Published:Updated:

பிஎஸ்-6 மாற்றத்தால் பிஎஸ்-4 வாகனங்ளைத் தள்ளுபடியில் விற்கும் மஹிந்திரா!

ஏப்ரல் 2020 முதல் பிஎஸ்-6 வாகனங்கள் கட்டாயமாவதால், சிறிய கமர்ஷியல் வாகனங்களை விற்க முயல்கிறது மஹிந்திரா.

மஹிந்திரா பொலேரோ பிக்அப்
மஹிந்திரா பொலேரோ பிக்அப்

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம், தனது சிறிய கமர்ஷியல் வாகனங்களுக்கு ரூ.20,000 முதல் ரூ.80,000 வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லை, பிஎஸ்-2, பிஎஸ்-3 வாகனம் வைத்திருப்பவர்கள், தங்களது வாகனங்களை எக்ஸ்சேஞ்ச் செய்தால், அதற்குத் தனி தள்ளுபடி கொடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், எல்லா வாகனங்களுக்கும் பிஎஸ்-6 மாசுக் கட்டுப்பாடுகள் கட்டாயமாவதால், அனைத்து வாகன உற்பத்தியாளர்களும் தங்களது வாகனங்களை பிஎஸ்-6 ஆக மாற்றும் முயற்சியில் இருக்கிறார்கள். கார் மற்றும் பைக் சந்தையில் ஏற்கெனவே பல பிஎஸ்-6 வாகனங்கள் விற்பனைக்கு வந்துவிட்ட நிலையில், கமர்ஷியல் வாகன உற்பத்தியாளர்களும் கொஞ்சம் கொஞ்சமாகத் தங்களது வாகனங்களைப் புதிய கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப மாற்றிவருகிறார்கள். இதனால், பழைய பிஎஸ்-4 மாடல்களுக்கு சில நிறுவனங்கள் கணிசமான தள்ளுபடிகள் தந்துவருகின்றன.

மஹிந்திரா ஜீத்தோ ப்ளஸ்
மஹிந்திரா ஜீத்தோ ப்ளஸ்

மஹிந்திரா நிறுவனம், தனது சிறிய கமர்ஷியல் வாகனங்களின் பிஎஸ்-4 இன்ஜின் மாடல்கள் மொத்தத்துக்கும் தள்ளுபடியை அறிவித்திருக்கிறது. டிசம்பர் 31 வரை இருக்கும் இந்த தள்ளுபடியில், பொலேரோ பிக்அப், மாக்ஸி ட்ரக், கேம்ப்பர், ஜீத்தோ லோடு, ஆல்ஃபா என எல்லா மாடல்களும் அடங்கும். இதன்மூலம், மஹிந்திராவின் சிறிய கமர்ஷியல் வாகனங்களை மிகவும் குறைவான விலையில் வாங்கலாம்.