில் இருந்தால், 390 அட்வென்ச்சரில் இவை 63.5 டிகிரி மற்றும் 98மிமீ என உள்ளது. இதனால் பைக்கின் வீல்பேஸும் 1,430மிமீ ஆக அதிகரித்திருக்கிறது (டியூக் 390 - 1,357மிமீ). 200மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 855மிமீ சீட் உயரம் ஆகியவை, இது ADV என்பதை உணர்த்தி விடுகிறது. டியூக் 390 விட 390 அட்வென்ச்சரின் பெட்ரோல் டேங்க், ஒரு லிட்டர் பெரிதாகிவிட்டது (14.5 லிட்டர்). இப்படி முன்னே சொன்ன மாற்றங்களால், 390 அட்வென்ச்சரின் Dry Weight, டியூக் 390 பைக்கைவிட 9 கிலோ அதிகமாக உள்ளது (158 கிலோ). இந்த ADV-ன் புக்கிங்கை, கேடிஎம் டீலர்கள் தொடங்கிவிட்டார்கள் - 20,000 ரூபாய் அதற்காகச் செலுத்த வேண்டும். BS-6 டியூக் 390-ன் விலை, BS-4 விடச் சுமார் 15,000 ரூபாய் அதிகமாக இருக்கலாம்.

790 அட்வென்ச்சர்

790 Adventure
790 Adventure
Autocar India

முன்னே சொன்ன பைக்கைத் தவிர, தடாலடியாக 790 அட்வென்ச்சர் பைக்கையும் IBW 2019-ல் காட்டியது கேடிஎம். வெளிநாடுகளில் இது ஸ்டாண்டர்டு மற்றும் R எனும் இரு வேரியன்ட்களில் கிடைக்கிறது. இதில் 790 டியூக்கிலிருக்கும் அதே 799சிசி - பேரலல் ட்வின் இன்ஜின்தான் உள்ளது. என்றாலும் இது குறைவான 94bhp பவர் மற்றும் 8.8kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது (டியூக் 790-ல் 105bhp பவர் - 8.7kgm டார்க் உள்ளது). பைக்கின் ஸ்டாண்டர்டு மற்றும் R வேரியன்ட்களில் 21 இன்ச் முன்பக்க வீல், பின்பக்க மோனோஷாக், பிரேக்கிங் சிஸ்டம் (முன்னே: 320மிமீ இரட்டை டிஸ்க், பின்னே: 260மிமீ டிஸ்க்) ஆகியவை ஒன்றுதான். ஆனால், ஸ்டாண்டர்டு மாடலில் 43மிமீ USD இருந்தால், R மாடலில் 240மிமீ டிராவலுடன் கூடிய 48மிமீ WP XPLOR ஃபோர்க் உள்ளது. இரண்டுமே 200மிமீ சஸ்பென்ஷன் டிராவலைக் கொண்டுள்ளன. 233மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் - 20 லிட்டர் Under-Slung பெட்ரோல் டேங்க் - 850மிமீ சீட் உயரம் கொண்ட இந்த 790 அட்வென்ச்சரின் Dry Weight 189 கிலோ.

790 Adventure
790 Adventure
Autocar India

250 அட்வென்ச்சர்

250 Adventure
250 Adventure
KTM India
`யோவ், ஸ்டேசனில் கொண்டுபோய் விடு!’ - பைக் திருட முயன்ற இளம்பெண்ணின் சிசிடிவி வீடியோ அதிர்ச்சி

கேடிஎம்மின் என்ட்ரி லெவல் அட்வென்ச்சர் பைக்காக, 250 அட்வென்ச்சர் பொசிஷன் செய்யப்படவிருக்கிறது. இதன் ஸ்டீல் ட்ரெல்லிஸ் ஃப்ரேம் மற்றும் சப் ஃபிரேம், பாடி பேனல்கள், ரேடியேட்டர், பெட்ரோல் டேங்க் & Tank Extension, Belly Pan, பின்பகுதி, அலாய் வீல்கள், TFT டிஸ்பிளே ஆகியவை அப்படியே 390 அட்வென்ச்சர் பைக்கிலிருந்து பெறப்பட்டுள்ளன. ஆனால் LED ஹெட்லைட்டுக்குப் பதிலாக வழக்கமான ஹாலோஜன் ஹெட்லைட் மற்றும் 250சிசி கிராஃபிக்ஸ் என வித்தியாசம் தென்படுகிறது. இதிலும் 100/90-19 - 130/80-17 டயர்களே தொடர்ந்தாலும், அவை MRF Mogrip Meteor FM2 ஆக மாறியுள்ளன. மேலும், 390 அட்வென்ச்சருடன் ஒப்பிட்டால், இங்கிருக்கும் WP Apex சஸ்பென்ஷனை அட்ஜஸ்ட் செய்யமுடியாது (முன்: 43மிமீ USD - 170மிமீ டிராவல், பின்: மோனோஷாக் - 177மிமீ டிராவல்).

2020 ஹீரோ HF டீலக்ஸ் - நாட்டின் முதல் 100சிசி BS-6 பைக் இதுதான்!
390 Adventure
390 Adventure
Autocar India

என்றாலும், இதன் சஸ்பென்ஷன் டிராவல் அதைப் போலவே உள்ளது. மற்றபடி ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் தவிர்த்து, பைக்கிலிருக்கும் ஒரே எலெக்ட்ரிக் சாதனம் Off-Road ABSதான். இதனால் பின்பக்க வீலைத் தேவைப்பட்டால் Lock செய்யமுடியும். 250 டியூக்கில் இருக்கும் அதே 248.8சிசி இன்ஜின்தான், 250 அட்வென்ச்சரிலும் இடம்பெற்றுள்ளது. எனவே, அது வெளிப்படுத்தும் 30bhp பவர் மற்றும் 2.4kgm டார்க்கில் நோ சேஞ்ச் எனலாம். கூடவே கியரிங் - டியூனிங் - ஸ்ப்ராக்கெட்டும் அப்படியே தொடரலாம். உத்தேசமாக 2.3-2.5 லட்ச ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலையில் வரப்போகும் இந்த அட்வென்ச்சர் பைக், ராயல் என்ஃபீல்டின் ஹிமாலயன் பைக்குக்குப் போட்டியாக இந்த ஆண்டில் நடுவே வரலாம். கேடிஎம்-மின் இந்தோனேசிய வலைதளத்தில் 250 அட்வென்ச்சர் பைக் பட்டியலிடப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு