Published:Updated:

டெஸ்ட்டிங்கில் மஹிந்திராவின் எலெக்ட்ரிக் Quadricycle - Atom!

Atom ( MV Reader )

கான்செப்ட்டில் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், டச் ஸ்க்ரீன் சிஸ்டம், ரோட்டரி கியர் செலெக்ட்டர், ஏசி, பவர் ஸ்டீயரிங், LED லைட்டிங், பீஜ் நிறக் கேபின் எனப் பல வசதிகள் இருந்தன.

டெஸ்ட்டிங்கில் மஹிந்திராவின் எலெக்ட்ரிக் Quadricycle - Atom!

கான்செப்ட்டில் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், டச் ஸ்க்ரீன் சிஸ்டம், ரோட்டரி கியர் செலெக்ட்டர், ஏசி, பவர் ஸ்டீயரிங், LED லைட்டிங், பீஜ் நிறக் கேபின் எனப் பல வசதிகள் இருந்தன.

Published:Updated:
Atom ( MV Reader )

நாடெங்கும் BS-6 மாசு விதிகள் ஏப்ரல் 1, 2020 அமலுக்கு வரும் சூழலில், எலெக்ட்ரிக் டூ-வீலர் & கார் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதையும் ஆங்காங்கே பார்க்க முடிகிறது. இந்த நிலையில், பல செக்மென்ன்டுகளில், தான் களமிறக்கப்போகும் எலெக்ட்ரிக் வாகனங்களைப் பற்றி சமீபத்தில் அறிவித்திருக்கிறது மஹிந்திரா. அதன்படி, ஏப்ரல் 2020 - ஜூன் 2020 காலகட்டத்தில், உத்தேசமாக 9 லட்ச ரூபாய் விலையில் eKUV100 காரை முதலில் இந்த நிறுவனம் விற்பனைக்குக் கொண்டுவர உள்ளது. 'இந்தியாவின் விலைகுறைவான EV-கார்' என்ற பெருமையுடன் வரப்போகும் இந்த காம்பேக்ட் ஹேட்ச்பேக், சிங்கிள் சார்ஜில் 130-150 கி.மீ வரை செல்லும் எனத் தகவல் வந்திருக்கிறது.

Atom
Atom
MV Reader

டாக்ஸி மார்க்கெட்டை மனதில்வைத்து eKUV100 தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதால், இதில் இருக்கும் 54.4bhp எலெக்ட்ரிக் மோட்டார் - Single ஸ்பீடு கியர்பாக்ஸ் - 15.9kWh பேட்டரி Pack போதுமானது எனலாம். மேலும், வழக்கமான AC சார்ஜர் தவிர (345 நிமிடம்), DC ஃபாஸ்ட் சார்ஜிங் (55 நிமிடம்) வசதி உண்டு. மாருதி சுஸூகி வேகன்-ஆர் EV மற்றும் ஹூண்டாயின் பட்ஜெட் EV உடன், eKUV100 போட்டிபோடும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்ட எலெக்ட்ரிக் Quadricycle கான்செப்ட்டான Atom, 2020-ம் ஆண்டில் (ஜூலை - செப்டம்பர்) இங்கே அறிமுகமாக இருக்கிறது. 4 சக்கர வாகனமான இது, நகர்ப்புறப் பயன்பாட்டை மனத்தில்வைத்து வடிவமைக்கப்பட்டிருந்தது. தற்போது, தீவிரமான டெஸ்ட்டிங்கில் இருக்கும் இந்த வாகனத்தை, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மோ.வி வாசகரான பா. ஜெயவேல், செங்கல்பட்டில் படம்பிடித்திருக்கிறார். ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, முன்பக்கத்தில் டிரைவர் இருக்கை மட்டுமே இருப்பது தெரிகிறது. அதற்கு அருகேயுள்ள இடம் காலியாக உள்ளது. இதற்கு, முன்பக்கக் கதவின் உள்பக்கமாக ஸ்பேர் வீல் பொருத்தப்பட்டிருப்பதே காரணம்.

Atom Quadricycle
Atom Quadricycle
Mahindra

பின்பக்க பெஞ்ச் சீட்டில், மூன்று பேர் உட்காரக்கூடிய அளவில் இடவசதி இருக்கிறது. கான்செப்ட்டில் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், டச் ஸ்க்ரீன் சிஸ்டம், ரோட்டரி கியர் செலெக்ட்டர், ஏசி, பவர் ஸ்டீயரிங், LED லைட்டிங் (ஹெட்லைட் & டெயில் லைட்), பீஜ் நிறக் கேபின் எனப் பல வசதிகள் இருந்தன. மேலும், வாகனத்தின் ஏரோடைனமிக்ஸ் திறனை அதிகரிக்கும் விதமாக, ரியர் வியூ மிரர்களுக்குப் பதில் ரியர் வியூ கேமரா இருபுறமும் இருந்தன. தவிர, வித்தியாசமான தோற்றத்தில் சக்கரங்கள், 3 கதவுகள் (வலதுபுறம் இரண்டு, இடதுபுறம் ஒன்று) ஆகியவற்றை Atom கொண்டிருந்தது தெரிந்ததே.

ஆனால், மக்கள் பயன்பாட்டுக்கு வரப்போகும் வர்த்தக ரீதியான இந்த எலெக்ட்ரிக் Quadricycle-ன் விலையை கட்டுக்குள்வைக்க, இதில் எத்தனை சிறப்பம்சங்கள் இடம்பெறும் என்பதில் தெளிவில்லை. இதில், டிரைவரின் பக்கம் வழக்கமான ரியர்வியூ மிரரைப் பார்க்க முடிந்தது. மேலும், எக்ஸாஸ்ட் பைப் இல்லாததால், இது எலெக்ட்ரிக் செட்-அப்பைக் கொண்டிருப்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. மற்றபடி, பெரிய ஒற்றை வைப்பர், 13/14 இன்ச் ஸ்டீல் வீல், வழக்கமான ஹெட்லைட் & டெயில் லைட், ஹெட்ரெஸ்ட் இல்லாத இருக்கைகளும் இடம்பெற்றிருந்தன. Clean, Connected, Convenient எனும் கோட்பாடுகளின்படி தயாரிக்கப்பட்டுள்ள Atom, அனேகமாக 48kw எலெக்ட்ரிக் மோட்டார் கொண்டிருக்கலாம்.

Atom Quadricycle
Atom Quadricycle
Mahindra

ஆனால், Quadricycle விதிமுறைகளைக் கருத்தில்கொண்டால், இதில் 15kw எலெக்ட்ரிக் மோட்டாரே இடம்பெறலாம் என்பதுடன், டாப் ஸ்பீடும் 70 கி.மீ என்றளவில்தான் இருக்கும். Battery Swapping, On Board Connectivity System போன்ற வசதிகளும் இதிலிருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. இதுபோன்ற Low Voltage வாகனங்களைக் கட்டமைப்பதற்காக, பெங்களூரில் இருக்கும் தனது தொழிற்சாலையில் 400 கோடி ரூபாயை மஹிந்திரா முதலீடு செய்திருக்கிறது. பெட்ரோல் மற்றும் CNG-ல் இயங்கும் பஜாஜின் Quadricycle வகை வாகனமான Qute வாகனத்துடன் Atom போட்டிபோடும் என எதிர்பார்க்கலாம். இதன் Production வெர்ஷனை, டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2020-ல் மஹிந்திரா காட்சிப்படுத்துவதற்கு வாய்ப்பிருக்கிறது.

இந்த வாகனத்துக்குப் பிறகு, XUV300 EV காரை இந்த நிறுவனம் 2021-ல் வெளிக்கொண்டு வர முடிவெடுத்துள்ளது. தனிநபர் பயன்பாட்டுக்கு வரப்போகும் இந்த எலெக்ட்ரிக் காம்பேக்ட் எஸ்யூவி (S 210), சிங்கிள் சார்ஜில் 300 கி.மீட்டருக்கும் அதிகமான தூரம் செல்லும் என்பது பெரிய ப்ளஸ். இதற்கெனப் பிரத்யேகமாக, கொரியாவைச் சேர்ந்த LG Chem நிறுவனம் தயாரித்திருக்கும் 40kWh பேட்டரி Pack, அந்த அதிக ரேஞ்ச்சுக்குத் துணைநிற்கும்.

Atom
Atom
MV Reader

டாடாவின் எலெக்ட்ரிக் நெக்ஸான் தவிர, கோனா EV மற்றும் MG eZS ஆகிய எலெக்ட்ரிக் எஸ்யூவிகளுக்கும் XUV300 EV போட்டியாக வரலாம். ஆனால், விலைதான் இதன் வெற்றியைத் தீர்மானிக்கும்!